சர்க்கரை நோயும்…இயற்கை மருந்தும்… !! (மருத்துவம்)

Read Time:2 Minute, 12 Second

1. மாத்திரைகள் சாப்பிட்டு குணமாகாத நோய்களுக்கு ஒரே மருந்து இயற்கை மருந்துதான். சர்க்கரை நோயாளிகள் காலை 2, மதியம் 3, இரவு 4 மாத்திரைகள் என தினந்தோறும் மருந்து சாப்பிட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒரு இயற்கை மருந்து முருங்கை சாறு.சர்க்கரை நோயாளிகள் முருங்கை கீரை சாறை 20 மிலி அளவு தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

2. சர்க்கரை நோயாளிகள் பலவிதமான மாத்திரைகள் சாப்பிட்டும் நோயை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் முருங்கை கீரையை பொரியல் செய்து அதில் எள்ளு பிண்ணாக்கு தூள் ஆகியவற்றை கலந்து உணவில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதில் தேவைக்கு தக்கவாறு, நோய்க்கு தக்கவாறு உணவை எடுத்துக்கொள்ளவும். உணவு முறையை முறைப்படுத்தி கொள்ள வேண்டும்.

3. சர்க்கரை நோயாளிகள் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழித்து கொண்டிருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் கெடும். அதிக தொந்தரவு ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு முருங்கை பிசின், ஆவாரம் பிசின் ஆகியவற்றை சமஅளவில் தூள் செய்து காலை, மாலையில் நோய்க்கு தக்கவாறு பசும் பாலில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இதை சாப்பிட்டு வரலாம். இதனால் அடிக்கடி சிறுநீர் போவதை கட்டுப்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரிழிவு வலிகளும் வேதனைகளும் !! (மருத்துவம்)
Next post போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)