பேபி புராடெக்ட்ஸ்!! (மருத்துவம்)
இயற்கையாகவே நம் செல்வங்களின் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக் கொள்ளும் நாம் ஆர்வக்கோளாறால் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களையும் வாங்கி குழந்தைகளிடத்தில் பயன்படுத்துகிறோம். இது சில சமயங்களில் ஆபத்தில் கொண்டு போய்விடுகிறது. இதுபோன்ற பொருட்களை பயன்படுத்துவது அவசியமா? அதற்கு மாற்றான உணவுகள் மற்றும் பொருட்கள் எவை? என பட்டியலிடுகிறார்… குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம்.
“குழந்தைகள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உலக சுகாதார நிறுவனம் குழந்தைகளுக்கான சர்வதேச உணவு வழிகாட்டி ஒன்றை பரிந்துரை செய்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையையே அனைத்து நாடுகளிலும் உள்ள தேசிய அமைச்சகங்கள் நடை முறைப்படுத்துகின்றன. அதனையே நம்நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் பின்பற்றுகிறது. அதன்படி, ‘முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் பிற உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்படுகிறது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பால் மட்டும் போதாது. குழந்தையின் வளர்ச்சிக்கேற்ற வகையில் அதிக கலோரி கொண்ட உணவுகளை கொடுக்க வேண்டும். மாற்று உணவு ஆரம்பிப்பது குழந்தையின் வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். இதை காம்ப்ளிமென்டரி ஃபீடிங் (Complementary feeding) என்று சொல்லுவோம். முதலில் திரவ வடிவில் கொடுக்க ஆரம்பித்து பிறகு பாதி திரவம் என படிப்படியாக திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறும் மருத்துவர் குழந்தைகளின் வயதிற்கேற்ற உணவுகள், அதன் அவசியம், மாற்று உணவு என கீழ்க்கண்ட அட்டவணையை பரிந்துரைக்கிறார்.
வயது பொருள் நோக்கம் கலக்கப்படும் பொருட்கள் / விளைவுகள் அவசியமா? மாற்று என்ன?
6-12(மாதங்கள்) டப்பாவில் அடைக்கப்பட்ட பவுடர் (திட)உணவுகள். தாய்ப்பாலுடன் சேர்த்து திட உணவு கொடுக்கவும் குழந்தைகளின் வளர்ச்சிக் கேற்றபடி அதிக கலோரிகள் கொண்ட உணவு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இதுபோல் டப்பாவில் அடைக்கப்பட்ட பவுடர் உணவுகள் கொடுக்கப்படுகிறது. அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ப்ரிசர்வேட்டிவ்ஸ் மற்றும் கெட்டிப்படுத்துவதற்காக (Thickening agents) சோளமாவு, ஸ்டார்ச் போன்றவை சேர்க்கப்படுகிறது. சுவைக்காக கூடுதலான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
நீண்டநாள் வருவதற் காக அதிக சூட்டில் இதுபோன்ற பொருட்களை தயாரிப்பார்கள். இதனால் சத்துகள் குறைய வாய்ப்புள்ளது. அவசியம் என்பதைவிட. வேலைக்குச் செல்லும் பெண்கள் நேரக்குறைவு காரணமாக தயாரிப்பது எளிது என்பதாலும், பயணங்களின் போது தயாரிக்க எளிதாக இருப்பதாலும் தங்கள் சௌகர்யத்திற்காக இவற்றை பயன்படுத்து கிறார்கள் இதுபோல் டின்களில் அடைக்கப்பட்ட பொருட்களை வாங்கும்போது லேபிளை பரிசோதித்து அதில் ரீஃபைண்ட் சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தாலோ, மாற்றம் செய்யப்பட்ட ஸ்டார்ச் சேர்க்கப்பட்டிருந்தாலோ கட்டாயம் வாங்கக்கூடாது.
