ஊசிமுனை ஓவியங்கள் !! (மகளிர் பக்கம்)
மாலை நேரப் பார்ட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்லும்போது, ஒரே நிறத்தில் இருக்கும் புடவையினை சற்று கூடுதலாக எடுத்துக்காட்ட, போட் வடிவ கழுத்துப் பகுதியினை வடிவமைத்து, பலவடிவ மிரர் வேலைப்பாடுகளால் கூடுதல் அழகூட்டி, தோழி வாசகர்களுக்கு கழுத்து மற்றும் கைப் பகுதிகளை வடிவமைத்துக் காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் பயிற்சியாளர் காயத்ரி.
தேவையான பொருட்கள்
ப்ளவுஸ், கோல்டன் வண்ண ஷரி நூல், லெமன் க்ரீன் சில்க் நூல், மஞ்சள் வண்ண மிஷின் நூல், சிறிய, பெரிய மற்றும் மீடியம் வடிவ மிரர், செயின் ஸ்டோன், ஆரி ஊசி, கை ஊசி, பேப்ரிக் கம் மற்றும் கத்தரிக்கோல்.
செய்முறை
* ஜாக்கெட்டினை உட் ஃபிரேமில் இணைத்து, தேவையான போட் வடிவினை வரைந்து கொள்ளவும்.
* செயின் ஸ்டோனை போட் வடிவ கழுத்தில் இணைத்து மெஷின் நூலால் கை ஊசி கொண்டு இணைக்கவும். செயின் ஸ்டோனின் இரு பக்கத்திலும் ஷரி நூலால் செயின் தையலிடவும்.
* 3. & 4. பேப்ரிக் கம்மை தடவி பல வடிவில் உள்ள மிரர் துண்டுகளை மாற்றி மாற்றி ஒட்டி காய வைக்கவும்.
* முதலில் மிரரைச் சுற்றி கோல்டன் ஷில்க் திரட் நூலால் சதுர வடிவில் கவர் செய்யவும்.
* பின்னர் அதே நூலால் சதுர வடிவின் மேல் வட்டமாக செயின் தையலிட்டு மிரர் வடிவுடன் இணைக்கவும்.
* மிரர் வடிவங்களுக்கு இடையில் உள்ள பகுதிகளை லெமன் க்ரீன் வண்ண சில்க் நூல் கொண்டு ஆரி ஊசியால் வாட்டர் பில்லிங் தையலிட்டு நிரப்பவும்.
* போட் வடிவிலான கழுத்துப் பகுதி, படத்தில் காட்டியிருப்பதுபோல் மிகவும் அழகாகத் தெரியும்.
* கழுத்துப் பகுதிபோல் கை பாகத்தினையும் வடிவமைக்கவும்.
* படத்தில் காட்டியுள்ளதுபோல் வடிவமைக்கப்பட்ட மிரர் வேலைப்பாடுடன் கூடிய போட் நெக் ப்ளவுஸ் தயாராக உள்ளது. இதை வடிவமைக்க 2000ம் வரை விலை நிர்ணயம் செய்யலாம்.
கடந்த எட்டு மாதங்களாக இந்தத் தொடர் வழியாக தோழி வாசகர்களான நீங்கள் அளித்து வந்த ஆதரவிற்கு அன்பும் நன்றியும். தொடர்ந்து நீங்கள் எங்களை கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. வாசகர்களின் பேராதரவால் பல புதிய தோழி வாசகிகள் எங்களை அணுகி, ஊசி வழியே செய்யும் மாயாஜாலங்களை கற்க தன்முனைப்போடு மிகவும் ஆர்வமாக இணைந்திருக்கிறார்கள். அதில் மிகச்சிலர் ஆர்வத்தோடு தொடர்ந்து கற்று வெற்றியோடு முடித்தும் இருக்கிறார்கள்.
மேலும், ஒரு சில தோழி வாசகிகள் எங்களை அணுகும்போதே, ‘ஊசிமுனை ஓவியங்கள்’ இதுவரை தொடராக வந்த இதழ்களின் அத்தனை பிரதிகளையும் கையோடு கொண்டுவரவும் தவறவில்லை. அந்த அளவிற்கு வாசகர்களைக் கவரும்விதமாக அழகிய வண்ணப் புகைப்படங்களுடன், மிகவும் இயல்பான நடையில், வாசகர்கள் படித்து புரிந்து கொள்ளும் விதமாக இந்தத் தொடர் அமைந்ததுடன், தொடர்ந்து வாசகர்கள் தந்த பேராதரவிற்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.
Average Rating