மனசுக்கு பிடித்தவரை தேடலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 23 Second

பெங்களூரை மையமாகக் கொண்டு இந்தியர்களால் இந்தியர்களுக்காக வடிவமைக்கப் பட்டதுதான் ஐசிஎல் செயலி. வாழ்கைத்துணையை தேர்ந்தெடுப்பதற்காக வழக்கமான மேட்ரிமோனி இணையதளங்கள் போல் இல்லாமல் வாடிக்கையாளர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையினை சரியான முறையில் தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 6 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இது குறித்து ஐசிஎல் செயலி நிறுவனர் மற்றும் தலைவர் ஜோசப் கூறுகையில். ‘‘பொதுவாக மேட்ரிமோனி இணையதளங்களில் பலதரப்பட்ட மணமகன் மற்றும் மணமகள் குறித்த விவரங்கள் இருக்கும்.

ஆனால் தனிப்பட்ட முறையில் தமிழர்களுக்காகவே மட்டுமே அமைக்கப்பட்டு இருப்பதுதான் ஐசிஎல் கீழ் செயல்படும் ‘அன்பே’ செயலி. உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அங்குள்ள தமிழர்கள் அவர்களுக்கு பொருத்தமான இணையை இந்த ஆப் மூலமாக தேர்வு செய்யலாம். இதனை நாங்க மலையாளத்திலும் ‘அரிக்கே’ என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறோம். இந்த ஆப் வெளிநாட்டில் உள்ள தமிழ் சமூகத்திற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் அந்தந்த மொழியின் அடைப்படையில் அமைக்கப்பட்டு இருப்பதால், அந்தந்த மொழியினர் உலகில் எங்கிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் துணையினை தேடி தங்களின் இல்லறத்தினை நல்லறமாக அமைத்துக் கொள்ள வழி வகுத்து தருகிறோம்.

உலகத்தில் 20 வயது முதல் 40 வயதிற்குள் உள்ள தமிழ் பேசுபவர்கள் இதில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பாதுகாப்பானது என்பதாலும், எளிதாக பயன்படுத்தக் கூடியது என்பதால் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சமூகம் பயன்படுத்தக்கூடிய வகையில் உயர் தரமான மேட்ரிமோனியல் செயலியாக அன்பே வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களை பெற திட்டமிட்டுள்ளோம். மணப்பெண்ணிற்கு ஒரு வரன் பிடித்து இருந்தால், அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தனிப்பட்ட முறையில் அவர் பற்றிய விவரங்களையும் பெற்றுக் கொள்வது மட்டுமில்லாமல் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசும் வசதியும் உள்ளது’’ என்றார் ஜோசப்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அது என்ன ஆன்டி ஆக்சிடன்ட்? (மருத்துவம்)
Next post பெண்கள் திறமைகளின் திறவுகோல் நான்!! (மகளிர் பக்கம்)