கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 25 Second

*தேங்காய் நேர்த்தியாக உடைய, உடைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அதை ஃப்ரிட்ஜில் வைத்து உடைத்தால் வட்டமாக சமமாக உடையும்.

*பலகாரங்கள் செய்து முடித்ததும் வாணலியில் உள்ள எண்ணெயை தினசரி உபயோகிக்கும் பாட்டில் அல்லது பாத்திரங்களில் ஊற்றி விடுவோம். அதை சமையலுக்கு உபயோகிக்கும்போது கீழே சிந்தி தரை வீணாகாமல் இருக்க பாத்திரத்தின் வெளிப்பகுதியில் நியூஸ் பேப்பரை கனமாக மடித்து டைட்டா கட்டி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு வைக்கவும். எண்ணெய் நாம் ஊற்றும்போது சிந்தினாலும் நியூஸ் பேப்பரில்தான் சிந்தும். கீழே வழியாது.
– எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

பளிச்சிடும் வினிகர்…

*1 கப் நீரில் 1 டீஸ்பூன் வினிகர் கலந்து ஃப்ரிட்ஜைத் துடைத்தால், கறைகள் நீங்கும்.

*சமையலறை அலமாரியில் தட்டுக்களை வாரம் 2 முறை வினிகர் கலந்த நீரால் துடைத்து வந்தால் பூச்சித் தொல்லைகள் இருக்காது.

*கறை படிந்த குக்கரின் உட்புறம் கருப்பாக இருந்தால் சிறிது வினிகரை தடவி 15 நிமிடம் கழித்து, சிறிது நீர் விட்டு கொதிக்க விட்டால் கறை நீங்கி குக்கர் பளிச்சிடும்.

*பாத்திரங்களிலுள்ள ஸ்க்ரூ துருப்பிடித்திருந்தால், 2 சொட்டு வினிகர் விட்டு சிறிது நேரம் கழித்து திருகினால் ஸ்க்ரூவை எளிதாக கழட்ட முடியும்.
*வெற்றிலைக் கறை துணியில் பட்டால் அந்த இடத்தில், வினிகரை ஊற்றித் தேய்த்துக் கழுவினால் கறை மறைந்துவிடும்.

*வினிகர் கலந்த நீரில் பாதங்களை மூழ்கும்வரை 1/2 மணி நேரம் வைத்திருந்து கழுவ, கால் நகங்களின் அழுக்கு நீங்கி, நகங்கள் சுத்தமாவதோடு, பாதம் சுத்தமாகும்.

*எவர்சில்வர், கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள், வினிகரைக் கொண்டு சுத்தம் செய்ய பளிச்சிடுவதோடு, குளியலறை பிளாஸ்டிக் மக், டப்-ஐயும் சுத்தமாக்கலாம்.

– மகாலெட்சுமி, காரைக்கால்.

*சப்பாத்தி, அடை போன்றவற்றை ஹாட்பேக்கில் வைக்கும்போது அடியில் இரண்டு முள் கரண்டிகளை வைத்துவிட்டால் கடைசி சப்பாத்தி வியர்த்துப் போகாமல் இருக்கும்.

*கீரை கடையும்போது சிறிது அரிசி மாவையும் கரைத்து சேர்த்துக் கடைந்தால் கீரை கெட்டியாக சேர்த்தாற்போல் இருக்கும்.

*தேங்காய்ப்பால் எடுக்கும்போது சிறிது உப்பு சேர்த்தால் பால் நிறைய கிடைக்கும். பிழிவதும் சுலபம்.

– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

*தோசைக்கு அரிசி ஊற வைக்கும்போது உளுந்தைக் குறைத்துக்கொண்டு, வெந்தயத்தைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டால் தோசை சாஃப்ட்டாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.

*சமையல் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் சுக்கு அல்லது வசம்பு துண்டைப் போட்டு வைத்தால் புழு, பூச்சி வராது.

*கசப்புத்தன்மையுள்ள காய்கறிகளை அரிசி களைந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து, சமைத்தால் கசப்புத்தன்மை அகன்றுவிடும்.

– அமுதா அசோக்ராஜா, திருச்சி.

*அரிசி கழுவிய தண்ணீரில் கிழங்குகளைப் போட்டு வேக வைத்தால் சீக்கிரமே வெந்துவிடும்.

*கூட்டு செய்யும்போது உப்போ, காரமோ அதிகமாகி விட்டால் சிறிது ரஸ்க்கை தூளாக்கிக் கலந்தால் சரியாகிவிடும்.

