பொங்கல் மற்றும் புத்தாண்டு தகவல்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 28 Second

*உத்தரப்பிரதேசத்தில் பொங்கல் திருநாளன்று வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு, வெற்றிலை பாக்குடன் கரும்புத் துண்டும் தருவது வழக்கம்.

*மேற்கு வங்கத்தில் பொங்கல் பண்டிகையை ‘சா சாகர் மேளா’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். சாகர் என்றால் கடல். சாசாகர் என்றால் வற்றாத கடல். அன்று கங்கை நதியில் நீராடி கும்மியடித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

*குஜராத்தில் பொங்கல் திருநாளை புனித தினமாகக் கொண்டாடுகிறார்கள். புதுப் பாத்திரங்கள் வாங்கி அன்று பயன்படுத்துவார்கள்.

*மகாராஷ்டிரத்தில் சர்க்கரைப் பொங்கலில் பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் கலந்து இறைவனுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம்.

*கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் ‘சங்கராந்தி’ என்று கொண்டாடப்படுகிறது.

*புத்தாண்டு தினத்தை கிறிஸ்துவ தேவாலயங்களில் கொண்டாடுவது கி.பி.487ம் ஆண்டில்தான் அறிமுகமானது.

*நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை அடிப்படையாக வைத்தே ஆரம்பத்தில் அதாவது சுமார் 6000 வருடங்களுக்கு முன் நாட்கள் கணக்கிடப்பட்டன. அதுவே காலண்டர் உருவாகக் காரணமானது.

*ஜூலியஸ் சீஸர் கி.மு.46ல் ஜனவரியை முதல் மாதமாகக் கொண்டு காலண்டர் முறையை ஆரம்பித்தார்.

*இந்தியாவில் தபால் அலுவலகங்களில் மணியார்டர் செய்யும் முறை 1880 ஜனவரி முதல் தேதி தொடங்கியது.

*இந்தியாவில் சக ஆண்டை அடிப்படையாகக் கொண்டே நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

*ரோமானியர்கள் புத்தாண்டு அன்று வீடுகளை அலங்கரித்து விருந்துண்டு மகிழ்வார்கள். ரோமானியரின் காலத்தில் காலண்டரை ‘காலெண்ட்ஸி’ என்று அழைத்து வந்தார்கள்.

*விஸ்வாமித்ர முனிவரால் காயத்ரி மந்திரம் உருவாக்கப்பட்டது மகரசங்கராந்தி(பொங்கல் திருநாள்) அன்றுதான்.

*இங்கிலாந்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் திறந்த வெளியில் கூடி சூரிய வழிபாடு செய்கின்றனர்.

*கர்நாடக மாநிலம் ரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் சங்கராந்தி நாளன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

*ஜப்பானிலும், சீனாவிலும் சூரியனைப் பெண் தெய்வமாக வழிபடுகின்றனர். அவர்களின் மதமான ஷிண்டோ, சூரிய வழிபாடு செய்வதால் பாவங்களை போக்குகிறது, சூரியனே உலகின் ஆதாரம் என்று புகழ்கிறது. இங்கு ரோட்ஸ் தீவில் 105 அடி உயரத்தில் சூரிய பகவானுக்கு பிரமாண்ட சிலை உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேமிப்பு வழிகாட்டி-வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)
Next post உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத படம்!! (வீடியோ)