மேக்கப் பாக்ஸ் – ஐப்ரோ ஸ்பெஷல்!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 37 Second

ஒரு முகத்துக்கு அழகு என்பதைத் தாண்டி, ஒரு முகத்தின் முழுமைக்கே முக்கியத் தேவை புருவங்கள்தான். அந்தப் புருவங்களுக்கு மேலும் அழகு சேர்ப்பது எப்படி? சொல்கிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் ரம்யா அழகேந்திரன்.முதலில் எந்த முக வடிவத்துக்கு எந்த வடிவத்தில் புருவங்கள் அழகு? இதுதான் மிக முக்கியம். ஐப்ரோ ஸ்டெப் நிறைய இருக்கு. ஆனால் முக வடிவங்கள் மொத்தம் 6. வட்டம், நீள்வட்டம், நீளம், சதுரம், டைமண்ட், இதய வடிவம்.

ஓவல் வடிவ முகத்திற்கு ஷேடோ ஆர்ச் அல்லது மென்மையான ஆங்கிள். வட்ட முகத்துக்கு மேலே தூக்கினார் போல ஆங்கிள் நல்லா இருக்கும். நீண்ட முகத்துக்கு ஃபிளாட் ஐப்ரோ கச்சிதமா இருக்கும். சதுரமான முகமெனில் திக்கான ஆங்கிள் புருவங்கள் நல்லா இருக்கும். இதய வடிவ முகத்துக்கு புருவங்கள் சற்றே மேலே தூக்கியது போல் ஆங்கிள் ஆர்ச் வடிவம் கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும். டைமண்ட் வடிவ முகத்துக்கு ரவுண்டு வடிவ புருவங்கள் கச்சிதமா இருக்கும்.

புருவங்கள் வரைவது, அது ஒரு பெரிய கலை. மேலும் எங்கே ஆரம்பித்து எங்கே முடிக்கணும் என்கிறதுதான் இதில் முக்கியம். இரண்டு புருவங்களுக்கு இடையேயான இடைவெளிதான் நம்ம முகத்தை சீராக காண்பிக்கும். மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் புருவங்கள் வரையத் துவங்கி நம்முடைய வடிவத்துக்கு ஏத்தமாதிரி ஐப்ரோ போட்டுக்கொள்ள வேண்டும். சிலர் ரெண்டு புருவங்களும் நெருக்கமா இருக்கிற மாதிரி ஐப்ரோ போட்டுக்குவாங்க. இந்த நெருங்கிய புருவங்கள் சாதாரண முகத்தையும் கோபமான முகமா காட்டும்.

சினிமாவில் வில்லன் கேரக்டர்கள் புருவங்கள் மேக்கப் கொண்டுதான் கோபமான முகமா மாத்துவாங்க. கோபமா ஆக்ரோஷமாக வில்லன்களைக் காட்ட அடர்த்தியான நெருக்கமான புருவங்கள் இருக்கற மாதிரி மேக்கப் போடுவாங்க. மிகச் சிலருக்கு மட்டுமே ஒட்டிய புருவங்கள் அழகு. அதில் மிக அழகு நம்ம நடிகை கஜோல். அதைப்போல் சில முஸ்லிம் பெண்களுக்கும் இந்த இணைந்த புருவங்கள் அழகாக இருக்கும்.

ஐப்ரோ ஷேட் மற்றும் வெரைட்டிகள்

ஐப்ரோ பொறுத்தவரைக்கும் பவுடர், ஜெல், பென்சில். இவைகள்தான் பில்லர்கள். நேச்சுரலா ஐப்ரோ இருக்கணும்ன்னு நினைக்கிறவங்க, மேலும் பென்சில், ஜெல் இதுகளை எல்லாம் அவசரத்துல எனக்கு சரியாக பயன்படுத்தத் தெரியாது, எவ்வளவு முயற்சி செய்தாலும் திக்கா ஆகிடுதுன்னு புலம்புறவங்க கண்ண மூடிக்கிட்டு பவுடர் டிக் பண்ணலாம். பவுடர் நேச்சுரல் லுக் கொடுக்கும். தினம் தினம் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என பவுடரை பயன்படுத்தலாம். ஐப்ரோ நல்லா திக்காக தெரியணும்.

மேலும் வடிவமும் ஷார்ப்பா இருக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க குறிப்பா எனக்கு நல்லா ஐப்ரோ வரையத் தெரியும்னு நினைக்கிறவங்க பென்சில், ஜெல் பயன்படுத்தலாம். பென்சில் மற்றும் ஜெல் ஐலைனர் பயன்படுத்தும் போது புருவங்களின் முடிவில் எவ்வளவு வேண்டுமானாலும் திக்காக கொடுக்கலாம். ஆனால் ஆரம்பிக்கும் இடத்தில் முடிந்த வரை லைட்டாக கொடுப்பது நல்லது. எப்பவுமே நம் புருவம் கலர் என்னவோ அதை விட லைட் நிற ஐப்ரோ மேக்கப் மட்டுமே பயன்படுத்தணும். உதாரணத்துக்கு நம்ம புருவம் கருப்பு நிற முடிகளோடு இருந்தால் பிரவுன் நிற பயன்பாடு நல்லது. அதேபோல் பிரவுன் நிற புருவம் எனில் சாம்பல் நிறம் பயன்படுத்த வேண்டும்.

ஐப்ரோ ஹைலைட்டர்

மேக்கப் முடிந்தபிறகு புருவங்களை ஹைலைட் செய்ய லைட் ஷேட் கன்சீலர் கொண்டு புருவங்களை ஹைலைட் செய்யலாம். இந்த ஹைலைட் மேற்கொண்டு புருவங்களை பளிச்செனக் காட்டும். இவை தவிர்த்து நிரந்தரமான புருவங்களும் கூட உள்ளன. 3 முதல் 4 வருடங்கள் வரை வரும் புருவங்களை மைக்ரோ பிளேடிங் என்போம். உங்களுக்கு பிடித்த வடிவத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

டாட்டூ ஸ்டைலில் நம் முகத்துக்கு என்ன ஷேட் கச்சிதமாக பொருந்துமோ அதை சரியாக அளந்து டாட்டூ இன்க் கொண்டு புருவங்களை நிரந்தரமாகவே வரைந்து கொள்வது. இந்த இரு ஸ்டைல்களும் ரூ.15,000 துவங்கி 30 ஆயிரம் வரையிலும் கூட செய்துக்கலாம். அதேபோல் ஐப்ரோ பென்சில்கள் ரூ.20 முதல் புராடெக்ட் தரம் பொருத்து இதன் விலை ரூ.500, 1000 வரை கூட செல்லும். ஐப்ரோ ஜெல் ரூ.200 துவங்கி ரூ.3000 வரை செல்லும். ஐப்ரோ பவுடர் ரூ.250 துவங்கி ரூ.5000 வரை கூட நிறைய வெரைட்டிகள் உள்ளன. குறைந்தபட்சம் நல்ல பிராண்டினை தேர்வு செய்வது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்… !! (கட்டுரை)
Next post நவராத்திரி சுபராத்திரி! (மகளிர் பக்கம்)