குட் டச்… பேட் டச்…!! (மருத்துவம்)
இந்தியா
கல்வி
தமிழகம்
அரசியல்
குற்றம்
உலகம்
அறிவியல்
சென்னை
வர்த்தகம்
விளையாட்டு
தொழில்நுட்பம்
குழந்தை வளர்ப்பு
முகப்பு >
மருத்துவம் >
குழந்தை வளர்ப்பு
குட் டச்… பேட் டச்…
2016-01-20@ 14:47:29
நன்றி குங்குமம் தோழி
உங்கள் குழந்தை ஃபேஸ்புக் பயன்படுத்துகிறதா? இப்படிப் போகும் அந்தக் கதையில் நகைச்சுவையா இருக்கிறது? குடும்பம் என்ற அமைப்பே சிதைந்து வருவதைத்தானே குறிக்கிறது? அம்மா, பாட்டி, அத்தை என்றோ யாரோ ஒருவர் எதையோ ஒன்றை வேடிக்கை காட்டி, சிரித்து மகிழ்ந்து குழந்தைக்கு உணவூட்டிய காலம் போய், காட்சி ஊடகங்களுக்கு நடுவே வாய் பிளக்கும் குழந்தைகளுக்கு, அந்த சந்தடியிலேயே சோற்றை திணிப்பதே இன்று நடக்கிறது.
ஷாப்பிங் மால், தியேட்டர், ஹோட்டல்… இப்படி எந்த பொது இடத்திலும் நீங்கள் கவனித்திருக்கலாம். அல்லது நாமே அதில் ஒருவராகவும் இருக்கலாம், மூன்றாவது கையாக போன் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களை கூட சமூகவலைத்தளங்களில் பதியும் ஆர்வமான மக்கள் சூழ வாழ்கிறோம். தவறில்லை… இன்றைய காலகட்டத்தில் வளர்ந்திருக்கும் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அறியாமல் இருப்பதும் குற்றமே.
அமுதமே ஆனாலும் அளவோடுதானே? நம் குழந்தையும் இணையத்தையும் சமூக வலைத்தளத்தையும் அறிந்து கொள்ளட்டும்… ஆனால், கடிவாளம் உங்களிடமே இருக்கட்டும். இணையதளத்தின் மூலம் குழந்தைகள் எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறார்கள்? எப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்? எப்படிப்பட்ட வக்கிரமான மனிதர்களின் சூழலில் இருக்கிறோம்? இதெல்லாம் தெரிந்தால் பேரதிர்ச்சிதான் மிஞ்சும்.
ஒரு சம்பவம்…
5 வயது பெண் குழந்தையின் பிறந்த நாள்… புத்தாடையிலும் புன்சிரிப்பிலும் மயக்கும் குழந்தையை கண்டு பெற்றோர் மகிழ்ந்தால் போதுமா? மற்றவர்களும் வாழ்த்த வேண்டுமே! 500 ரூபாயில் கேமரா மொபைலும் 10 ரூபாயில் இணைய இணைப்பும் கிடைக்கும் இந்தக் காலத்தில், அழகான குழந்தையின் போட்டோவை போஸ்ட் செய்து, ‘எப்படி வளர்ந்துவிட்டாள்’ என ஸ்டேட்டஸ் போட்டு ஆச்சரியப்பட்டு, அவர்களே லைக்கும் செய்கின்றனர். முன் பின் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் எனப்படும் நட்பு கோரிக்கையையும் ஏற்கின்றனர்.
அந்த நபரோ, குழந்தையின் புகைப்படத்தை எடுத்து 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நபர்களுக்கு, ‘வயது 5, கலர் சிவப்பு, கண் கருப்பு, முடி ப்ரவுன், விலை இவ்வளவு’ என்று பயோடேட்டாவுடன் தகவல் அளிக்கிறான். மாலையில் பள்ளியில் குழந்தையை அழைக்க செல்லும்போது அவள் அங்கில்லை. எப்படி இருப்பாள்? பெற்றோர் அளித்த தகவல்களுடன் குழந்தையை கடத்திய ஆசாமியுடன் தென் ஆப்ரிக்கா பயணப்பட்டுக் கொண்டிருந்தாள், கையில் புத்தகப்பையுடன். இது நிஜத்தில் நடந்த நிகழ்ச்சி. பெற்றோரின் அதீத ஆர்வமும் கூட சில நேரம் குழந்தைகளுக்கு பாதகமாக முடியும்.
இன்னும் சில சம்பவங்கள்…
தன் ஆசைக்கு இணங்க மறுத்த காதலியின் நிர்வாண படத்தை பிரசுரம் செய்த 17 வயது சிறுவன், உண்மை காதலன் என்று நம்பி வீட்டை விட்டு ஓடிய 14 வயது சிறுமி, 12 வயது குழந்தையை அவள் வீட்டுக்கே வந்து பாலியல் வன்முறையும் கொலையும் செய்த கொடூரன்… இப்படி குழந்தைகளுக்கும் டீன் ஏஜ் சிறுமிகளுக்கும் அந்நியர்கள் அறிமுகமாவது சமூக வலைத்தளம் மூலமாகத்தான். இதுபோல இணையம் காரணமாக சிதைந்த குடும்பங்கள் ஏராளம்.
