அமெரிக்க உதவிச் செயலர் ரிச்சட் பவுச்சர்

Read Time:2 Minute, 14 Second

ANI.sflag.gifசமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மோதல்களையும் வன்முறைகளையும் நிறுத்துவதற்கும் இரு தரப்புக்கும் இதுவே உகந்த தருணமென தென், மத்திய, ஆசிய அமெரிக்க உதவிச் செயலாளர் ரிச்சட் பவுச்சர் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர், பத்திரிகையாளர் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது மிகவும் சிக்கலான சூழ்நிலை நிலவுகின்றது. இதனால், அனைத்து சமூகங்களும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இவையணைத்துக்கும் ஒரே தீர்வு, இரு தரப்பினராலும் உத்தேசிக்கப்பட்டுள்ள சமாதான பேச்சுவார்த்தையை ஒரு ஆரம்பமாக கருதி, இரு தரப்பும் தமது பிரச்சினைகளை ஆழகாக தீர ஆராய்வதே உகந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை புது ஆரம்பமாகும். இலங்கை வரலாற்றில் புது திருப்பமாகவும் இருக்க வேண்டுமென அழுத்தம் கொடுப்பதற்காகவே தான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டுள்ளேன்

இங்கிருந்த காலப்பகுதியினுள் தான் ஜனாதிகதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் சமாதான செயலாளர் நாயகம், இராணுவத் தளபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடியதுடன் சமாதான பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையும் அதற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் எடுத்துக் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம்
Next post அமெரிக்க ராக்கெட்டில் மீண்டும் ஒரு இந்திய பெண் விண்வெளிக்கு பயணம்