சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு!! (மருத்துவம்)
நீரிழிவு நோய், சைனஸ், ஆஸ்துமா, தைராய்டு நோய், ருமாடிக் மூட்டுவலி, தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு குறித்து கூறியதாவது:
நீரிழிவு நோய்க்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும். எந்த வித பக்க விளைவுகளும் கிடையாது. நீரிழிவு நோய் மட்டுமல்ல வேறு எந்த நோய்க்கும் சித்த மருத்துவத்தில் ஒன்றரை வருடங்களுக்கு மேல் சிகிச்சை கிடையாது. நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் முக்கூட்டியே தெரியும். உடல் சோர்வு, உடல் இளைத்து போகுதல், உடல் பலவீனம், கை கால் நடுங்குதல், கால் எரிச்சல், மூட்டு வலி, கால் விரல்களில் ஏற்படக்கூடிய புண், நீண்ட நாள்பட்ட ஆறாத புண் ஆகியவையே அறிகுறிகள். நீரிழிவு நோயை உடல் பயிற்சி, நடை பயிற்சி மூலமும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
ருமாடிக் மூட்டுவலி, முதுகு வலி என்பது முன்பெல்லாம் வயது முதிர்ந்தவர்களை மட்டுமே பாதித்து வந்தது. ஆனால் இன்றைய நாகரீகமான வாழ்க்கை நடைமுறை உணவு பழக்க வழக்கங்களால் இளம் வயதிலேயே இந்நோயால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மூட்டுவலி, முதுகு வலி வருவதற்கான காரணங்கள் மூட்டு எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு இணைப்புகளில் உள்ள கார்டிலேஜ் என்ற ஜவ்வு தேய்ந்து விடுவதால் எலும்புகள் உராய ஆரம்பித்து வலி ஆரம்பித்து விடுகிறது.
இளம் பெண்களை பொறுத்தவரை ஹீல்ஸ் செருப்பு அணிவதை தவிர்ப்பது, இளைஞர்களை பொறுத்தமட்டில் அதிக தூரம் பைக் ஓட்டுவதை தவிர்ப்பதன் மூலம் முதுகுவலி வருவதை தவிர்க்கலாம். பல்வேறுவிதமான வேலை, தொழில், குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்படக்கூடிய மன அழுத்தத்தால் உடல் ரத்தத்தில் உள்ள பிளாஸ்டோபார்ம் அளவு கூடியும் குறைந்தும் காணப்படுகிறது. இது போன்ற சமயத்தில் உடல் சோர்வு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி என்று சொல்லக்கூடிய கால்சியம் குறைகிறது. இதனால் ஜிங்ஸ் சுரப்பியின் அளவு குறைந்து தைராய்டு நோய் ஏற்படுகிறது.
பெண்களுக்கு உடல் எடை கூடுதல், மாதவிடாய் தள்ளி போகுதல் மற்றும் அதிகரித்தல், உடல் இளைத்து போகுதல், சிறிதளவு வேலை செய்தவுடனேயே உடல் சோர்வு ஏற்படுதல், தலை வலி, ஒற்றை தலைவலி வருவது போன்றவை நோய் அறிகுறிகளாகும்.
தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை:
பெண்களுக்கு ஏற்படக்கூடிய தாமதமான மாதவிடாய் கோளாறுகள் நீண்ட நாள் பட்ட வெள்ளை போக்கு, உதிரப்போக்கு, கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய நீர்கட்டி அதனால் ஏற்படக்கூடிய மாத விடாய் கோளாறு, வயிற்று வலி ஆகியவற்றுக்கு அறுவை சிகிச்சை இன்றி சித்த மருத்துவம் மூலம் பூரண குணம் பெறலாம்.
மாதவிடாய் நிற்கிற வயதில் ஏற்படும் பயம், தெளிவின்மை காரணமாகவே மனக்குழப்பத்தால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு குறைகிறது. இதனை தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் மருந்துகள் மூலம் தீர்வு பெற்றும் ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியும்.
சைனஸ் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் நூறு சதவீதம் நிரந்தர தீர்வு பெற முடியும். ஆயுட்கால மருந்து தேவையில்லை. நோய் பாதிப்பின் அளவை பொறுத்து 5 மாதம் முதல் மிக அதிகபட்சமாக ஒன்றரை வருடம் மட்டும் மருந்து உட்கொண்டால் போதும். முடி உதிர்தல், முடி உடைந்து போகுதல், பொடுகு, செம்பட்டை போன்ற முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
Average Rating