ஜனவரி 28 போலியோ சொட்டு மருந்து தினம் ! (மருத்துவம்)

Read Time:4 Minute, 46 Second

போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதற்கட்ட சொட்டு மருந்து முகாம், ஜனவரி 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்படவுள்ளது.

இளம்பிள்ளை வாதம் உங்கள் குழந்தைக்கு வராமல் தடுக்க, எளிமையான வழிகள் பல உள்ளன. குழந்தை பிறந்த பிறகு, 6, 10 மற்றும் 14-வது வாரங்களில் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்; அதன் பின்னர், ஒன்றரை வருடத்திலும், குழந்தைக்கு 5 வயதாகும்போதும் போலியோ சொட்டு மருந்து கண்டிப்பாக அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் நடமாடும் சொட்டு மருந்து முகாம்களும் நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

சுகாதார அலுவலர்கள், அரசுத் துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 2 லட்சம் பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால், போலியோ அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில், இன்னும் போலியோ பாதிப்பு உள்ளது. இதனால் அங்கிருந்து வட மாநிலத்தவருக்கு பரவ வாய்ப்புள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபுரிபவர்களது குழந்தை
களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவர்களை
கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

போலியோ எனப்படுகிற வைரஸ் தொற்று, வாந்தி, தலை மற்றும் தசைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தென்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

போலியோவால் தாக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் ஒரு பகுதி தளர்ச்சி அடையும் அல்லது செயல்படாதவாறு முடம் ஆகலாம். பெரும்பாலும், இளம்பிள்ளை வாதம் ஒரு காலிலோ, இரண்டு கால்களிலோ வரலாம். நாட்கள் செல்லச்செல்ல முடங்கிய கால், மற்ற காலினைப் போல், சீராக வளராமல் சூம்பி காணப்படும்.

போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசியம் ஏற்பட்டால் ஒழிய அனாவசியமாக எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது. கட்டாயத் தேவை இருந்தால் மட்டுமே ஊசி போடலாம். அவசியம் இன்றி போடப்படும் ஊசியால் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மழலைப் பருவத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உள்ளது. எனவே, இளம் தாய்மார்கள் கூடுமான வரை தொடர்ந்து குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறு தொழில் – ஆன்லைனில் ஆடைகள் விற்கலாம் !! (மகளிர் பக்கம்)
Next post தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவைதானா ?! (மருத்துவம்)