ஃபுல் ஸ்டாப்!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 10 Second

வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!
மின்னல் ஒளியே விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!

காணாமல் போகும் குழந்தைகள் பெரும்பாலும் குழந்தைத் தொழிலாளர்களாகவே மாற்றப்படுகின்றனர். பல விஷயங்களில் உலகில் முத லிடத்தை பிடிக்க போட்டி போடும் நாம், போட்டியில்லாமலே இந்த விஷயத்தில் முதலிடத்தில் உள்ளோம். 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1 கோடியே 26 லட்சத்து 66 ஆயிரத்து 377 குழந்தைகள் தொழிலாளர்களாக இருந்தனர். 2014ம் ஆண்டின் கணக்கெடுப்பிலோ மாநில சராசரியாக 4 லட்சம்குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர்.

வைரச் சுரங்கம், பட்டு வளர்ப்பு, டெக்ஸ்டைல்ஸ், பட்டாசுத் தொழில், கட்டுமானத் துறை, நிலக்கரிச் சுரங்கம், தொழிற்சாலைகள், காய்கறி கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர், துணிக்கடைகள் என்று சகல இடங்களிலும் குழந்தைப் பருவம் தொலைத்த குழந்தைகள் ஏராளம். குறிப்பாக… கொத்தடிமைகளாக உள்ள குழந்தைகள் ஆந்திர கல் குவாரிகளில்தான் அதிகம். உலகெங்கும் பலர் இந்த குழந்தைத் தொழில் ஒழிப்பு முறையை எதிர்த்து போராடி வருகின்றனர்.

பள்ளிக்கல்வி வழங்க வலியுறுத்தி துப்பாக்கிக் குண்டை தன்னுள் வாங்கிய மலாலா, குழந்தைத் தொழிலாளர்களுக்காக உயிரையே அர்ப்பணித்த பாகிஸ்தானின் 12 வயது சிறுவன் இக்பால் மாஷிஷ், இக்பாலின் மரணத்தின் தாக்கம் காரணமாக Free the Children அமைப்பை உருவாக்கி போராடும் கனடாவின் க்ரெய்க் கில்பர்க், குழந்தைத் தொழிலாளர்களுக்காகவே போராடும் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சமீபத்தில் ஒரு குறும்படம் வெளியானது. ஒரு தாய் தன் டீன் ஏஜ் மகனை நகரத்தில் பிரபல ஃபுட்பால் விளையாட்டு வீரரிடம் பயிற்சிக்கு அனுப்புகிறார். சேர்ந்த சில நாட்களிலேயே அந்தச் சிறுவன் பயிற்சிக்குச் செல்ல மறுக்கிறான். அவனை அங்கு அழைத்து செல்லும் தாய், ‘அங்கு சேர்க்க எவ்வளவு பணம் செலவானது, எத்தனை பெரிய வீரர் அவர், எவ்வளவு சிரமப்பட்டு அங்கு இடம் கிடைத்தது, நீ ஏன் போக மறுக்கிறாய்’ என்று மகனிடம் கேட்டபடியே கார் ஓட்டுகிறார்.

பின் சீட்டில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவனின் மனமோ, அவன் அங்கு செல்ல விரும்பாத காரணத்தை கார் சீட்டின் பின்புறம் வரைவதில் கவனம் செலுத்துகிறது. இறுதியில், ‘உங்கள் குழந்தை சொல்ல வருவதை காது கொடுத்து கேளுங்கள்’ என்ற வேண்டுகோளுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இவ்வாறு தெரிந்தவர்கள் மற்றும் சமூக அந்தஸ்தில் உயர்வாக உள்ளவர்களாலும் கூடத் துன்புறுத்தப்படுகிறது என்ற செய்தியுடன் கைலாஷ் சத்யார்த்தி வெளியிட்டிருக்கும் குறும் படமே இது (இப்படத்தைக் காண: Listen. Full Stop – YouTube).

குழந்தைத் தொழில், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றை எதிர்த்துப் போராட இந்தியர் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார் கைலாஷ் சத்யார்த்தி. சமீபத்தில் சமூக வலைத் தளங்களில் அவர் தொடங்கிய FULL STOP எனும் இயக்கம் மூலம் நாமும் நம் பங்கை அளிக்கலாம். கைலாஷ் சத்யார்த்தி மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷாவில் 1954 ஜனவரி 11 அன்று பிறந்தார்.

