வியக்க வைக்கும் வேப்பம்பூ!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 42 Second

வேம்பின் அனைத்து பாகங்களின் மருத்துவ குணங்களும் நாம் அறிந்ததுதான். தற்போது வேப்பம்பூ பூக்கும் காலம் என்பதால் அதன் அருங்குணங்களை அறிந்து கொள்வோம்…

* வேப்பம் பூ வெயில் காலத்தில் மட்டுமே பூக்கும் என்பதால் அதை சுத்தப்படுத்தி காய வைத்துக் கொண்டால் வருடம் முழுக்க பயன் படுத்திக் கொள்ளலாம். மாதக்கணக்கிலும் அதன் மருத்துவ குணம் குறையாது.

* வேப்பம் பூ உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. உடலுக்கு பலத்தை தரக்கூடியது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

* குழந்தைகளுக்கு தோல் அரிப்பு, திடீர் திடீரென்று கை கால்களில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி போன்ற பிரச்னைகளை வராமல் தடுக்க வேப்பம் பூவை வாரம் ஒரு முறை உணவில் சேர்க்கலாம்.

* வேப்பம் பூவானது நாக்கில் ஏற்படும் பூஞ்சை தொற்றை சரி செய்யும். வேப்பம் பூவை ஊற வைத்து அந்த நீரை பருகுவதால் அல்லது அந்த நீரால் வாயை கொப்பளிப்பதாலும் சரி செய்ய முடியும். இது அல்சருக்கும் அருமருந்து.

* வேப்பம்பூவை சிறிதளவு தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகள் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

* உடலில் உள்ள தேவையற்ற காற்றை வேப்பம்பூ வெளியேற்றுவதால் தானாகவே ரத்த அழுத்தம் குறையும். அதேபோல் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பும் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

* உஷ்ண உடம்பு கொண்டவர்கள் வேப்பம் பூவை அளவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், இது உடல் சூட்டை அதிகப்படுத்திவிடும். அதேபோல் வயிற்றுப்போக்கு, மூல நோய் மற்றும் அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

* வேப்பம்பூவை துவையலாகவோ, ரசமாகவோ அல்லது குழம்பாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதனால் கசப்புத் தன்மை குறைந்துவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோலை தூக்கி எறியாதீங்க!! (மருத்துவம்)
Next post இணக்கமான தோழமை நிறைந்த இயக்குநர் ரஞ்சித் !! (மகளிர் பக்கம்)