டீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 42 Second

நாட்டில் சுற்றுச் சூழல் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. அதை பாதுகாக்க எளிதில் மக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்த அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை காரணமாக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதில் குறிப்பாக துணி பைகள், சணல் பொருட்கள், பாக்கு மட்டையில் தயாரிக்கப்படும் பொருட்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பொதுமக்களும் மாசு ஏற்படுத்தாத பொருட்களையே அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சிறு தொழில்களுக்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் டீகோ பேஜ் என்ற கலை மூலம் பழைய பொருட்களை மீண்டும் புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். அதாவது மறுசுழற்சி முறையில் வீட்டில் வீணான பொருட்களை புதுசாக மாற்றலாம். இந்த கலை மற்றும் அதற்கான சிறு தொழில் வாய்ப்பு குறித்தும் கிறிஸ்டினா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவின் நிறுவனர் கிறிஸ்டினா பகிர்ந்து கொண்டார். ‘‘டீகோ பேஜ் கலை பிரான்ஸ் நாட்டில், பதினேழாம் நுாற்றாண்டில் உருவானது.

‘டீகோ பேஜ்’ என்றால் பிரெஞ்ச் மொழியில் வெட்டுவது என்று பொருள். இந்த கலையில் பேப்பர், வார்னிஷ், கிளே ஆகியவற்றை வைத்து பழைய பொருட்களை அலங்காரம் செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வரும், டீகோபேஜ் கலையினை வடிவமைக்க டீகோபேஜ் பேப்பர், டீகோபேஜ் கிளே, டீகோபேஜ் வார்னிஷ் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதை ஜப்பானியர்கள், ஜப்பானிஷ் ஆர்ட் என்று அழைக்கிறார்கள். இதில் பல வகையான பேப்பர்கள் இருக்கின்றன.

அதற்கான நிறுவனமும் இந்த பேப்பர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த பேப்பரைப் பயன்படுத்தி நாம் வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களையும் புதிது போல் மாற்றலாம். வெளிநாடுகளில் பழைய அலமாரிகளை கூட டீகோபேஜ் மூலம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார்கள். அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ஃபர்னிச்சர்கள் பல ஆண்டுகளுக்கு புத்தம் புதிதாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு நம் வீட்டில் ஒரு சாப்பாட்டு மேஜை பார்க்க பழசாக இருக்கும். அதனால் அதை வேறு மாற்ற திட்டமிடுவோம். சிலர் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரில் புதுசு வாங்குவார்கள். இனி அது எல்லாம் தேவையில்லை. அந்த மேஜையையே பழமை மாறாமல், புதுசு போல மாற்றி அமைத்திட முடியும். மேலும் அதன் மேல் வைக்கப்படும் மெழுகுவர்த்தி செட்டையும் டீகோபேஜ் பேப்பரை பயன்படுத்தி செய்யலாம்.

பார்க்கும் போது அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். இந்த டீகோபேஜ் கலையை தற்போது பலர் சிறுதொழிலாக செய்து வருகின்றனர்’’ என்றவர், வீட்டில் இருக்கும் பெண்கள் இதன் மூலம் ஒரு நிரந்தர வருமானத்தை பார்க்க முடியும் என்றார்.

‘‘பெண்களுக்கு ஒரு சிறந்த சிறுதொழிலாக டீகோபேஜ் உருவாகி வருகிறது. இது எந்த விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காது. வீட்டிலுள்ள பழைய பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் புதுப்பித்து பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலின் நண்பன் என்றே சொல்லலாம். இரும்பு, பித்தளை, அலுமினியம் போன்ற உலோகங்களிலும் மரப்பொருட்களிலும் இந்த டீகோபேஜ் செய்யலாம். உதாரணத்திற்கு வீட்டில் பயன்படாத தையல் மெஷினை டீகோபேஜ் செய்து வீட்டு அலங்கார பொருளாக மாற்றலாம்.

இந்த சிறுதொழில் மூலம் ரூபாய் 4000 முதல் 10000 வரை சம்பாதிக்கலாம். முதலீடு என்று பார்த்தால் மிக மிக குறைவு. சில ஆயிரம் ரூபாய்களில் இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம். அதே சமயம் ஒருவர் வீட்டை நாம் அலங்கரித்துக் கொடுப்பதன் மூலமும் அதிக அளவில் வருமானம் கிடைக்கும். தமிழ்நாட்டில் தற்போதுதான் இந்த கலை பிரபலமடைந்து வருகிறது. நான் என் ஆர்ட் ஸ்டுடியோ மூலம் பயிற்சி அளித்து வருகிறேன்.

என்னிடம் பயின்றவர்கள் தற்போது தங்களுக்கான ஒரு வருமானத்தை சம்பாதித்து வருகிறார்கள். டீகோபேஜ் மூலம் செய்யப்படும் பொருட்களை குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை மீண்டும் பயன்படுத்தலாம். இதை நாமே செய்வதால் ஒரு மன திருப்தியும் கிடைக்கும். வேலைவாய்ப்பு அரிதாகி வரும் சூழலில் சிறுதொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் சிறப்பான வருமானம் பார்க்கலாம். அதற்கு இந்தத் தொழிலும் ஒரு சிறப்பான வழி’’ என்றார் கிறிஸ்டினா ரஞ்சன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறை மாத கண்மணிகளுக்கு கூடுதல் கவனம் தேவை! (மருத்துவம்)
Next post டெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்!! (மகளிர் பக்கம்)