தென்னிந்தியாவில் அரிசி பிரதான உணவு என்பதால் அரிசியை வறுத்து கஞ்சியாக கொடுக்கலாம். அரிசி, கோதுமை, ராகி போன்ற தானியங்களில் முதலில் கஞ்சியாக கொடுக்கலாம். முன்று பங்கு அரிசி அல்லது கோதுமை, 1 பங்கு பருப்பு வகைகள், ½ பங்கு எள் மற்றும் நிலக்கடலை என 1 மாதத்திற்கான அளவாக கஞ்சி மாவு தயாரித்து வைத்துக் கொள்ளலாம். கூழாக செய்து அதனுடன் கலோரி அதிகரிக்க நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கொடுக்கலாம்.
அவ்வப்பொழுது அளவாக தயாரிக்க வேண்டும். நீண்டநாட்கள் ஸ்டோர் செய்தவற்றை கொடுக்கக்கூடாது. மாதங்கள் கூடக்கூட இட்லி, சாதம், சப்பாத்தி போன்ற பாரம்பரிய உணவுகளை மிக்சியில் போட்டு அடித்தோ, மசித்தோ கொடுக்க துவங்கலாம். மற்ற பொருட்களுடன் ஒப்பிடும்போது இவை செலவும் குறைவு, குழந்தைகளுக்கு மிக ஆரோக்கியமானதும் கூட. வீட்டில் நாமே நம் கையால் தயாரிப்பதால் வேறு எந்தக் கலப்படமும் ஏற்பட வாய்ப்பில்லை.
6-12 (மாதங்கள்) பால் அல்லது நீரில் கரைத்துக் கொடுக்கும் ஆரோக்கிய பானங்கள். தாய்ப்பாலுடன் கூடுதல் ஊட்டச்சத்திற்காக கொடுக்கப்படுகிறது.
இதிலும் அதிக நாட்கள் பயன்பாட்டிற்காக ப்ரிசர்வேட்டிவ்ஸ் மற்றும் திக்காக இருக்க சோளமாவு, ஸ்டார்ச் போன்றவை சேர்க்கப்படுகிறது. சுவைக்காகவும் கூடுதலான பொருட்கள் இதுவும் கட்டாயமில்லை.சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இளம் தாய்மார்கள் சௌகர்யமாக இந்த பவுடர்களை கரைத்து கொடுத்துவிடுகிறார்கள். இவற்றின் ருசிக்கு பழகிய குழந்தைகள் பிறகு நாம் கொடுக்கும் உணவுகளை சாப்பிட மறுக்கும். பழச்சாறு, காய்கறி சூப், சோயா மில்க், இளநீர் போன்ற இயற்கையான பானங்களைக் கொடுக்கலாம். சுவைக்காக இவற்றை மில்க் ஷேக்காக செய்து கொடுக்கலாம். சத்துமாவுக் கஞ்சி மிகவும் ஆரோக்கியமானது. இவற்றில் இல்லாத சத்து மற்றவற்றில் இல்லை என்றே கூறலாம்.
வயது பொருள் நோக்கம் கலக்கப்படும்
பொருட்கள் / விளைவுகள் அவசியமா? மாற்று என்ன?
நீண்ட நாட்கள் வருவதற்காக அதிக சூட்டில் இதுபோன்ற பொருட்களை தயாரிக்கும்போது சத்துகள் குறைய வாய்ப்புள்ளது. இதுபோல அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச் சத்திற்காக கொடுக்கலாம். டின்னில் லேபிளை பரிசோதித்து வாங்கவேண்டும். இதிலும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் மாற்றம் செய்யப்பட்ட ஸ்டார்ச் உணவு சேர்க்கப்பட்டிருந்தால் வாங்கக்கூடாது.
வயது பொருள் நோக்கம் கலக்கப்படும்
பொருட்கள் / விளைவுகள் அவசியமா? மாற்று என்ன?
0-12 மாதங்கள் பேபி சோப் நல்ல நறுமணத்துடன் குழந்தைகளின் தோலை மென்மையாக்க உபயோகிக்கப்படுகிறது.
வாசனையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்படுகின்றன. எனவே, இவற்றில் கண்டிப்பாக வேதிப்பொருட்கள் கலந்திருக்கும். குழந்தைகளின் தோலில் ரேஷஸ் வரக்கூடும்.
