புரோக்கோலியில் என்ன ஸ்பெஷல்? (மருத்துவம்)

Read Time:4 Minute, 59 Second

புரோக்கோலி என்பது கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த உண்ணக்கூடிய ஒரு பசுமை தாவரம். இதன் தலைப்பகுதியிலுள்ள பெரிய பூ, ஒரு காய்கறியாக உண்ணப்படுகிறது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செறிவாக கொண்டு ஏராளமான ஆரோக்கியப் பலன்களை உள்ளடக்கிய இது ஒரு சுவையான
காய்கறியாகும்.

* வாழ்க்கை முறை தொடர்பான நோய்களான உடற்பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஒட்டு மொத்த அளவில் உயிரிழப்பு ஏற்படுவதற்கான இடரை புரோக்கோலி குறைக்கிறது.

* ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடி வளர புரோக்கோலி உதவுகிறது.

* பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான இடரை புரோகோலியிலுள்ள ஃபோலேட் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஃபோலேட்டின் பாதுகாக்கும் விளைபயன்கள், பெருங்குடல், வயிறு, கணையம் மற்றும் கருப்பை ஆகிய உறுப்பு களில் ஏற்படும் புற்றுநோய்களையும் எதிர்க்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.

* ஒரு கப் அளவிலான துண்டாக்கப்பட்ட புரோகோலி, 100% ஆர்டிஏவிற்கும் கூடுதலாக, 92 mcg அளவிலான வைட்டமின் கேவினைத் தருகிறது.

* புரோக்கோலியில் இருக்கும்போதுமான அளவிலான வைட்டமின் கே, கால்சியம் சத்து எலும்பு களின் ஆரோக்கியத்தை உயர்த்துகிறது. ஒரு கப் புரோகோலி 43 மி.கி. கால்சியத்தை வழங்குவதால், கால்சியத்திற்கான தினசரி உட்கொள்ளும் தேவையைப் பூர்த்திசெய்ய உதவுகிறது.

* இயற்கையான வடிவத்தில் ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் கே – ஐ உட்கொள்வது சூரியஒளி மற்றும் மாசுகளினால் ஏற்படும் சரும சேதப் பாதிப்புகளை எதிர்த்து அதை சரிசெய்ய உதவுகிறது. சரும சுருக்கங்களை குறைப்பதுடன், சருமபொலிவை மேம்படுத்துகிறது.

* புரோக்கோலி, 81 மி.கி. வைட்டமின் சி – ஐ வழங்குகிறது. சருமத்திற்கான பிரதான ஆதார அமைப்பான இணைப்புத்திசு வெண்புரதம் (கொலாஜன்) உருவாவதில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

* புரோக்கோலி வழங்குகிற வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ ஆகிய இரண்டு மே ஆரோக்கியமான தோற்றமளிக்கும் சருமத்திற்கு மிக அத்தியாவசியமானது.

* செரிமானத்தையும் மற்றும் இயற்கையான முறையில் நச்சகற்றலையும் (Detox) மேம்படுத்துகிறது.

* இயற்கையான நார்ச்சத்தை புரோகோலி கொண்டிருப்பதால், மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான செரிமான பாதையை பேண உதவுகிறது. பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் இடரை இது குறைக்கும்.

* ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களை புரோக்கோலி கொண்டிருப்பதால் ஆர்த்ரிட்டிஸ் (மூட்டுவாதம்) நோயாளிகளின் வலியை குறைக்க உதவுகிறது.

* கரோட்டினாய்ட்ஸ், லுட்டீன், ஜியோடேக்ஸின், ஜியாஸான்தின் மற்றும் பி கரோட்டின் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதில் அடங்கியுள்ளன. கண்களை பாதுகாக்கிற மற்றும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்தை சரிசெய்கிற வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி ஆகியவையும் புரோக்கோலியில் அதிகம் அடங்கியுள்ளன.

* மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய கனிமங்கள் இதில் செறிவாக உள்ளன. குழந்தைகள், வயது முதிர்ந்த நபர்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் உதவக்கூடும்.

* புரோக்கோலியை ரெஃப்ரிஜிரேட்டரில் சேமித்து வைப்பதே நல்லது. சூப்கள் தயாரிப்பிலும், வேகவைக்கப்படுகின்ற காய்கறியாகவும் புரோக்கோலியை உண்ணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நலம் பல தரும் பிரண்டை!! (மருத்துவம்)
Next post வித்தியாசமாக உயிர் வாழும் விலங்குகள்!! (வீடியோ)