பேச்சுவார்த்தைக்கு கால நிர்ணயம் புலிகளுக்கு இலங்கை அரசு வேண்டுகோள்

Read Time:3 Minute, 46 Second

ltte-sl-flag.gifஅமதிப்பேச்சுவார்த்தைக்கு கால நிரணயம் செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று புலிகளை இலங்கை அரசு கேட்டுக்கொள்ளும் என தெரிகிறது. இது குறித்து புலிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி இலங்கை அரசின் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஸ்ரீபாலாவுக்கு இலங்கை அரசு உத்தரவிடடுள்ளது. இலங்கையில் கடந்த 2002 ம் ஆண்டு முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த போர் நிறுத்தத்தை மீறி இலங்கை ராணுவமும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளும் அவ்வபோது சண்டையிட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வரும் மோதல்களில் இது வரை 1000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் நார்வே நாட்டு முயற்சியின் கீழ் இம்மாத இறுதியில் ஸ்விட்சர்லாந்தில் அமைதிப்பேச்சுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால் இதற்கான பேச்சுவார்த்தைக்குழுவினர்கள் பற்றியோ பிரிதிநிதிகள் பற்றியோ இரு தரப்பிலும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நிகழ்ச்சி குறிப்புகளும் தயாரிக்கப்பட வில்லை.

இந்த பேச்சுவார்த்தைக்கான கால நிர்ணயத்தை வெளியிடுமாறு புலிகளை இலங்கை அரசு கேட்டுக்கொளள இருக்கிறது. இது குறித்து இலங்கை பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவர் நிமல் ஸ்ரீபாலா டி சில்வாவுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

எண்ண தேதியில் எவ்வளவு நாட்களுக்கு பேச்சுவார்த்தையை நடத்துவது என்பது குறித்து ஒரு கால நிரணயத்தை அறிவிக்குமாறு புலிகளை கேட்டு தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிடடுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 28,29 ஆகிய தேதிகளில் ஸ்விட்சர்லாந்தில் அமைதிப்பேச்சு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்லது.

பேச்சுவார்த்தைக்கு செல்ல வடக்கு பகுதியில் உள்ள புலிகளின் தலைவர்களை கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு எப்படி அழைத்து வருவது என்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள். இது மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே அவநம்பிக்கை நிலவுவதால் ஜெனிவாவில் இரு தரப்பினரையும் வெவ்வேறு ஓடேடல்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இலங்கையில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் அமைதிப்பேச்சுவார்த்தையை துவக்குமாறு இரு தரப்பினருக்கும சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை அடுத்தவாரம் ஜெனிவாவில் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தோல்வியுடன் ஓய்வு பெற்றார் சூமாக்கர்!
Next post பாகிஸ்தானில் தினமும் ரூ.1000 சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்