சீனா வழங்கிய நிதி: ஒரு வாளி நீரில் ஒரு துளி!! (கட்டுரை)
பல்லுயிர் பாதுகாப்புக்கு சீனா நிதி வழங்கியமை ஒரு சிறந்த ஆரம்பம்தான். ஆனால், அது ஒரு வாளியிலுள்ள முழு நீரில் ஒரு துளிபோல மிகவும் குறைந்த அளவேயாகும் என்று விமர்சிக்கப்படுகிறது.
வளரும் நாடுகள் எதிர்நோக்கும் இலக்கை அடைவதற்கு எல்லா செல்வந்த நாடுகளும் உதவிகள் புரியவேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பூமிக் கிரகத்தில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாக்கும் ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்வதற்காக 195 நாடுகள் இணைந்து இவ்வாரம் இரண்டு பகுதி யு.என். உச்சி மாநாடொன்றை ஆரம்பித்தன. இம்மாநாடு அடுத்த வருடம் மே மாதம் சீன நகரமான குன்மிங்கில் முடிவடையும்.
இந்தப் பல்லுயிர் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் (COP15 biodiversity virtual summit) சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் பேசுகையில், வளரும் நாடுகளில் பல்லுயிர் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக 1.5 பில்லியன் யுவான் (232.47 மில்லியன் டொலர்) ஆரம்ப நிதியை அறிவித்தார்.
ஆனால் சீனாவின் நிதி உறுதிமொழியானது ஒரு வாளி தண்ணீரில் ஒரு துளிபோன்று ஒரு சக்திமிகு நாடு என்ற வகையில் ஏமாற்றத்தைத் தருகிறது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்னைத் தொட்டியின் சிரேஷ்ட பல்லுயிர் ஆலோசகர் சார்ல்ஸ் பார்பர் கூறினார்.
நான் நம்பியிருந்தேன் சீனா போன்ற ஒரு பெரிய நாடு குறைந்தபட்சம் 1 பில்லியன் வழங்குமென்று. அது தன் நாட்டின் எல்லைப் பகுதிக்குள் உள்ள பல்லுயிர்கள் பற்றி தெளிவாக மதிப்பிடக்கூடிய நிலையில் உள்ளது.
அதற்கேற்ற தேவையின்படி நடந்துகொள்ள விரும்பும் என்று நினைத்தேன் என்று கடந்த மாதம் தனியார் நன்கொடையாளர்கள் வழங்கிய 5 பில்லியன் அறிவிப்பை மேற்கோள் காட்டி தொம்ப்ஸன் ரொய்ட்டர்ஸ் சம்ளேனத்துக்குக் கூறினார்.
ஆனாலும் இது ஒரு ஆரம்ப நிதியாக இருந்து அடுத்த வருடம் இம்மாநாடு ஆரம்பமாகும்போது கணிசமாக நிதி அதிகரிக்குமானால் இது ஒரு நல்ல ஆரம்பம் என்று அவர் மேலும் கூறினார்.
மே மாதம் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையொன்றின்படி பூமியில் இயற்கையை பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் உலகளாவிய வருடாந்த செலவுகள் 2030க்குள் சுமார் 350 பில்லியன் டொலராகவும், 2050க்குள் 536 பில்லியன் டொலராகவும் உயருமென்று தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் புதிய நிதியத்துக்கு 1.5 யுவானை ஆரம்ப நிதியாக வழங்குவதாகவும், ஏனைய பகுதிகளிலிருந்தும் நிதியை வரவேற்பதாகவும் கூறினார்.
அவர் அத்துடன் ஒரு புதிய தேசிய பூங்காக்கள் திட்டத்தையும் அறிவித்தார். இந்த பூங்காக்கள் சீனாவின் பான்டா, புலி மற்றும் சிறுத்தை வாழ்விடங்கள் மற்றும் வடமேற்கில் உள்ள முக்கிய இயற்கை மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுபற்றி பார்பர் கூறுகையில், இவை நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் படிகள். ஆனால் சோயாபீன்ஸ், பாம்ஒயில் மற்றும் மரம்போன்ற காடழிப்புடன் தொடர்புடைய பொருட்களின் தேவை தொடர்பான சூழல் பாதுகாப்பு பற்றி சீனா எந்த கருத்தும் தெரிக்கவில்லையென்று கூறினார்.
சீனாவின் பரந்த அளவிலான மீன்பிடி, கடல்வாழ் உயிரின பாதிப்புக்களை கட்டுப்படுத்தல் மற்றும் சீனாவில் வனவிலங்குகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தல் என்பன பற்றி சீன ஜனாதிபதியின் உரையில் எதுவும் இல்லையென்றும் பார்பர் சுட்டிக்காட்டினார்.
சிறந்த ஆரம்பம்
இந்த விடயத்தில் பயனுள்ளதாக இருக்கவும் மற்றும் வளரும் நாடுகள், பூர்வீக மற்றும் உள்ளுர் சமூகங்கள் இயற்கையைப் பாதுகாக்க உதவும் வகையிலும் ஒரு பல்லுயிர் நிதியம் ஆண்டுதோறும் குறைந்தது 80 பில்லியனை விநியோகிக்கவேண்டும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட இயற்கைக்கான திட்டபணிப்பாளர் பியென் ஓ டொன்னெல் மதிப்பிட்டார்.
இதுவரை சீனா, ஐக்கிய நாடுகள், ஜப்பான் மற்றும் செல்வந்த நாடுகள் பல்லுயிர் பாதிப்பை உண்மையில் நிவர்த்தி செய்யத் தேவையான அளவு வளங்களை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மலேஷியாவைத் தளமாகக் கொண்ட மூன்றாம் உலக வலையமைப்பின் ஆய்வாளர் லிம் லீ ஸிங் குறிப்பிடுகையில், வளர்ந்த நாடுகள் தற்போதைய பவ்லுயிர் பாதுகாப்பு ஒப்பந்தங்களின்படி நிதி வளங்களை வழங்க சட்டரீதியாக கடமைப்பட்டுள்ளன என்று கூறினார்.
சீனா தலைமை நிலையில் இருந்தபோதிலும் அத்தகைய கடமைகளைச் செய்யவில்லை. அது அறிவித்த நிதி, ஆரம்பமாக இருக்கவேண்டுமென்று கூறினார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லயென் கடந்த மாதம் கொள்கை உரையில், ஐரொப்பிய ஒன்றியம் இயற்கையை பாதுகாக்க அதன் நிதியை, தொகை குறிப்பிடாமல் இரண்டு மடங்காக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜூன் மாதத்தில் ஜி7 தலைவர்கள், காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பை சமாளிக்கும் உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.
சீனாவின் நிதி அறிவிப்பானது சரியான திசையில் அடியெடுத்து வைக்கவும் இதுபோன்ற பங்களிப்புகளில் முதன்மையானதாகவும் இருக்க வேண்டும் என்று அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் சர்வதேச கொள்கைக்கான உபதலைவர் சுஸான் லீபர்மென் கூறினார்.
உள்நாட்டிலும், எல்லை கடந்தும் பல்லுயிர் பாதுகாப்புக்கு சீனா வழங்கும் ஒத்துழைப்பை வரவேற்கிறோம். சீனாவின் நிதி அர்ப்பணிப்பு அதிகரிக்கவேண்டுமென்றும் விரும்புகிறோம் என்றும் லீபர்மென் மேலும் கூறினார்.
Average Rating