கொரோனாவால் கடனில் மூழ்கும் நமது சமூகம் !! (கட்டுரை)

Read Time:8 Minute, 47 Second

கொரோனா மரணங்கள் நம்மை அழைக்க மறுபுறம் தற்கொலை உயிர் இழப்புகளும், வட புலத்தில் வாள்வெட்டு உயிரிழப்புகளும், திடீர் விபத்து உயிரிழப்புகளும் சமுகத்தின் அக்கறையீனத்தால் ஒவ்வொருவரது சுய கட்டுப்பாடு இன்மையாலும் நிகழ்கின்றது.

உலகில் இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டு வருட காலமாக நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் இந்தக் காலகட்டத்தில் உலகெங்கிலும் பொருளாதாரங்கள் மிகப் பெரும் சரிவையும் சவாலையும் எதிர்நோக்கி வருகின்றன.

இது இவ்வாறு இருக்க, நாட்டின் அனைத்து பகுதிகளும் தற்காலத்தில் தனிமைப்பட்டிருக்கின்றன. இந்த கொரோனாவின் தாக்கம் காரணமாக மூடப்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் படும் துயரங்களை யாரும் அறியாமல் இருக்கிறோம்.

ஆங்காங்கே தினம் தினம் உழைக்கின்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் படுகின்ற துயரங்களை யாரும் பார்த்ததாக இதுவரை தெரியவில்லை. அதேபோல இன்று மூடப்பட்டிருக்கும் பல பொதுச் சந்தையில் அதன் பிரதான வாசலில் இதனை நம்பி வியாபாரம் செய்கின்ற வியாபாரிகளின் குடும்பங்கள் படும் துயரங்களையும் தினம் தினம் உழைத்து வாழ்வோர், இதேபோல இந்தச் சந்தைக்கு அவர்களது உற்பத்தியை வழங்கி வருகின்ற விவசாய வியாபாரிகள் ,உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் .

இவர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் தங்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, ஆங்காங்கே தினம் தினம் தொழிலாளர்களாக காணப்படுகின்ற ஓட்டோ சாரதிகள் இக்கொடிய நோய் காரணமாக தமது மாதாந்த தவணைப்பணம் கட்டமுடியாமல் தள்ளாடுகின்றனர்.

இவர்களுடைய பிரதான ஜீவனோபாயமாக திகழ்கின்ற போக்குவரத்து ஸ்தம்பிதம் நிலை காரணமாக இவர்கள் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்காக அரசாங்கம் வழங்கிய சலுகைக்காலம் போதுமானதாக இல்லை.

தனியார் போக்குவரத்து பஸ் சாரதிகளும் நடத்துநர்களும் தமது போக்குவரத்தினை நம்பி பெற்ற கடனை கட்ட முடியாமல் தள்ளாடுகின்ரனர். வேலை இல்லாமல் வீட்டில் இருந்தாலும் தவணைப் பனத்தினை வங்கிகள் அறவிட்டு மீதமாக உள்ள பணத்தை மட்டுமே மீளப்பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது.

இது இப்படி இருக்க பாண், பருப்பு, சீனி, கேஸ், எரிபொருள், போக்குவரத்து என்று எல்லாவற்றுக்கும் விலை விண்ணைத்தொடும் அளவுக்கு அதிகரித்து இருக்கின்றது. அரசு சார்ந்த அமைப்புகளும் இதுவரை எதுவும் செய்ததாக தெரியவில்லை. ஆங்காங்கே ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் இலகு கடன், வங்கிக் கடன்கள் போன்றன வழங்கப்படுவதாக அறிக்கைகள் வந்த வண்ணமிருக்கின்றன. இது நம் சமுகத்தை இன்னும் கடனில் மூழ்கடிக்கும் செயர்பாடே

அரசினால் கிடைக்கும் நிவாரங்கள் தற்கால தீர்வாக அமைந்தாலும் இந்த அரச சலுகைகள் சாதாரண மக்களிடம் சென்று சேரும் வரை உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய தேவையும் உள்ளது. விவசாயிகள் (வாழை, மிளகாய், வெங்கயம், திராட்சை, பப்பாசி) மீன்பிடியாளர்கள், விற்பனையாளர்கள் (கடை தெரு வியாபாரிகள்), தின தொழிலாளர்கள் (கடலை விற்பனையாளர், காய்கறி விற்பனையாளர், பழ வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள்) ஆகியோரின் நிலைமைகள் தொடர்பில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தேவை உள்ளது.

