ஸ்பூனில் என்ன பிரச்னை? (மருத்துவம்)

Read Time:2 Minute, 30 Second

‘‘குழந்தைகள் வளர வளர வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பாடு ஊட்டுவதுதான் வழக்கமாக இருக்கும். இப்போது காலம் மாறி செராமிக், போர்க் என விதவிதமான ஸ்பூன்களில் உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். வளர்ந்து பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பிக்கும்போதும் மதிய உணவை சாப்பிடுவதற்காக ஸ்பூன் கொடுத்து அனுப்புகிறார்கள். அவ்வாறு செய்யாமல், கைகள் மூலமாக சாப்பிட குழந்தைகளை பழக்குவதே நல்லது. கைகளினால் சாப்பிடும்போது தொடு உணர்வு, சுவை உணர்வு ஆகிய புலன்கள் நன்றாக வேலை செய்யும். இதனால், உணவுக்கும் அவர்களுக்கும் நேரடியாக ஒரு பந்தம் ஏற்படும். ஈடுபாட்டுடன் சாப்பிட்டு முடிப்பார்கள். இதன்மூலம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதற்கான(Binge Eating) வாய்ப்புகளும் குறையும்.

இதற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் முன் மாதிரியாக இருப்பது அவசியம். குழந்தைகளுடன் சாப்பிடும்போது ஸ்பூன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையாக இருக்கும்போதே இந்த எண்ணம் பழக்கமாக மாறுவதற்கு இட்லி, பழங்கள், சப்பாத்தி, பூரி, தோசை போன்றவற்றை மதிய உணவாகக் கொடுத்து அனுப்பலாம்.ஸ்பூன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஸ்பூன் உபயோகிப்பதால் தாடை அமைப்பு மாறும் என்று கூறுவதற்கும் ஆதாரம் கிடையாது. ஆனால் பிளாஸ்டிக், சில்வர், செராமிக் மற்றும் டியூரபிள் ஸ்பூன் இவற்றில் எதை பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். சில்வர், செராமிக் ஸ்பூன்கள் பாதுகாப்பானவை. பிளாஸ்டிக் ஸ்பூன் உபயோகிப்பது தவறு. பிளாஸ்டிக் ஸ்பூனை பயன்படுத்தினாலும் ஒருதடவை பயன்படுத்திய பின் தூக்கி போட்டுவிட வேண்டும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மியான்மரின் குட்டி செஃப்! (மகளிர் பக்கம்)
Next post குட்டிப்பாப்பாவுக்கு ஆன்லைனில் பர்ச்சேஸ் பண்ணலாமா ? (மருத்துவம்)