குழந்தைகளின் தோலை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். அதனால் சோப் உபயோகிக்கும் போது தோல் வறட்சி ஏற்பட வாய்ப்புண்டு. மூன்று மாதம் வரை குழந்தைகளை மூன்று வேளையும் மிதமான சூட்டில் முக்கி எடுத்த ஈரத்துணியால் துடைத்து விட்டாலே போதுமானது. வீட்டில் உள்ள பெரியவர்கள் கடலைமாவு, பயத்தமாவு போன்றவற்றை உபயோகிக்க சொல்வார்கள். இது தவறு. முன் கூறியது போல் குழந்தைகளின் தோல் மென்மையாக இருப்பதால் ஸ்க்ரப்பர் போன்று இருக்கும் இவற்றை உபயோகிக்கும் போது தோலில் வெடிப்புகள் வரலாம். 4 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நிறமூட்டிகளோ, வாசனையூட்டிகளோ இல்லாத ஈரப்பதம் உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம்.
0-12 மாதங்கள் டயாபர் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும் டயாபரை பயன்படுத்துகிறார்கள். தற்போது வரும் டிஸ்போசபிள் டயாபரில், நீர்கசிவு ஏற்படாமலிருக்க வெளிப்புற அடுக்கில் பாலிஎத்திலின் மற்றும், பிளாஸ்டிக் உறை சேர்க்கப்படுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் உள்ளவர்களிடமும், டேகேர் சென்டரிலும் விட்டுச் செல்வதால் சௌகர்யத்திற்காக சர்வ சாதாரணமாக பயன்படுத்து
கிறார்கள். கூடியவரை உபயோகத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
மிக அவசியமாக டயாபர் உபயோகிப்பதானால் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம். வெளியில் செல்லும் போதும், பயணங்களின் போதும் உபயோகிக்கலாம். தொடர்ந்து மாற்றாமல் இருந்தால் டயாபர் ரேஷ் எனப்படும் allergy ஏற்படும். லங்கோடு எனப்படும் பருத்தி துணியாலான டயாபரே சிறந்தது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது . எனவே, வீட்டிலேயே சுத்தமான புதுத் துணியை பயன்படுத்தலாம். துணியை துவைத்தபின் டெட்டோல் போன்ற கிருமி நாசினிகளை உபயோகித்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படக்கூடும். துவைத்து நல்ல வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
1-3 வயது செயற்கை ஹெல்த் ஃபுட்ஸ் மற்றும் ஹெல்த் ட்ரிங்ஸ் மிகவும் வீக்காக உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்திற்காக கடைகளில் விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்களை கொடுக்கிறார்கள். சுவைக்காக பல்வேறு ஃப்ளேவர்களில் விதவிதமான ஹெல்த் ட்ரிங்ஸ் கிடைக்கிறது. இதற்காக செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள் கலக்கப்படலாம். அதனால் பக்க விளைவுகளும் உண்டாக வாய்ப்புண்டு. சாதாரணமாக வீட்டில் அனைவரும் சாப்பிடும் உணவுகளையே அதிக மசாலா, காரம் சேர்க்காமல் கொடுக்கலாம். காய்கறிகள், பழங்கள், பருப்புகள் போன்று சரிவிகித உணவை பின்பற்றினாலே போதுமானது. சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். அவர்களுக்கு பிடித்த சுவையில் செய்து கொடுக்க வேண்டும்.
4-12 வயதுள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் ஹெல்த் ட்ரிங்ஸ் வளர்ச்சி, எடை அதிகரிக்க, மற்றும் நினைவாற்றல் மைன்ட் ஷார்ப்னஸ் என்றுபேராசை கொண்டு கடைகளில் விற்கும் இதுபோன்ற பானங்களை வாங்கிக் கொடுக்கிறார்கள். இவற்றிலும் பல்வேறு கூடுதல் செயற்கைப் பொருட்கள் கலக்கப் படலாம். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு களிலிருந்தே உடல் வளர்ச்சிக்கான அனைத்து பலன்களையும் நாம் பெற முடியும். காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், பருப்புகள் போன்று சரிவிகித உணவை பின்பற்றினாலே போதுமானது. இந்த வயது குழந்தைகளை வீட்டிற்கு வெளியே நன்றாக ஓடியாடி விளையாட விடவேண்டும். யோகா, விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் போது மூளை மற்றும் உடல் வளர்ச்சியை அடைய முடியும்.
Average Rating