கோல்டன் பிளவுஸ் வேலைப்பாடு!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 54 Second

எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு சில்க் சேலையின் ஜாக்கெட்டின் கழுத்து மற்றும் கைப் பகுதிகளை கோல்டன் கலர் வண்ண ஷரி நூல் மற்றும் கோல்டன் கலர் ஸ்டோன்களைக் கொண்டு தங்க வண்ணத்திலே ‘கோல்டன் ஜாக்கெட்டாக’ ஜொலிக்க வைத்து பார்ப்பவர்களை பரவசப்படுத்த முடியும் என்பதை தோழி வாசகர்களுக்கு கற்றுத் தருகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் நிறுவனத்தின் பயிற்றுனர் காயத்ரி.

தேவையான பொருட்கள்

கோல்டன் திலக் ஸ்டோன், கோல்டன் பீட்ஸ், கோல்டன் ரவுண்ட் ஸ்டோன், கோல்டன் ஷரி திரட், ப்ரவுன் கலர் சில்க் திரட், மெஷின் நூல், ஆரி ஊசி, சின்ன ஊசி, பேப்ரிக் கம், சிசர், வரைவதற்கு மார்க்கர், எம்ப்ராய்டிங் போட உட் ஃபிரேமுடன் ஸ்டாண்ட் மற்றும் டிசைன் செய்யத் தேவைப்படும் ஜாக்கெட் துணி.

செய்முறை…

* ஜாக்கெட் துணியினை உட்ஃபிரேமில் இழுத்து இணைத்து தேவையான கழுத்து வடிவத்தை வரையவும்.

* வரைந்துள்ள கோட்டில் கோல்டன் ஷரி நூலால் ஆரி நீடில் கொண்டு சங்கிலித் தையலை நெருக்கமாக இரண்டு வரிசை அருகருகே போடவும்.

* ப்ரவுன் கலர் சில்க் திரட்டால் அதன் அருகிலேயே படத்தில் காட்டியதுபோல் இரண்டு வரிசைக்கு சங்கிலித்
தையலிட்டு மீண்டும் அதன் அருகில் கோல்டன் ஷரி நூல் கொண்டு இரண்டு வரிசைக்கு தையல் போடவும்.

* கோல்டன் திலக் ஸ்டோனை பேப்ரிக் கம் கொண்டு இடைவெளிவிட்டு ஒட்டி அதைச் சுற்றி படத்தில்
காட்டியுள்ளதுபோல் டைமண்ட் வடிவில் கோல்டன் ஷரியால் தையலிடவும். நடுவில் சிறிய சைஸ் கோல்டன் பீட்ஸை இணைக்கவும்.

* கோல்டன் பீட்ஸை டைமண்ட் வடிவின் அருகில் ஆரி நீடிலால் மூன்று மூன்றாகக் கோர்த்து மூன்று வரிசை அருகருகே நீளவாக்கில் வடிவமைக்கவும்.

* மீண்டும் அதன் அருகில் முன்புபோல் திலக் ஸ்டோனை ஒட்டி, டைமண்ட் தையலிட்டு, இறுதியில் ஷரி நூலால் ஷிக் ஷாக் வடிவ தையலில் இடையில் கோல்டன் பீட்ஸை படத்தில் காட்டியுள்ளதுபோல் இணைக்கவும்.

* கழுத்து வடிவின் அருகே ஆங்காங்கே இடைவெளிவிட்டு கோல்டன் ரவுண்ட் ஸ்டோனை ஒட்டி சுற்றி ப்ரவுன் சில்க் திரட்டால் தையலிடவும்.

* தேவைப்படும் டிசைனை கை பகுதியிலும் வரையவும்.

* மீண்டும் கழுத்தில் போட்ட அதே டிசைனை கைப் பகுதியிலும் வரையப்பட்ட கோட்டின் மேல் போட்டு கைப்பகுதியினையும் கழுத்தைப்போல் கூடுதல் அழகூட்டவும்.

* அழகாக வடிவமைக்கப்பட்ட கழுத்து மற்றும் கை பாகம் உங்கள் பார்வைக்கு இங்கே. வடிவமைக்கப்பட்ட நேர்த்தி, வேலைப்பாட்டிற்கு எடுக்கும் நேரம் இவற்றைப் பொறுத்து ரூ. 2500 முதல் விலை நிர்ணயம் செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊசிமுனை ஓவியங்கள் !! (மகளிர் பக்கம்)
Next post ஃபுல் ஸ்டாப்!! (மருத்துவம்)