உங்கள் குழந்தை பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள்…
என்ன மாதிரியான சமூக வலைத்தளம் ?
இன்று கம்ப்யூட்டரில் மட்டுமல்ல… கைபேசியிலேயே இணையத்தை முழுமையாக உபயோகிக்க முடியும். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்ற ஏராளமான தளங்களில் உங்கள் குழந்தை எதை உபயோகிக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். இவை எல்லாவற்றிலுமே வீடியோ சாட், போட்டா அனுப்புதல் / பெறுதல் உள்பட ஏராளமான விஷயங்கள் உள்ளன. வீடியோவோ புகைப்படமோ தேவையின்றி எடுப்பதோ பகிர்வதோ எப்போதும் ஆபத்தே. நம் போனில் அழித்து விட்டாலும் கூட, அதையும் திரும்பப் பெறும் சாஃப்ட்வேர்கள் இன்று எண்ணிலடங்காமல் இலவசமாகவே கிடைக்கின்றன. அதனால் யாருடன் புகைப்படம், யாருடன் வீடியோ சாட் என்பதை நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.
1. யாருடன் புகைப்படம் அனுப்புதல், வீடியோ சாட் நடக்கிறது?
2. யார் உங்கள் குழந்தைகளின் நண்பர்கள்? எப்படி அவர்கள் அறிமுகம்?
3. உங்கள் குழந்தைக்கும் நண்பர்களுக்கும் மியூச்சுவல் நண்பர்கள் (இருவருக்கும் பொதுவான நண்பர்கள்) யார்? யார்?
4. யாரேனும் எதற்காகவேனும் உங்கள் குடும்ப விவரங்கள் கேட்டார்களா? உங்கள் குழந்தை அதற்குத் தந்த பதில் என்ன?
5. உங்கள் குழந்தையின் நண்பர்கள் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்களை சமூக வலைத்தளம் மூலம் அனுபவித்தனரா? அப்படி என்றால் அது என்ன? அதன் விளைவு, எதிர் நடவடிக்கை என்ன?
6. பொதுவாக என்ன விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்?
7. இதுவரை சமூக வலைத்தளத்தில் அவர்கள் மறக்க முடியாத நிகழ்வு என்ன? அதை எப்படி எடுத்துக்கொண்டார்கள்? அல்லது எதிர்வினையாற்றினார்கள்?
இவை பொதுவான விஷயங்களாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியவை. இவை மட்டுமே அல்ல…
பெற்றோரின் கட்டுப்பாடு இந்த நேரம், இத்தனை நேரம், இந்தத் தளங்களை மட்டுமே பார்வையிட அனுமதி என்று ஒரு வரையறை கண்டிப்பாக வேண்டும். இப்போது பெரும்பான்மையான தளங்களில் பெற்றோர் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் வசதி இருக்கிறது. அதனை அறிந்து முழுவதுமாக உபயோகப்படுத்துதல் நன்று. டி.வி. ரிமோட்டில் கூட ‘சைல்ட் லாக்’ இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.
சாட் ஆப்சன்
சாட் என்கிற உரையாடலில் செட்டிங்ஸ், தேர்வு வசதி உள்ளது. உதாரணமாக கூகுள் தளத்தில் உங்களை யார் உரையாடலில் தொடர்பு கொள்ளலாம் என்று இருக்கும் வசதியை நாம் பயன்படுத்தலாம். நண்பர்களோ, குறிப்பிட்ட சிலரோ மட்டுமே பேசும் படி வைக்கலாம்.
நம் தகவல்
ஃபேஸ்புக்கில் நீங்கள் கவனித்திருக்கலாம்… 50 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள்? யாரு உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்? எது உங்க அதிர்ஷ்ட கலர்? இப்படி நிமிடத்துக்கு ஒன்று உங்கள் பக்கத்தில் வரும். இதில் நீங்கள் விளையாட விரும்பினால் உங்கள் தனிப்பட்ட குறிப்புகளை படித்துக்கொள்ளவா என்று அனுமதி கேட்கும். தனிப்பட்ட குறிப்பு என்பது உங்கள் குறிப்பு மட்டுமல்ல… உங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவரின் குறிப்புமேதான். அதனால், இதில் மிக மிக கவனம் தேவை.
பிரைவசி செட்டிங்ஸ் எந்தத் தகவல் வெளியில் தெரியலாம், எது தெரிய வேண்டாம் என்பதை பிரைவசி செட்டிங்ஸ் பகுதியில் நாமே கட்டுப்படுத்தலாம். சமூக வலைத்தளங்களில் உங்கள் உண்மையான தகவலையே தெரிவிக்க வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. ஆகவே, பாதுகாப்பான வகையில் தகவல் அளிக்கலாம்.
Average Rating