கசப்பான பாகற்காயின் ‘இனி’ப்பான தகவல்கள் !! (மருத்துவம்)

Read Time:3 Minute, 6 Second

சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

* பாகற்காயில் மிதிபாகல், கொடி பாகல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் ஒரே மாதிரி பலன்கள் தருகின்றன.

* பாகற்காய் வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்துவிடும். குடல் புழுக்களை நீங்க வைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

* கல்லீரல், கண்நோய், பக்கவாதம் ஆகிய நோய்களைக் கட்டுக்குள் வைக்கும்.

* தினமும் பாகற்காய் சாற்றோடு, சிறிது எலுமிச்சம்பழச்சாறு கலந்து அருந்தி வர, ரத்தம் சுத்தமாகும்.

* சொறி, சிரங்கு இருந்தால் ஆறிவிடும்.

* பாகற்காய் சாறு, தேன் சிறிது கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, ரத்த சோகை, காச நோய் கட்டுக்குள் வரும். நிவாரணம் கிடைக்கும்.

* பாகற்காய் சாற்றுடன் சிறிது வெந்தயம் சேர்த்து சாப்பிட்டுவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

* இதை வில்லைகளாக நறுக்கி, காய வைத்துப் பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு பெருமளவு கட்டுப்படும்.

பாகற்காய் கசப்பு சுவையாக இருப்பதால், அதை சுவையாக சமைக்க சில டிப்ஸ்…

* பொரியல் கூட்டு போன்றவற்றில் தேங்காய்த்துருவல், கேரட் துருவல், வெல்லம் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவை கூடும்.

* பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி பிசிறி சற்று நேரத்தில் எடுத்து பிழிந்தால் கசப்பு சுவை போய்விடும். பிறகு சமைக்கலாம்.

* நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து ஊற வைத்து, காய வைத்தால் சுவையான பாகற்காய் வற்றல் தயார்.

* சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது கடலை மாவு, அரிசி மாவு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துப் பிசைந்து, போண்டாவோ, பக்கோடாவோ செய்யலாம்.

* மற்ற ஊறுகாய்கள் செய்வது போன்றே, பாகற்காயிலும் ஊறுகாய் செய்யலாம். பல மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை விதவிதமாகச் சமைத்து சாப்பிட்டால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவின் Tejas வேண்டாம்..இடையில் புகுந்த China!! (வீடியோ)
Next post புளியின் மகத்துவம் !! (மருத்துவம்)