தோல்வியுடன் ஓய்வு பெற்றார் சூமாக்கர்!

Read Time:2 Minute, 20 Second

Schumacker.jpgஃபார்முலா-1 கார் போட்டிகளில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் சூமாக்கர் தனது கடைசி கிராண்ட்ப்ரீ போட்டியில் நான்காவதாக வந்தார்! பிரேசில் தலைநகர் சோ பாலோவில் நேற்று நடந்த பிரேசில் கிராண்ட்ப்ரீ போட்டியில் சூமாக்கரின் ஃபெராரி அணி சகாவான ஃபெலிபி மாசா முதலிடத்தை வென்றார். இந்த ஆண்டு பல கிராண்ட்ப்ரீகளை வென்ற ஃபெர்னாண்டோ ஆலன்சோ 2வது இடத்தையும், ஹோண்டா அணியின் ஜென்சன் பட்டன் 3வது இடத்தையும் வென்றனர். நேற்று நடந்த போட்டியில் டயர் வெடித்ததன் காரணமாக பின்னடைவைச் சந்தித்தும் சூமாக்கர் 4வது இடத்தைப் பிடித்தது ஆச்சரியம்தான்.

10வது இடத்தில் இருந்து துவங்கிய சூமாக்கர், முதல் சுற்றின் முடிவிற்குள்ளேயே 7வது இடத்திற்கு முன்னேறினார். ஆனால், 9வது சுற்றில் நுழையும் பொழுது டயர் வெடித்தது. அதனால் மெதுவாகச் சென்று டயரை மாற்றிக் கொண்டு மீண்டும் போட்டியில் கலந்துகொண்டபோது 18வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அவ்வாறு இருந்தும் 71 சுற்றுகள் கொண்ட போட்டியில் பாதி தூரத்தை எட்டுவதற்குள் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறினார்.

இறுதிச் சுற்றுகளில் மிகச் சிறப்பாக ஓட்டி 4வது இடத்தைப் பிடித்த அவருடைய ஓட்டுதல் திறன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கடந்த 16 ஆண்டுகளாக ஃபார்முலா-1 கார் பந்தயங்களில் 91 வெற்றிகளைப் பெற்று 7 ஆண்டுகள் சாம்பியன் பட்டத்தை வென்ற சூமாக்கருக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி விடை கொடுத்தனர்.

Schumacker.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறீ.ல.சு.க – ஐ.தே.க. இடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் இன்று கைச்சாத்து !
Next post பேச்சுவார்த்தைக்கு கால நிர்ணயம் புலிகளுக்கு இலங்கை அரசு வேண்டுகோள்