வருமானம் தரும் வுட்டன் ஜூவல்லரி!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 52 Second

நடுத்தர குடும்பப் பெண்கள் சிறு தொழில் ஒன்றை தொடங்கி அதில் தன் முத்திரையைப் பதித்து ஆலமரம் போல் வளர்ந்து தனது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள ஒரு அரிய தொழில் எது என்று பார்த்தால் நகைகள் செய்வதுதான்.

என்ன நகை செய்வது என்று யோசிப்பவர்களா நீங்கள்?

இனி கவலை வேண்டாம்! இன்றைய நவநாகரிக உலகில் மிகவும் பிரசித்தி பெற்று, பெண்கள் அனைவரும் விரும்பி அணியக்கூடிய நகையும், வெளிநாட்டவர்களையும் கவர்ந் திழுக்கக்கூடிய வகையில் உள்ள நகையும் எது என்றால் Hand painted Wooden Jewellery தான். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக் கும் மேலாக கைவினைப் பொருட்கள் தயாரிப்பதிலும் இதனை பிறருக்கு சொல்லிக் கொடுப்பதிலும் பிரபலமான ஜெயஸ்ரீ நாராயணன் நம்மிடம் இத்தொழில் குறித்து பேசினார். நகைகளில் எத்தனையோ வகைகள் உண்டு.

தங்கம், வெள்ளி, ஐம்பொன், பேப்பர், குயிலிங், டெரகோட்டா, சில்க் த்ரெட் மற்றும் பல. இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக விளங்குவது வுட்டன் ஜுவல்லரி. கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள், வெளிநாட்ட வர்கள் போன்று பலதரப் பட்ட மக்களும் விரும்பி அணியக்கூடியது இது. எவர் வேண்டுமானாலும் இதை செய்து, சந்தைப் படுத்தலாம். சிறிது கற்பனைத் திறனும், நேரமும் இருந்தாலே இது மிகப்பெரிய முதலீடு என்றே சொல்லுவேன். தயாரிக்கவும் சேமித்து வைக்கவும் விற்பனைக்கும் என வீட்டிலுள்ள ஒரு அறையே போதும்.

தேவையான பொருட்கள்

1) Wooden base (bangle, jhumkha, pendant)
2) Acrylic (அக்ரிலிக்) வர்ணம்.
3)மெல்லிய மற்றும்
பட்டை பிரெஷ்
4) வார்னிஷ்
5) Eye pin (ஐ பின்)
6) Head pin (ஹெட் பின்)
7) கயிறு விருப்பமான கலரில்
8) Gear Lock (கியர் லாக்)
9) Gear wire (கியர் வயர்)
10) ஜுவல்லரி டூல்ஸ்- விலை 750/-
11) விதவிதமான கலரில் மணிகள்
12) காது கொக்கிகள்
13) ஃபேன்ஸி ஸ்டட்ஸ்

இவை அனைத்தையும் வாங்க சுமார் 5000 ரூபாய் முதலீடு போதுமானது. ஒரு நாளைக்கு ஒருவர் சுமார் 3 செட் நகைகள் வர்ணம் தீட்டி முழுமைபடுத்தலாம். (ஒரு செட் Pendant, Jhumkha, வளையல்) இதேபோன்று தீவிரமாக செய்தால் மாதத்திற்கு சுமார் 75 முதல் 90 செட் நகைகள் செய்யலாம். ஒரு செட் நகைகள் செய்ய நமது முதலீடு கிட்டத்தட்ட ரூபாய் 500 ஆகும்.

(மூலப்பொருட்களை மொத்தமாக வாங்கியதில் இருந்து செய்யப்படும் ஒரு நகைக்கு ஆகும் செலவு இது.) ஒரு செட் நகையை கிட்டத்தட்ட ரூபாய் 1000 முதல் 1200 வரை விற்கலாம். நிகர லாபம் 500 முதல் 700 வரை ஒரு செட்டிற்கு.ஒரு நாளைக்கு 3 செட் செய்வதால் நிகர லாபம் சுமார் 2000 வரும். அப்படியானால் மாதத்திற்கு ரூபாய் 50,000 கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ள ஒரு தொழிலாகும்.

அடுத்ததாக சந்தைப்படுத்துதல் எப்படி?

ரொம்ப சுலபம். நம் அண்டை அயல் வீட்டுப் பெண் கள், அலுவலக பெண்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும்அல்லாது பொருட் காட்சிகளிலும் பங்கேற்று விற்பனை செய்யலாம். ஒரு செட் நகைக்கு சுமார் 500 ரூபாய் லாபம் கிடைக்க, தினம் 3 செட் செய்ய கிட்டத்தட்ட 1500 ரூபாய் லாபமாக ஒரு நாளைக்கு கிடைக்கும். மாதம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 75 முதல் 90 செட் நகைகள் செய்யலாம்.

அப்படியானால் மாதத்திற்கு செலவு போக நமக்கு சுமார் ரூபாய் 30,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். என்னிடம் பயிற்சி பெற விரும்புவோருக்கு ரூபாய் 2000 என வசூலித்து ஒரு செட் நகையையும் சொல்லிக் கொடுக்கிறேன். நாம் செய்யும் இந்த ஹேண்ட் பெயின்டர் வுட்டன் ஜுவல்லரியில் மிகக் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அறிவுரை என்னவென்றால் விற்பனை செய்யும் பொருட்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

நல்ல தரமான வண்ணங்கள் பயன்படுத்தி, நன்கு உலர வைத்து, பாதுகாப்பாக வைத்திருந்து, கைவினைப் பொருட்காட்சியில் பங்கு பெற்று, தரம் மிக முக்கியம் என்பதை மனதில் கவனமாக வைத்துக்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டுவது போல் இன்முகத்தோடு புன்னகையோடு இந்த நகையை விற்பனை செய்யுங்கள் தோழிகளே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சணல் பை தயாரிப்பில் மாதம் ரூ.18,000 சம்பாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
Next post நர்சரி ஆரம்பிப்பது எப்படி?!! (மகளிர் பக்கம்)