வேர் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம்!! (மருத்துவம்)
தமிழகத்தை பொறுத்தவரை இரண்டாம் அலையின் தீவிரம் முதலில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்தான் அதிகரித்தது. சென்னையில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் மேல் சென்றது. இதையடுத்து இரண்டாம் அலையின் தீவிரமும் சென்னையின் சுற்றுப்புறங்களில்தான் முதலில் குறையத் தொடங்கியது. இதையடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களுக்குதான் முதலில் அதிக தளர்வுகள் கொடுக்கப்பட்டன.
பல்வேறு உலக நாடுகளில் 3-ம் அலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் புதிய உருமாறிய வைரஸ் உருவாவதுதான். இந்தியாவில் இரண்டாம் அலையின்போது தீவிரமாக இருந்த டெல்டா வைரஸ், தற்போது சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி அங்கு அடுத்த அலை உருவாகக் காரணமாக அமைந்துள்ளது. பெருந்தொற்று என்பது முடிவுக்கு வர வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் அல்லது தொற்று பாதித்து மீள வேண்டும்.
தொற்று ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி உருவானவர்களுக்கு அதன் அளவு குறைவது, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாத புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதல், ஏதாவது புதிய வைரஸ் அதிக அளவில் பரவும்போது தளர்வுகள் வழங்கப்படுவது, கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாதது இவையெல்லாம் 3-ம் அலைக்கான காரணங்களாக அமையும்.
தடுப்பூசி எடுத்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் 3-ம் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் இரண்டாம் அலையைவிட மூன்றாம் அலை தீவிரமானதாக இருக்கும் என்றும் இரண்டு வேறு கணிப்புகள் உள்ளன. இரண்டில் எது சரி என்ற முடிவுக்கு வர முடியாத நிலை உள்ளது. ஆனால், இரண்டாம் அலையைப் போன்று மூன்றாம் அலை தீவிரமாக இருக்காது என்று பெரும்பாலான நிபுணர்களால் கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு, தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய உருமாறிய வைரஸ் வேகமாகப் பரவினால் 3-ம் அலையின் பாதிப்பு மோசமாக இருக்கும். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தனி நபருக்கு தீவிர பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள், அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் தீவிர பாதிப்பைத் தடுக்க முடியும். இரண்டாம் அலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் மூன்றாம் அலை என்பது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை மட்டுமே தாக்கும் என்றும் கூறிவிட முடியாது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மத்தியில் உயிரிழப்பு, தீவிர பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற தீவிரத்தன்மை ஏற்படாது. தொற்று குறைய வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் அல்லது தொற்று பாதித்து மீள வேண்டும்.
அப்போதுதான் ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு தொற்று பரவுகிறது (R0) என்ற விகிதம் தெரியும். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி தேவையா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை. அதனால் அரசு சார்பிலும் மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்படவில்லை.
இரண்டாம் அலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை.
பெருந்தொற்று என்பது முடிவுக்கு வர வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் அல்லது தொற்று பாதித்து மீள வேண்டும்.
Average Rating