இயற்கையான முறையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்!! (மருத்துவம்)
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) தன் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் என கூறியுள்ளது. கட்டுப்பாடுகளை மீறி மக்கள் கூட்டமாகக் கூடுவது தீவிரமாக 3 அலை கொரோனா பரவ வழிவகுக்கும், அதற்காக தற்போதில் இருந்தே நம்மை இயற்கையாக பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் கொரோனாவில் முதல் அலையின்போது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் 18 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்குக் குறைவான இளையோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். 3-ம் அலையில் குழந்தைகள் பரவலாக பாதிப்புக்குள்ளாவார்கள் என்று சில கருத்துகள் பரவி வருகின்றன. குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டால் அவர்கள் மூலம் பிறருக்கு எளிதாகத் தொற்று பரவும் ஆபத்து உள்ளது.
‘கொரோனா வைரஸின் கூர்ப்புரதங்கள் நம் உடலில் உள்ள ACE2 புரத ஏற்பிகளின் மூலம் நம் செல்களுக்குள் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், குழந்தைகள் தற்போது பள்ளி, கல்லூரி சேர்க்கை, நுழைவுத்தேர்வு பயிற்சி, விளையாட்டுப் பயிர்ச்சியான வெளியே செல்ல தொடங்கியுள்ளனர். இன்றைக்குள்ள 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவு அந்த காலத்தில் உண்டார்கள், உடல் உழைப்பும் அதிகமாக இருந்தது. அவர்கள் தடுப்பூசி பயன்படுத்தியது குறைவு. இன்றைக்குரிய காலகட்டத்தில் குழந்தை பிறப்பதற்கு முன்பே தடுப்பூசி போடப்படுகிறது.
தாய்ப்பாலில் இருந்து கிடைக்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவு. இதனால் நாம் மூன்றாம் அலை விஷயத்தில் தற்காப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி கோவிட் வருவதைத் தவிர்க்க வேண்டும். கோவிட் வந்தாலும் மிகவும் மோசமான உடல்நலக் குறைவுக்குச் செல்லாமல் தடுக்கலாம். எனவே கொரோனா மூன்றாம் அலையில் இருந்து இயற்கையான முறையில் காத்துக் கொள்ள சில முக்கிய குறிப்புகளை பின்பற்றுவோம். கோவிட்டுக்கான முதல் காரணம் உடலில் சளிதேங்கி இருப்பதுதான்.
நுரையீரலில் சளிகள் தேக்கம் இல்லாமல் இருந்தால் கோவிட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. குழந்தைகள் அதிகமாக தொட்டு பயன்படுத்தும் விளையாட்டு பொம்மைகள், கதவு கைப் பிடிகள், இருக்கைகள் மற்றும் புத்தகப் பைகள் போன்றவற்றை கிருமி நாசினி மூலம் சுத்தமாக வைத்து கொள்வது முக்கியமானது. பெற்றோர் குழந்தைகளிடம் தோற்று பற்றிய விழிப்புணர்வை பேசவேண்டும். முகக்கவசம் அணிவது, கை/ கால் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முக்கியத்துவம் குறித்து குழந்தைகளிடம் பேச வேண்டும்.
அதிக கூட்டம் உள்ள கடை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட ஜங்க் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும். முழு தானிய உணவு மற்றும் புதிய பழங்களை சாலட்டாக குழந்தைகளுக்கு தருவது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பல்வேறு எளிய முறைகள் உள்ளன. கிட்ஸ் யோகா போன்ற எளிய பயிற்சிகள் மூலம் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு அதிகரிக்கலாம். மூச்சுப்பயிற்சி, எளிய ஆசனங்கள், சூரிய நமஸ்காரம், தாடாசனம், விருக்ஷாசனம், கதிசக்ராசனம், வஜ்ராசனம், பத்மாசனம், கோமுகாசனம், பிராணாயாமம் மேற்கொள்ளலாம்.
லிங்க முத்திரை பயிற்சியை தினமும் மேற்கொள்வதன் மூலம் நாம் உடலில் இயற்கையாகவே பிராண வாயுவை அதிகரிக்க செய்யும். இதை 3 வயது முதல் லிங்க முத்திரை பயிற்சி மேற்கொள்ளலாம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தினமும் 5 நிமிடம் தியானம் செய்வது நல்லது. இதன்மூலம் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு ஆவியில் வேக வைத்த – புட்டு, இடியாப்பம், ஆப்பம், உப்புமா போன்றவற்றை சிறுதானியங்களைப் பயன்படுத்தி செய்து தரலாம்.
ஓமத்தண்ணீர், சீரக தண்ணீர் கொத்தமல்லி, பனைவெல்லம் கலந்து சூடான பானம் ஆக்கி கொடுக்கலாம். இலை ஜீரண சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இயற்கையாகவே கோழை அகற்றும் தன்மைகளைக் கொண்டுள்ளது. தினமும் 6-8 டம்ளர் காய்ந்த சூடு தண்ணீர் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
வைட்டமின் C நிறைந்த உணவுகள் நெல்லிக்காய், கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, பப்பாளி ஆகியவற்றை சாலட் ஆகவோ பழச்சாறாகவோ கொடுப்பது நல்லது. சூடான வெஜ் சூப் கொடுப்பது நல்லது.நட்ஸ், பேரீச்சை மற்றும் உலர்ந்த திராட்சை கொடுக்கலாம்.
தினமும் முளைகட்டிய தானியங்கள் மற்றும் சுண்டல் வழங்கப்பட வேண்டும்.தேன் சத்துமாவுடன் கலந்து கொடுக்க வேண்டும். அது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். முருங்கைக் கீரை சூப் கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி பானம், நெல்லி, எலுமிச்சை, இஞ்சி, மிளகு, மஞ்சள், அதிமதுரம், துளசி இவை கொண்டு 250 மிலி தண்ணீர் கலந்து கஷாயம் போல் செய்து குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு முறை 20 மிலி கொடுக்கலாம்.
குழந்தைகளை தினமும் 15 நிமிடம் சூரிய ஒளியில் 7-9 நிமிட அளவில் நிற்பதன் மூலம் வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகக் கிடைக்கிறது.
ஏனென்றால் குழந்தைகள் வீட்டிலேயே ஆன்லைன் கிளாஸ் பயில்வதால் சூரிய ஒளியில் அதிகமாக எக்ஸ்போஸர் ஆவதில்லை. இதனால் நோய்த்தொற்று எளிதாக பரவ வாய்ப்புள்ளது. இயற்கை மருத்துவத்தின் கூற்றுப்படி ‘கழிவுகளின் தேக்கம் நோய், கழிவுகளின் நீக்கம் நோய்க்கான தீர்வு’. எனவே நுரையீரலில் சளிகள் தேங்காமல் இருப்பதற்கு, தமிழகம் முழுவதும், அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பிரிவில் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை பானங்கள் வழங்கப்படுகிறது. இதனை யோகா மற்றும் இயற்கை மருத்துவரின் பரிந்துரைப்படி பருகுவதால் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
Average Rating