மின் பொறியியலாளரான கைலாஷ், 1990ல், ‘பச்பன் பச்சாவோ ஆந்தோலன்’ (குழந்தையைப் பாதுகாப்போம் இயக்கம்) அமைப்பை நிறுவி குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். கிட்டத்தட்ட 80 ஆயிரம் குழந்தைகள் இவரால் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல… உலக அளவில் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள், வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். நோபல் பரிசு பெறும் 7வது இந்தியர்(2014), அன்னை தெரசாவுக்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர், அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் ஆகிய பெருமைகளையும் பெற்றவர் கைலாஷ்.

அது என்ன FULL STOP?

குழந்தைகள் பாலியல் வன்முறையை எதிர்த்துத் தொடங்கப்பட்ட சமூக வலைத்தள இயக்கமே ஃபுல் ஸ்டாப். இது பல்வேறு வகைகளில் செயல்பட உள்ளது.

1. CHILD SEX ABUSE (CSA)

பாலியல் வன்முறை என்பது ஒரு முறை மட்டுமல்ல… தொடர்ந்தும் சில குழந்தைகளுக்கு நடைபெறுகிறது. குழந்தைகளுக்கு அறிமுகமானவர்களால் அதிகம் நடக்கிறது. அதிலும் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களால் தொடர்ச்சியாக நடக்கிறது.
‘பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தை அதை விரும்பி ஏற்கிறது’, ‘குழந்தையின் தவறுதான்’, ‘பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளுக்குப் பாதிப்பு குறைவு’, ‘பாதிக்கப்பட்ட ஆண் குழந்தைகள் பிற்காலத்தில் நல்ல ஆணாக வருவதில்லை’, ‘ஒரு பெண்ணால் ஒருஆண் குழந்தை பாதிக்கப்பட்டால் அது அந்தக் குழந்தையின் அதிர்ஷ்டமாகக் கருதுவான்’, ‘அப்படி இல்லாவிட்டால் அந்தப் பையனிடம்ஏதேனும் குறை’ உள்பட ஏராளமான தவறான கருத்துகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கப்படுகிறது.

2. CYBER BULLYING

எந்நேரமும் இணையத்துடன் வாழும் தொழில்நுட்ப யுகம் இது. ஃபேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ் அப் என்று எப்போதும் யாருடனும் தொடர்பில் இருக்க நேரிடுகிறது. அப்படி வரும் ஒரு செய்தி குழந்தையை குழப்பி, வருத்தப்பட செய்து, மன அழுத்தம் தந்து, எப்படி அதை எதிர்கொள்வது என்று குழப்ப வைக்கிறதா? அதுவே சைபர் புல்லியிங். சைபர் என்பது இணையத்தை குறிப்பது. இப்படி வரும் செய்திகளால் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் மிரட்சியும் ஏற்பட்டு கவனக்குறைவும் தேவையற்ற விளைவுகளும் ஏற்படும். ஆன்லைனில் வரும் செய்திகளை எப்படி எதிர்கொள்வதென கற்பித்தல் முக்கியம். இதனை BE SAFE என்று அழைக்கின்றனர்.

BE SAFE

B – Be aware of the methods your bully is using to harass you. என்ன மாதிரியான முறைகளில் துன்புறுத்தப்படுகிறீர்கள் எனஅறிந்திடுங்கள்.

E – Engage in activities that you enjoy and that keeps negative feelings at bay. எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விலகி இருக்க பழகுங்கள்.

S – Save evidence of abusive messages and report them to the police.அப்படி ஏதேனும் செய்தி வருமானால் அதனையும் அதற்குண்டான சாட்சிகளையும் சேமித்தல் அவசியம்.

A – Avoid responding to messages that cyber bullies post about you. உங்களைத் தூண்டும் விஷயங்களுக்கு, தேவையற்ற தகவல்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை.

F – Focus on your positive qualities. உங்களிடம் உள்ள நல்ல விஷயங்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.

