தலைமுடிக்கான ஆய்வகம்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 42 Second

தலைமுடி மற்றும் சருமப் பராமாிப்புத்துறையில் வீகேர், ஒரு முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் தென்னிந்தியா முழுவதும் தன் கிளைகளை கொண்டது இல்லாமல் இலங்கையிலும் செயல்படுகிறது. வீகேர், அனைத்துவிதமான தலைமுடி பிரச்சனைகளுக்கும் ட்ரைக்காலஜி அறிவியல் அடிப்படையில் தீர்வளிக்கிறது. ட்ரைக்காலஜி என்பது உச்சந்தலை மற்றும் தலைமுடி பற்றி விளக்கக்கூடிய அறிவியலாகும்.

இதன் மூலம் பொடுகு, வழுக்கை, தற்காலிக தலைமுடி உதிர்வு, நரைமுடி மற்றும் சில அரிய தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வினை கண்டறிந்து பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சையை அளித்தது மட்டுமில்லாமல் அவர்கள் நல்ல பலனையும் அடைந்துள்ளனர். தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பது மட்டுமில்லாமல், அதன் காரணங்களையும் கண்டறிந்து, பிரச்சனைக்கு ஏற்ற சிகிச்சை அளித்து வருகிறது.

தலைமுடியில் உள்ள நுணுக்கமான பிரச்னைகளை கண்டறிய ட்ரைக்கோஸ்கேன், மைக்ரோஸ்கோபி போன்ற தொழில்நுட்பமுறைகளை பயன்படுத்தி
வருகிறார்கள். தொழில்நுட்பம் மட்டுமில்லாமல் ரத்தப் பரிசோதனை மூலமும் உடலில் ஏதும் பாதிப்பு உள்ளதா என்று கண்டறிந்து பிரச்சனைகளுக்கான தீர்வினை அளித்து வருகிறது. இந்திய அளவில் இன்றளவும் கூட வெகு சில நிறுவனங்களே கொண்டுள்ள HMA எனப்படும் Hair Mineral Analysis சிகிச்சை முறையினை வீகேர் நிறுவனம் 2011ம் ஆண்டே அறிமுகப்படுத்தி அதன் மூலம் பலரின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமைந்து வருகிறது.

தற்பொழுது பொடுகினை உண்டாக்கக்கூடிய பூஞ்சை இனத்தினை கண்டறிய, மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் பூஞ்சைகளின் அமைப்பு, அவற்றின் வகைகள், இனப்பெருக்க முறைகள் மற்றும் சருமத்தை பாதிக்கும் முறை என அந்த பூஞ்சையின் அனைத்து அம்சங்களையும் கண்டறிய முடியும்.

Hair Mineral Analysis and Dandruff Differential Analysis முறைக்கென்றே சென்னை ஆலப்பாக்கத்தில் தனது புதிய ஆய்வகத்தினை வடிவமைத்துள்ளது. இங்கு சிகிச்சை முறைகள் அளிப்பது மட்டுமில்லாமல் அதனை மேம்படுத்தும் ஆராய்ச்சி நிலையமாகவும் திகழ்ந்து வருகிறது. மேலும் இங்கு நடக்கப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் பல புதிய சிகிச்சை முறைகளை அறிமுகம் செய்வதன் மூலம் தலைமுடி பிரச்சனைக்குரிய தீர்வின் ஒரு மைல் கல்லாக அமையும் என்று இந்நிறுவனத்தின் நிர்வாகஇயக்குநரான பிரபா ரெட்டி அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post செல்லுலாய்ட் பெண்கள் – குரலினிமையின் நாயகி ஜெயந்தி!! (மகளிர் பக்கம்)