*சாம்பார், குழம்பு, ரசம் இவற்றுக்கான மசாலா கலவையில் ஒரே ஒரு சின்ன வெங்காயத்தையும் சேர்த்து அரைத்துப் பாருங்கள். மணமும், சுவையும் ஊரையே கூட்டும்.

– கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

*அரிசி பாயசம் வீட்டில் தயாரிக்கும்போது ரோஜா எசென்ஸ் ஊற்றினால் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.

*சப்பாத்தி மாவு பிசையும்போது, கால் டம்ளர் பால் விட்டுப் பிசைந்தால், ஒரு துளிகூட எண்ணெய் விடாமலே ‘புஸ்’னு சப்பாத்தி கிடைக்கும்.

*மழை காலத்தில் உப்பில் நீர் சேர்ந்துவிடும். அந்த சமயம் நான்கைந்து அரிசியை அந்த ஜாடியில் போட்டு வைத்தால் உப்பில் தண்ணீர் படியாமல் இருக்கும்.

*இறைச்சி வேக வைக்கும்போது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து, மிருதுவாக இருக்கும்.

– எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

* ஹாட் வாட்டர் பாட்டில், ரப்பர் க்ளவுஸ் ஆகியவற்றை அவ்வப்போது படிகாரம் சேர்த்த நீரில் முக்கி எடுத்தால் நீண்ட நாட்கள் உழைக்கும்.

* ஃபிரிட்ஜில் வைக்கக்கூடிய பாட்டில்களுக்கு பிளாஸ்டிக் மூடியே சிறந்தது. தகர மூடிகள் ஈரப்பசை படப்பட துருப்பிடிக்கும்.

– ச.லெட்சுமி, செங்கோட்டை.

* தட்டை செய்யும்போது மைதாவிற்குப் பதிலாகக் கோதுமை மாவை ஆவியில் வேக வைத்துச் செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்.

* கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து விடலாம். சீக்கிரம் ஊசிப்போகாது.

*புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.

– கே.ராகவி, வந்தவாசி.

* ஒருபிடி பழைய சாதத்தை அரைத்து இட்லி மாவுடன் கலந்து தோசை வார்த்தால் கல்லில் ஒட்டாத அருமையான பேப்பர் ரோஸ்ட் தயார்.

* குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்காமல் இருந்தால் மாவைக் கரைக்கும்போது ஒரு சிறு சாஷே ஈனோ சேருங்கள். மாவு நன்கு புளிக்கும்.
இட்லியும் மிருதுவாக இருக்கும்.

– ஆர்.பிரகாசம், கோவிலூர்.

* தயிர், மோர் பாத்திரங்களை புளியைப் பயன்படுத்தி தேய்த்து வெயிலில் காய வைத்தால் சுத்தமாகவும் இருக்கும் தயிர் வாடையும் இருக்காது.

* பிரிஞ்சி இலைகளை லேசாகக் கசக்கி, கிச்சன் செல்ஃபில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் நெருங்காது.

*தாமிரப் பாத்திரங்களை தக்காளி, புளி கொண்டு தேய்த்தால், கறைகள் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

மணத்தக்காளி பலதானிய அடை!

மணத்தக்காளியை கீரைகளின் மாணிக்கம் என்றே சொல்லலாம். இக்கீரை மட்டுமின்றி, காய் மற்றும் பழங்களில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. மணத்தக்காளி காயை அப்படியே பச்சையாகவோ, காய வைத்து வற்றலாகவோ சமையலுக்குப் பயன்படுத்தலாம். மணத்தக்காளிக் கீரையை துவையல், பொரியல் மட்டுமல்லாமல் அடையாகவும் செய்து சாப்பிடலாம்.

தேவையானப் பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை – 1 கட்டு,
பலதானியக் கலவை மாவு – 2 கப்,
கேரட் – 1/2 கப்,
வெங்காயம் – 3,
பச்சை மிளகாய் – 4,
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் மணத்தக்காளிக் கீரையை சுத்தப்படுத்தி, பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கித் தனியாக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பலதானியக் கலவை மாவைச் சேர்த்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், மணத்தக்காளிக் கீரை, பச்சை மிளகாய், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். 15 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும். பின்னர் அடுப்பில் தோசைக் கல் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன அடைகளாகத் தட்டி இரண்டு பக்கங்களும் வேகவிடவும். தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரிசுப் பொருள் தயாரிக்கலாம்…விழாக்கால சீசனில் நல்ல வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)
Next post கருமுட்டை தானம்… சில சந்தேகங்கள்! (மருத்துவம்)