மைதா கெடுதலானது என்று சொல்வது ஏன்? (மருத்துவம்)

Read Time:3 Minute, 34 Second

எல்லா உணவிலும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து என அடிப்படையான மூன்று விஷயங்கள் இருக்கின்றன. நாம் சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு குளுக்கோஸ் வெளியாகிறது, அதில் எந்த அளவு சக்தியாக மாற்றப்படுகிறது என்பதை Glycemic index என்று அளக்கிறோம். இந்த க்ளைசெமிக் இண்டெக்ஸ் அளவு மைதாவில் மிகவும் அதிகமாக இருக்கிறது. மைதா உணவினால் கிடைக்கும் அதீத குளுக்கோஸ் அளவை சமன்படுத்தும் அளவு உடலுக்கு இன்சுலின் உற்பத்தித்திறன் இருக்காது. ஆரம்பகட்டத்தில் தன் சக்திக்கு மீறி அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கணையம் போராடினாலும், நாளடைவில் சோர்ந்துபோய்விடும்.

Insulin resistance என்கிற இந்த நிலை ஏற்படுவது கிட்டத்தட்ட கணையம் பழுதாகிவிட்ட நிலைக்கு சமம்தான். மைதா உணவுகளை தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு நீரிழிவு ஏற்படுவதற்கு அடிப்படையான காரணம் இதுதான். நம் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்து செல்களுக்குச் செல்ல வேண்டும். அப்போது தான் நமக்கு எனர்ஜி கிடைக்கும். கணையத்தில் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யபடும் இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை இதுபோல செல்களுக்குக் கொண்டு செல்கிறது.

Oxidation என்கிற இந்த செயலில் கிடைக்கும் என்ர்ஜியின் அளவுக்கு நம் உடல் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான நிலையில் பராமரிக்கப்படும். இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபட்சத்தில் குளுக்கோஸ் செல்களுக்குச் செல்லாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும். இதுதான் நீரிழிவு நோய். இத்துடன் மைதா மாவு பளிச்சென்று வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மைதா உணவுகள் மிருதுவாக இருப்பதற்காகவும் பல ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள். முக்கியமாக, மைதாவை பாலீஷ் பண்ணுவதற்காக Benzoyl peroxide சேர்க்கிறார்கள்.

இந்த ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும், சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். Alloxan என்ற ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள். இந்த ரசாயனம் ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெஞ்சுவலி… மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?! (மருத்துவம்)
Next post உங்க அம்மா பாவமில்ல… !! (மகளிர் பக்கம்)