பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா! (மகளிர் பக்கம்)
தீபாவளி என்றால் பட்டாசு இல்லாமல் இல்லை. பண்டிகையின் ஒரு வாரத்திற்கு முன்பே பட்டாசு சத்தம் முழங்க ஆரம்பித்தவிடும். பட்டாசு வெடிக்கும் போது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்…
*ஐ.எஸ்.ஐ. முத்திரை உடைய உரிமம் பெற்ற தரமான பட்டாசுகளைப் பார்த்து வாங்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிக்கும்போது, பட்டாசு பெட்டியை மூடி வைக்க வேண்டும்.
*மத்தாப்பு, சங்கு சக்கரம் மற்றும் புஸ்வானம் உள்ளிட்டவற்றில் ஆபத்து அதிகம் இல்லை. ஆனாலும், சில சமயங்களில் இவை வெடிக்கலாம். அதனால் குழந்தைகள் வெடிக்கும் போது, பெரியவர்கள் அருகே இருப்பது நல்லது.
*மிக அதிகமான சப்தத்தையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் வெளிநாட்டுப் பட்டாசுகளைத் தவிர்த்துவிடுங்கள். அவை ஆபத்தானவை மட்டுமல்ல. தடை செய்யப்பட்டதும்கூட. அவற்றை வெடிப்பது சட்டப்படி தவறு.
*ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுப்புது ரகங்களில் பட்டாசுகள் அறிமுகம் ஆகின்றன. அவற்றை எப்படி வெடிப்பது என்று அட்டைப் பெட்டிகளின் மேலே குறிப்பு இருக்கும். அதைக் கவனமாகப் படித்து முறையாகப் பின்பற்றுங்கள்.
*பட்டாசின் திரிக்கு முன்னால் முகத்தை நீட்டவோ, கையில் எடுத்து வெடிக்கவோ கூடாது.
*பட்டாசுகளை, அதற்கென விற்கும் நீண்ட வத்திகளை பயன்படுத்தி வெடிக்க வேண்டும். பூஜைக்கு பயன்படுத்தும் ஊதுவத்திகளை பயன்படுத்தக் கூடாது.
*இறுக்கமான பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்து, செருப்பு போட்டபடி பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பெரியோர், குழந்தைகள் யாரா இருந்தாலும் பட்டாசுகளை, சட்டைப்பாக்கெட்டில் வைத்து ஒவ்வொன்றாக எடுத்து வெடிக்கக் கூடாது.
*பட்டாசு காயம் பட்டால், அங்கு சலைன் தண்ணீரை ஊற்றலாம். 5 மில்லி லிட்டரில் ஆரம்பித்து 1 லிட்டர் பாட்டில் வரை மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. இது சிறந்த ஆன்டிபயாடிக்காகச் செயல்படும். சலைன் ஊற்றி சுத்தம் செய்த பிறகு சில்வர் சல்ஃபாடைசின் ஆயின்மென்ட் போடலாம். தீக்காயத்தினால் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியாக்கும். இந்த முதலுதவி செய்ததும் உடனே மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.
*கண்ணில் தீக்காயம் பட்டால் கூடுதல் கவனத்துடன் அந்தக் காயத்தை ஆற்ற வேண்டும். கண்ணில் காயம் பட்டவுடன் சுத்தமான தண்ணீரால் கழுவி விட்டு ஐ டிராப்ஸ் போடுவது நல்லது.
*தீக்காயத்தில் சிறியது, பெரியது என்று எதுவும் இல்லை. எந்தவிதமான தீக்காயமாக இருந்தாலும், காயம் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குள் டிடி தடுப்பூசி போட வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating