குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 7 Second

அழகுப் பெட்டகம் 18

சென்ற இதழில், பரு வந்து நீங்கிய இடத்தில் குழி, பள்ளம் என்பது ஏன் வருகிறது, யாருக்கெல்லாம் வருகிறது என்பதையும், வருவதற்கு முன்பும், வந்துவிட்டால் எப்படி முகத்தை தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் விரிவாய் பார்த்தோம். இந்த இதழில் பார்லரில் செய்யப்படும் ஃபேஷியல் மூலமாக, முகத்தில் ஏற்படும் குழிகள் எப்படி சரி செய்யப்படுகிறது என்பதையும், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே எப்படி சரி செய்வது என்பதையும் காண்போம்.

முகத்தில் இருக்கும் குழிகளை நீக்க O3+ ஃபேஷியலே சிறந்தது. குழிகள் கம்மியாக இருந்தால் 3 முதல் 4 அமர்வு எடுக்க வேண்டும். அதிகமாக இருந்தால் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். 3வது அமர்விற்குப் பிறகே முகத்தில் சற்று மாற்றம் ஏற்படத் துவங்கும். துளைகளின் அளவு சிறிது சிறிதாகவே மறையத் துவங்கும்.

பார்லரில் செய்யும் O3+ ஃபேஷியல்…

தேவையான பொருட்கள்

கிளன்சிங், ஸ்க்ரப், டிஷ்யூ பேப்பர் மாஸ்க், டோனர், மசாஜ் க்ரீம், ஃபீல் ஆஃப் மாஸ்க்,

1சாதாரண நீரில் முகத்தை சுத்தப்படுத்துதல்.

2ஜெல் கிளன்சிங் போட்டு 2 நிமிடம் முகத்தை டீப்பாக சுத்தம் செய்தல்.

3ஜெல் ஸ்க்ரப் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்து, வொயிட்ஹெட்ஸ், ப்ளாக்ஹெட்ஸ் அதிகமாய் இருந்தால் லேசாக ஸ்டீம் கொடுத்து நீக்குதல். (ஸ்போசஸ் அதிகம் இருப்பவர்களுக்கு ஸ்டீம் தவிர்ப்பதே நல்லது)

4டிஸ்யூ மாஸ்க் போட்டு, ஸ்போசஸ் ரிமூவ் டோனரை ஸ்ஃப்ரே செய்து 3 நிமிட இடைவெளியில் மாஸ்க்கை நீக்கி சுத்தம் செய்தல்.

5சீரம் அப்ளை செய்தல்.

6தொடர்ந்து ஹை ஃப்ரீகொயன்சி மெஷினால் மின் அலை கொடுத்தல்.

7எலாஸ்டிசிட்டி தன்மைக்காக ஜெல் மசாஜ் க்ரீம் பயன்படுத்தி 20 நிமிடம் முகத்திற்கு மசாஜ் கொடுக்கப்படுதல்.

8ஸ்போசஸ் க்ளோசிங் ஜெல்லை ஃபீல் ஆஃப் மாஸ்க் பவுடருடன் இணைத்தல்.

9முகத்தை ஃபீல் ஆஃப் மாஸ்க் தடவி மாஸ்க்

செய்யும் முறை.

10 20 நிமிட இடைவெளி கொடுத்து உலர்ந்த நிலையில் மாஸ்க்கை நீக்குதல்.

11ஸ்கின் மாய்ஸ்சரைசிற்காக டே க்ரீம் தடவி, இறுதியாக சன் க்ரீம் அப்ளை செய்தல்.

மேற்குறிப்பிட்ட ஃபேஷியலுக்கு சற்று கூடுதலாக செலவு எடுக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு நாமாக எப்படி ஃபேஷியல் செய்வது என்பதையும் காண்போம். தோலிற்குத் தேவையான எலாஸ்டிசிட்டி தன்மையினை பாதாம், தயிர், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் போன்ற வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி கொண்டுவரலாம் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். தோலில் எண்ணெய்த் தன்மை இருந்தாலே ஸ்கின் மிருதுவாகி, எலாஸ்டிசிட்டி தன்மை இயல்பாக வந்துவிடும்.

அடுத்த வாரம்…

ஸ்கின் லிப்டிங் என்றால் என்ன என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

(ஒப்பனைகள் தொடரும்..)

வீட்டில் செய்யும் ஃபேஷியல்…

1சாதாரண நீரால் முகத்தை சுத்தம் செய்யவும்..
2அரை ஸ்பூன் லெமனோடு 2 ஸ்பூன் நீரை இணைத்து டயிலூட் செய்து, முகத்தை க்ளன்ஸ் செய்யவும்.
3ஊறவைத்த கசகசாவை தடவி மைல்டாக மசாஜ் கொடுக்கவும்.
4மிதமான குளிர்ந்த நீர் அல்லது அரிசி களைந்த நீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தவும்
5பப்பாளிப் பழத்துடன், மஞ்சள் பூசணி இணைத்து மசித்து, முகத்தில் தடவி மசாஜ் கொடுக்கலாம்.
6ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன், அரை ஸ்பூன் பாதாம் பவுடர் சேர்த்து பேக் போடலாம். சற்று உலர்ந்த நிலையில் மாஸ்க்கை நீக்கி சுத்தம் செய்யவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேமிப்பு வழிகாட்டி -வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)
Next post கடவுளின் கனி!! (மருத்துவம்)