கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கான உடற்பயிற்சி ஆலோசனைகள்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 5 Second

கொரோனாவின் இரண்டாம் அலை அனைத்து தரப்பினரையும் ஆட்டி படைத்துவிட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் சிலிண்டருக்காக, ரெம்டெசிவிர் மாத்திரைக்காக, படுக்கை வசதிக்காக என அலைந்து தவித்தது கொஞ்ச நஞ்சமல்ல. இதனால் மறுபடியும் நோய் தாக்கம், 3வது அலை வந்து விடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதனால் கொரோனாவைத் தடுக்கும் வகையிலான உடற்பயிற்சிகளிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் என்னவிதமான பயிற்சிகளை மேற்கொள்வது என்பது பற்றி குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து நிபுணர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போம்…

* கொரோனா பாதித்தவர்களுக்கு நுரையீரலின் திறனைப் பொறுத்தே நிபுணர்கள் பயிற்சிகள் கற்று தருகின்றனர். சி.டி ஸ்கேன் ரிப்போர்ட்டின் அடிப்படையில் பயிற்சி வழங்க
வேண்டும்.

* மூக்கடைப்பு தொல்லை இருக்கிறதா, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா, ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என பாதிக்கப்பட்டு மீண்டவர்களை பரிசோதிக்க வேண்டும்.

* கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் கடும் உடற்பயிற்சி முறையினைப் பின்பற்றக்கூடாது. குறிப்பாக சைக்கிளிங், ஜாக்கிங், அதிகளவு உடல் சோர்வு தரும் விளையாட்டு முறைகள் போன்றவை கூடாது.

* கொரோனா தொற்று பல இணை நோய் களையும் நமக்கு பரிசாகத் தந்துள்ளது. எனவே இணை நோய்களையும் கவனத்தில் கொண்டே உடற்பயிற்சிகளை செய்வது அவசியம்.

* முதலில் சிறிது தூரம் வாக்கிங் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். பின்னர் வாக்கிங் செல்லும் தூரத்தை படிப்படியாக அதிகரிக்கலாம்.

* மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். ஆட்கள் இல்லாத இடத்தில் முகக்கவசத்தை தவிர்க்கலாம்.

* கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கபடி போன்ற குழு விளையாட்டுக்களில் ஈடுபடக் கூடாது. ஏனெனில், யாருக்கு நோய் பாதிப்பு இருக்கிறது என தெரியாது. ஒருவரை ஒருவர் தொட்டு விளையாடும்போது, பொருட்களை பயன்படுத்தும்போது நோய் பரவல் ஏற்படும். எனவே குழு விளையாட்டுக்களை தவிர்த்து தனி நபர் விளையாட்டு,பயிற்சிகளை மேற்கொள்வதே பாதுகாப்பானது.

* சுவாசத்திறனை அதிகரிப்பதற்காக பலூன் ஊதும் பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் 5 முறை இதுபோல் பலூன் ஊதி பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

* மூச்சுப்பயிற்சி மிகவும் முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. எளிமையான சுவாசப்பயிற்சியை தினசரி மேற்கொள்ளலாம். மூச்சுக்காற்றை நன்றாக இழுத்து, நுரையீரலில் தேக்கி வைத்து, பின்பு மெதுவாக விடுவதே சரியான முறை.

* உடல்திறனை வைத்து மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். முறையான பயிற்சியின்றி மூச்சை அடக்கக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுக்கடலில் நரக வேட்டையாடும் சுறாக்கள்!! (வீடியோ)
Next post தேகம் மினுமினுக்க…குப்பைமேனி!! (மருத்துவம்)