பாலுறவில் மன அழுத்தம் வேண்டாம்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 32 Second

பொதுவாக வாழ்க்கையில் கணவன் – மனைவி பந்தம் அல்லது இல்லறம் – தாம்பத்யம் என்பது புனிதமானது; அதனைத் தவிர்த்து மனித வாழ்க்கை அமைவதில்லை என்பதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பார்த்தோம்.

பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம்.

என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களும், முதலிரவு நாளில், மனைவியுடன் தனிமையில் தள்ளப்படும்போது, ஒருவித அச்சம், பீதி இருப்பது இயற்கையே.

பலருக்கு முதலிரவை நினைத்தே ஒருவித பயம் ஏற்படக்கூடும், இந்த பயம் ஆண்/பெண் இருபாலருக்கும் இருப்பது இயல்பே.

வேறு சிலருக்கு முன் கூட்டியே விந்தணு வெளியேறி விடுமோ முழு அளவில் பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்ள முடியாதோ என்பன போன்ற பலவாறான சந்தேகங்கள் எழலாம். அந்த சந்தேகங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம்.

ஆனால், பாலுறவுப் புணர்ச்சியைப் பொருத்தவரை இருவரும் ஒருங்கே, ஒரே நோக்கத்துடன் மாற்று சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல் புணர்ச்சியில் ஈடுபடுதல் அவசியம்.

வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். அப்படியே உங்களுக்கு ஏதேனும் குறை இருப்பதாக, இருபாலரில் யாராவது உணர்ந்தால், திருமணம் ஆகி ஓரிரு மாதங்களுக்குள் உரிய மருத்துவரை அணுகி உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணவும்.

முதலில் மன அழுத்தம் அறவே கூடாது. மனதை இலேசாக வைத்துக் கொண்டு, பாலுறவுப் புணர்ச்சியை மேற்கொள்ளுங்கள். ஒருவித பயம் அல்லது அழுத்தத்துடன் நீங்கள் புணர்ச்சி கொள்வீர்களானால், அது உங்களுக்கும் திருப்தி அளிக்காது. உங்களின் துணையையும் திருப்தி கொள்ளச் செய்யாது.

எனவே கவலையின்றி இருங்கள். களிப்புடன் பாலுறவை வைத்துக் கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரியன் கடத்தல் கதை!! (வீடியோ)
Next post ஆண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா!! (அவ்வப்போது கிளாமர்)