கீமோதெரபி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்! (மருத்துவம்)
புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக கீமோதெரபி என்ற மருத்துவ முறை செயல்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை பற்றியும், அதன் பக்க விளைவுகள் குறித்தும் நிறைய அச்சம் நிலவி வருகிறது. கீமோதெரபி (Chemotherapy) என்ற சொல்லானது புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் பல மருந்துப் பொருட்களின் ஒரு தொகுப்பினைக் குறிக்கிறது. புற்று நோயை குணப்படுத்த உதவும் பல முறைகளில் கீமோதெரபி மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறையாகும்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான முக்கிய மருத்துவ சிகிச்சையாக கீமோ தெரபி மட்டுமே உள்ளது.
கீமோ தெரபி மருந்துகள் புற்று நோய்க்கான செல்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இயற்கையான நல்ல செல்களை விரைவாக பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில் இவை கேன்சர் செல்களை அழித்துவிடுகின்றன. செல்களைக் கொல்லும் தன்மை கீமோ தெரபி சிகிச்சை முறையில் இருப்பதால் எலும்பு மஜ்ஜை, சருமம், தலைமுடி மற்றும் குடல் மற்றும் குடலில் உட்பூச்சு செல்கள் போன்ற மனித உடலில் வழக்கமாகப் பகுத்துப் பெருகும் செல்கள் அவை.
கீமோ தெரபி சிகிச்சையில் அவை பாதிக்கப்படுவதால் உடலில் பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் இத்தகைய செல்கள் மறு உருவாக்கத்துக்கான நல்ல திறனையும் கொண்டிருக்கின்றன. காலப்போக்கில் அவைகளை சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றன. வளர்ச்சியடைந்த புற்று நோயில் மட்டுமில்லாமல் ஆரம்ப நிலைப் புற்று நோயிலும் கீமோ தெரபி பயன்படுத்தப் படுகிறது. உடலில் பிற பகுதிகளில் இருக்கும் மிக நுண்ணிய நோய்த்துகள்களை அகற்ற இது பயன்படுத்தப்படுகிறது.
கீமோ தெரபி சிகிச்சை அளிக்காமல் விடும் பொழுது இவை வளர்ச்சி யடைந்து உடலின் பல உறுப்புக்களையும் பாதிக்கும் நோயாகத் தீவிரம் அடையும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
கீமோ தெரபி சிகிச்சைக்குப் பின்னர் உடலில் நோயெதிர்ப்புத் திறன் குறைந்து உடல் பலவீனமடைந்திருக்கும். இதனால் நோய்த்தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்புள்ள நெருக்கடி மிக்க இடங்கள், சுத்தமற்ற, தூசியான சூழல்களை தவிர்க்கவும், அதிகளவில் பார்வையாளர்கள் வருவதைக் குறிப்பாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி பாதிப்புள்ள நபர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கலாம். அதிகளவு உடலுழைப்புள்ள செயல்பாடுகளை மேற்கொள்வது தொடை வலி மற்றும் மூட்டுவலியை உண்டாக்கும்.
சின்னச் சின்ன வேலைகளை மட்டும் இவர்கள் செய்யலாம். நடைப்பயிற்சி அவசியம். அதையும் உடல் அனுமதிக்கும் நேரம் வரை மட்டுமே செய்யலாம். எந்த வேலையும் செய்யாமல் முழு ஓய்வில் இருப்பது நல்லதல்ல. அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். சிலர் தூக்கம் பிடிக்காமல் அவதிப்படலாம். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் பகலில் தூங்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இரவில் நன்றாக தூங்குவதற்காக பகலில் புத்தகம் படிப்பது, செய்தித்தாள் வாசிப்பதும் நல்லது.
முடி கொட்டுவது ஏன்?!
ஒரு சில கீமோ தெரபி மருந்துகள், தலை முடி மெலியும் படியும், முடி கொட்டுவதற்கும் காரணமாகிறது. ஆனால் அனைத்து கீமோ தெரபி மருந்துகளும் முடி கொட்டச் செய்வதில்லை. முடி கொட்டுவதை எதிர்கொள்ளும் நபர்களுக்கு கீமோ சிகிச்சை முழுமையடைந்த பின்னர் அது விரைவில் வளர்ந்துவிட வாய்ப்புள்ளது. இதற்கான நம்பிக்கையும், உறுதிமொழியும் அளிக்க வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் மூலம் கீமோதெரபியின் விளைவுகளை எளிதில் கடக்க முடியும், உணவு, வாழ்க்கை முறை என மேலும் சில விஷயங்களில் கவனம் செலுத்தி கீமோ தெரபிக்குப் பின்னர் விரைவாக இயல்புநிலைக்குத் திரும்பலாம். தன்னம்பிக்கையே கீமோ தெரபி சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும், புற்றுநோயில் இருந்து நலம் பெறவும் வாய்ப்பளிக்கிறது.
Average Rating