அது ஒரு ஹைக்கூ காலம்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 24 Second

‘‘எங்கள் வீட்டு டீவியும் சீர் செய்யப்படாமல்வாழா வெட்டியாக இருக்கிறது’’ என முதிர் கன்னியின் வாழ்வை சித்தரிக்கும் ஹைக்கூ கவிதைகளை 80 களில் ரசிக்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். அது போன்ற கவிதைகளை தனக்கென்று சொந்தமாக்கி இருப்பவர்களில் சென்னையை சேர்ந்த தேவகியும் ஒருவர். ஹைக்கூ கவிதையின் பூர்வீகம் ஜப்பான். புத்த மத சிந்தனைகளும் சீன கலாச்சாரமும் இணைந்த வடிவம் தான் இந்த ஹைக்கூ கவிதைகள். ஹைக்கூவின் தந்தை பாஷோவின் கவிதைகளை தாகூர் ஆங்கிலத்திலும் வங்காளத்திலும் மொழி பெயர்த்துள்ளார். 1916ம் ஆண்டில் ஹைக்கூவை மகாகவி பாரதி அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘‘80களில் ஹைக்கூ கவிதைகள் வீர நடைப்போட்டதுன்னு சொல்லலாம். பல பத்திரிகைகளில் ஹைக்கூவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. நிறைய ஹைக்கூ கவிதை நூல்களாக வெளிவந்தன. தெருவுக்கு இரண்டு ஹைக்கூ கவிஞர்கள் உருவானார்கள். அந்த காலம் ஹைக்கூவின் பொற்காலமாகவே இருந்தது. அமுதபாரதி, கன்னிக்கோயில் ராஜா, ஈரோடு தமிழன்பன், பேராசிரியர்.இரா.மோகன் போன்றவர்கள் ஹைக்கூவில் பிரபலமானார்கள். சாதி, வரதட்சணை, சமூகம் அரசியல் என அனைத்தையும் ஹைக்கூ பறைசாற்றியது. அதேபோல் நந்தவனத்தில் பூக்கள் சிதறிக் கிடந்து இருப்பதை போல் கிடந்த ஹைக்கூவை ‘‘காற்றில் மிதக்கும் சொற்கள்’’ என்ற பெயரில் தொகுத்தேன். அதில் பிரபலமான கவிஞர்களின் ஹைக்கூ படைப்புகள் இடம்பெற்றன.

ஹைக்கூவை நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம். திருவள்ளுவர் போல் ஏழு வார்த்தைகளில் உலகை அளக்க முடியுமா? அவ்வையாரின் ஆத்திச்சூடி, பாரதியின் புதிய ஆத்திச்சூடி எல்லாமே ரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்டு அவை நம் மனதில் இன்றும் பதிந்துள்ளன’’ என்றார்.
‘‘என்னோட பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம், சீர்காழி. சிறுவயதில் இருந்தே எனக்கு நிறைய புத்தகங்கள், கவிதைகள் வாசிக்க பிடிக்கும். குறிப்பாக பாரதி மற்றும் பாரதிதாசனின் கவிதைகள். அந்த காலத்தில் புகழ் பெற்ற ‘அணில்’, ‘முயல்’ போன்ற சிறுவர் பத்திரிகையில் சிறுவருக்கான பாடல்கள், கவிதைகள் எழுதி இருக்கேன்.

‘அரும்புகளின் ஆவேசம்’ என்ற தலைப்பில் என்னுடைய முதல் நூல் 1979ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ் சிற்றிதழ் எழுத்தாளர் சங்கத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி இருக்கேன். மாதாந்திர கூட்டங்கள் நடத்தி அந்தப் பகுதியில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து கவிதை வாசிப்பு, நூல் வெளியீடு போன்ற பல்வேறு இலக்கிய கூட்டங்களை நிகழ்த்தியுள்ளேன். அது மட்டும் இல்லாமல் தமிழில் எழுதிய ஹைக்கூ கவிஞர்களின் கவிதையை முதன் முதலில் தொகுப்பாக வெளியிட்ட பெருமை எனக்குண்டு. அதுமட்டும் இல்லாமல் ‘‘கவிதை’’ என்ற கவிதைகளுக்கான கையெழுத்துப் பிரதியை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தேன்’’ என்றவர் பாவேந்தர் நெறிச்செம்மல் விருது, பாரதி விருது, சிறந்த படைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாராளுமன்ற சிறப்புரிமைகள் எனும் பெயரில்: பொய்களையும் அவமானங்களையும் சமூக மயமாக்குதல் !! (கட்டுரை)
Next post அரிசியில் ஆரோக்கிய ஐஸ்கிரீம்!! (மகளிர் பக்கம்)