சளிக்காய்ச்சலை சமாளிக்கும் வீட்டு வைத்தியம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 41 Second

வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி, தொண்டை கட்டு, இருமல் போன்ற பிரச்னைகள் வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி போன்றவை ஏற்படுகிறது.

* கற்பூரவல்லி, புதினா, துளசி, தூதுவளை போன்றவற்றை கொண்டு இப்பிரச்னைகளை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். கற்பூரவல்லியை பயன்படுத்தி மூக்கடைப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். கற்பூரவல்லி, புதினா, மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும். நுரையீரல் தொற்று குறையும்.

* தொண்டை கட்டு, கரகரப்புக்கான மருந்து தயாரிக்கலாம். மிளகுப்பொடி, ஜாதிக்காய் பொடி, தேன். சிறிது ஜாதிக்காய் பொடி, 2 சிட்டிகை மிளகுப் பொடி, இதனுடன் தேன் விட்டு கலந்து சாப்பிடும்போது தொண்டை கட்டு சரியாகும். காலை, மாலை சாப்பிட்டுவர இருமல், சளி இல்லாமல் போகும். உடல் சமநிலையை பெறும்.

* துளசியை பயன்படுத்தி சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். துளசி, ஜாதிக்காய் பொடி, சுக்குப் பொடி. பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு சிறிது துளசி இலைகள், சிறிது சுக்குப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடித்துவர சளி, இருமல் குணமாகிறது. இந்த தேநீர் செரிமானத்தை தூண்டுகிறது. இதை பெரியவர்கள் 100 மில்லி அளவுக்கு எடுக்கலாம். இந்த மருந்தால் மூக்கடைப்பு விலகி போகிறது. நெஞ்சக சளி, உடல் வலி, காய்ச்சல் சரியாகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துளசி ஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகிறது. ஜாதிக்காய் வயிற்று புண், செரிமானத்துக்கு மருந்தாகிறது. சளி, தொண்டைக்கட்டு பிரச்னையை போக்குகிறது. சுவாச பாதையை சீர்செய்கிறது.

* தூதுவளையை பயன்படுத்தி நெஞ்சக சளிக்கான மருந்து தயாரிக்கலாம். தூதுவளை, ஆடாதோடை இலைப் பொடி, திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு. பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விடவும். இதில் தூதுவளை இலையை போடவும். அரை ஸ்பூன் ஆடா தோடை இலைப் பொடி, கால் ஸ்பூன் திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி கரையும். தொண்டை வலி சரியாகும். சுவாசபாதையில் ஏற்படும் தொற்று குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகமே முடியாது என கூறினாலும் நான் சாதித்துக் காட்டுவேன்!! (மகளிர் பக்கம்)
Next post நஞ்சுண்ட நோயாளிகள் !! (கட்டுரை)