சுமார் ப்ரெய்னும் சூப்பர் ப்ரெய்ன் ஆகும்!! (மருத்துவம்)
பள்ளியில் தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். சில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே தேர்வு நேரங்களில் பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதும் உண்டு.
இந்த தோப்புக்கரணம் என்பது வெறும் மதம் சார்ந்த வழிபாடோ, நம்பிக்கையோ மட்டுமே அல்ல: மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது என்று அமெரிக்காவில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தோப்புக்கரணத்தின் மூலம் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகிறது என்பதால் ‘சூப்பர் ப்ரெய்ன் யோகா’ என்றும் தோப்புக்கரணத்தை குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் அமெரிக்கர்கள்.
குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் என்பவர், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கும், மாணவர்களுக்கும் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரீட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்த உதாரணத்தையும் தன்னுடைய ஆய்வறிக்கையில் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதை வலியுறுத்தும் வகையில் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர், காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கியமான அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி, மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார்.
இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலம் அடைகிறது என்பதே ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பிரதான விஷயம். தோப்புக்கரணம் போடும்போது ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் பதிவு செய்து பார்த்த பிறகே இதை அதிகாரப் பூர்வமாகக் கூறியிருக்கிறார்கள்.
மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதால் ஆட்டிஸம், அல்சைமர் போன்ற நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை அமெரிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுபற்றி நரம்பியல் நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரனிடம் பேசினோம்.
‘‘நம் நாட்டில் தோப்புக்கரணம் என்று அழைக்கப்படும் இந்த பயிற்சியை அமெரிக்காவில் ‘சூப்பர் ப்ரெய்ன் யோகா’ என்கின்றனர். இரு கைகளையும் குறுக்காக வைத்து காதுகளின் அக்குபிரஷர் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளைக்கு அதிகமாகச் செல்லும் ரத்த ஓட்டத்தினால் மூளையில் உள்ள நியூரான்கள் தூண்டப்படுகின்றன. இதனால் இரண்டு பகுதியில் உள்ள மூளைப்பகுதியும் சமநிலையில் தூண்டப்பட்டு சமநிலையில் செயல்படவும் செய்கிறது.
கண்டிப்பாக சூப்பர் பவர் யோகா மூலம் மூளை செயல்பாடுகளைத் தூண்ட முடியும் என்பதே எல்லோருடைய ஆய்வறிக்கையாகவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மூளைக்கு நன்மை அளிக்கக்கூடிய இந்தப் பயிற்சியை தவறாமல் எல்லோருமே செய்யலாம். குறிப்பாக, மாணவர்கள் தவறாமல் செய்தால் கல்வித்திறனில் நல்ல முன்னேற்றத்தைப் பெற முடியும்’’ என்கிறார்.
கால்களை
உங்கள் தோள்களின் அகலத்துக்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும்போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கிற முறையிலேயே காண்போமா?
அப்படியே உட்கார்ந்து மூச்சை வெளியே விடவேண்டும். மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரே தாளலயத்துடன் இருக்கட்டும்.ஆரம்பத்தில் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று தோப்புக்கரணம் போடும் எண்ணிக்கையை அதிகரியுங்கள்.
இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9 என்று பழகியபிறகு 21 முறை தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன் 70% மூளைக்குச் சென்று உடலுக்கு புத்துணர்ச்சியும், உள்ளத்துக்கு ஒரு நிலைப்பாடும் கிடைக்கிறது.மூச்சை நன்றாக ெளியே விட்டபடியே மெதுவாக முட்டியை மடக்க வேண்டும்.
Average Rating