இப்படியான சூழ்நிலையிலும் சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள், உணவு விநியோகத்தர்கள் இவர்களது சேவை மக்களால் போற்றத்தக்கது.

இங்கே பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், “எங்கட உற்பத்தி எல்லாம் இப்படியே கிடக்கு . கிழங்கு, கீரை, கத்தரி, தக்காளி இதெல்லாம் சரியான நேரத்தில புடிங்கி குடுத்தாத்தான் ஏதாவது மிச்சம் மீதி வரும்” என்கின்றனர்.

சந்தை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், “…இப்ப இந்தக் கண்ணுக்குத் தெரியாத நோயால எதையும் செய்ய ஏலாது. கடை எல்லாம் மூடி இருக்கு. இருந்தாலும் தவணைப்பணத்தில கொன்சமும் குரைச்சதா இல்ல. எல்லாம் கடனிலதான் போகுது” என்கின்றனர்.

ஓட்டோ சாரதி கருத்துத் தெரிவிக்கும்போது, “சின்னச் சின்ன ஓட்டம் ஓடலாம் எண்டால், பொலிஸ் காரண் ஒரு பக்கம் பி எச் ஜ ஒரு பக்கம் துரத்துரான்கள். இவனுகளுக்கு ஒளிச்சி ஓடினாலும், இந்த லீசிங் காரண் விடாம எங்க இருந்தாலும் தேடித்தேடி வந்து இருக்கிறான். என்னவோ குடும்பத்தைக் கொண்டு போறன்” என்றார்.

கோவில் அன்னதானங்களை நம்பி ஒரு வேளை உணவுக்காய் கையேந்தும் வயோதிபர் தெரிவிக்கையில், “எண்ட மெனெ, என்னவோ வருதாம் … எல்லாரையும் வந்து வந்து புடிக்கிதாம்; அதால கோயில பூட்டினதா சொல்லுராங்க. நானும் இவடத்த தான் இருக்கன். என்ன ஒண்டும் புடிக்கிதும் இல்ல; இப்ப சாபாடும் இல்ல; ஆரோ ஒரு பொடியன் தான் வந்து சாப்பாடு தாரவன். நாங்க நம்பி இருந்த அன்னதான மடத்தையும் அந்த பேய் புடிச்சதாம் எண்டு சொல்லி மூடிப் பொட்டாங்கள்; சாப்பாடு சரியான கச்டமா போச்சுடா மேனே” என்றார்.

வங்கி அலுவலகர்ன் கருத்து, “எங்களுக்கிட்ட கடன் கேட்டால் நாங்கள் வங்கி சட்டத்துக்குட்பட்டு எல்லாம் சரியாக இருந்தால் கடன் குடுக்கிறம்; இருந்தும் குடுத்த கடனை இப்ப சில பேர் கட்டுறத்துக்கு ஏலாம இருக்கு; அதுக்காக நாங்களும் ஒண்டும் செய்ய ஏலாது; கடன் எடுத்தவங்க எப்படியும் கட்டித்தான் ஆகனும்; அதுக்காக சில பேர் இங்க வந்து தங்கட நகைகள் ஈட்டில் வைக்கிராங்கள். இது அரசுதான் ஏதாவது நிவாரன திட்ட்ங்கள் செய்ய வேண்டும்”.

இவ்வாறு, இந்தக் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், ஒவ்வொருவரின் வாழ்க்கையும் துன்பங்கள் மிகுந்தனவாகவே காணப்படுகின்றன. இருந்தபோதிலும் துன்பங்களையும் சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழ்வதே மானிட வாழ்வாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவை வீழ்த்துமா இந்தியா? (வீடியோ)
Next post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)