E – Exercise! This can be therapeutic.இணையத்திலேயே எந்த நேரமும் இருக்காமல் பிற விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள்.

இவற்றையெல்லாம் சரிவர செய்தாலே பிரச்னைகள் ஓடி விடும். CYBER STALKING – இணையத்தில் கண்காணிக்கப்படுதல் உங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகள் ஒருமுறை இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டால், அவற்றை யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தக் கூடும். குழந்தைகளின் கணக்கை உடைத்து உள்ளே சென்று அவர்களின் பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாட்டின் ராணுவ இணையதளத்தையே ஹேக் செய்கிறார்கள். இது மிக எளிது, சமூக வலைத்தளங்களின் கணக்கை முடிந்த வரை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.

HOW

H – Hacking is the most common way stalkers can control you.ஹேக் பண்ணுதல் எனப்படும் கணக்கை திருடி உள் நுழைதல் மூலம் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியும்.

O – Online chat rooms are a paradise for stalkers.சாட் ரூம்களில் வரும் அறிமுகமற்ற நபர்களால் மிக எளிதாக ஹேக் செய்ய முடியும்.

W – Social media websites are a great way for stalkers to be friend you and harass you. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஹேக்கர்களின் சொர்க்கம். உங்கள் குழந்தைகளின் அனைத்து ஆன்லைன் நடவடிக்கையையும் அவர்கள் கண்காணித்துக் கட்டுப்படுத்துவார்கள்.

SEXTING

டெக்ஸ்டிங் என்பது போல் பாலியல் குறித்த தகவல்களை மட்டுமே அனுப்புவதே செக்ஸ்டிங். ஒரு குழந்தைக்கு செக்ஸ்டிங் எனப்படும் உடலுறவு குறித்த செய்திகள் யாரேனும் அனுப்பினால், அது எத்தகைய மன உளைச்சலை தரும் என்பது குறித்த விழிப்புணர்வு தேவை. வலைத்தளங்களில் வலையேற்றப்படும் குழந்தைகளின் புகைப்படங்களை எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். பெண் குழந்தைகளின் புகைப் படங்கள் மூலம் அவர்களை பிளாக் மெயில் செய்தல், பயமுறுத்துதல் போன்றவையும் நடக்கும். புகைப்படங்கள் மட்டுமல்ல… அந்தரங்கமாகப் பேசப்படும் பேச்சுகள் கூட மற்றவர்களால் தவறாக பயன்படுத்தப்படக் கூடும்.

இதிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற, அவர்களுக்கு இணையம் அறிமுகமாகும்போதே, அது பற்றி தெளிவாக புரியவைக்க வேண்டும். சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி, ஒருவேளை ஏற்கனவே ஏதேனும் தொல்லையில் மாட்டியிருந்தால், அதிலிருந்து வெளிவர உதவ வேண்டும்.

TAME

T – Tell a trusted adult about your situation. நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் சொல்ல பழகுதல்.

A – You are not alone in this. Seek help. ChildLine gets calls regarding sexting everyday. ஓரிரு குழந்தைகளுக்கு மட்டுமல்ல… ஏராளமான குழந்தைகள் இதனால் பாதிப்படைகிறார்கள்… இது குழந்தையின் தவறல்ல என்று புரியவைத்தல்.

M – Move on. Don’t beat yourself up over a split second when you forgot to think. அதிலிருந்து வெளியே வந்து, அதை மறந்து, மற்ற ஆக்கபூர்வ வேலைகளில் மனதை செலுத்தப் பழகுதல்.

E – Engage in activities you enjoy and exercise. It can be therapeutic! உங்கள் மனதுக்கு உகந்த மற்ற செயல்களில் கவனம் செலுத்த முயற்சித்தல் அவசியம். இது போன்ற விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கைலாஷ் சத்யார்த்தியின் புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இணையத்தில் நாம் செலவழிக்கும் நேரத்தில் சில மணித்துளிகளை நம் வருங்கால சந்ததியினருக்கு செலவிடுதல் நல்ல காரியம். ஆகவே…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோல்டன் பிளவுஸ் வேலைப்பாடு!! (மகளிர் பக்கம்)
Next post ட்வின்ஸ்!! (மருத்துவம்)