புலிகளின் தற்கொலைத் தாக்குதல் நடந்த காலி துறைமுக நகரில் ஊரடங்கு தளர்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
விடுதலைப் புலிகள் புதன்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்திய இலங்கையின் துறைமுக நகரான காலியில் போலீஸôர் ஊரடங்கு உத்தரவை வியாழக்கிழமை தளர்த்தினர். சிறுபான்மைத் தமிழர்கள் மீது சிங்களர்களின் இனவெறித் தாக்குதல் நடைபெறலாம் என்பதால் அத் துறைமுக நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கைத் தீவின் தென் கோடியில் உள்ள காலி துறைமுகத்தின் மீது, விடுதலைப் புலிகள் புதன்கிழமை அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தை அடுத்து, காலி நகரில் உள்ள கடை வீதியில் தமிழர்களின் கடைகளை சமூக விரோத கும்பல் சூறையாடியது. இதையடுத்து நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வியாழக்கிழமை இந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இருப்பினும் இன மோதல்கள் நடைபெறக் கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன என இலங்கை போலீஸôர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த புதன்கிழமை, புலிகளின் இரண்டு படகுகள் துறைமுகத்தின் மீது ராக்கெட் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாகவும், 3 தற்கொலைப் படை படகுகள் கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாகவும் புலிகள் ஆதரவு இணைய தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் 4 அல்லது 5 போராளிகள் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என போலீஸôர் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், காலி துறைமுக நகருக்குச் செல்ல வேண்டாம் என தனது குடிமக்களுக்கு இணைய தளத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா. முன்னதாக கொழும்பு நகரின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது.
புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்தாலும், இம்மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுகளில் இருதரப்பையும் பங்கேற்கச் செய்ய நார்வே மற்றும் ஜப்பானிய தூதர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
நார்வே சமாதானத் தூதர் ஜான் ஹேன்சன்-பாயர், இது தொடர்பாக கிளிநொச்சியில், புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனுடன் புதன்கிழமை பேச்சு நடத்தினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...