‘டிசைனிங்’… படைப்பாளர்களின் எதிர்காலம்! (மகளிர் பக்கம்)
கொரோனா பாதிப்புகள் ஏதோ ஓரளவுக்கு நீங்கியிருப்பதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அப்பாடா ஒரு வழியாக பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம் போல செயல்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என மாணவச் செல்வங்களிடம் ஆர்வம் பொங்கத் தொடங்கி உள்ளது. சினிமா விளம்பரங்கள் பொதுவாக ஆக்ரமிக்கப்படும் சுவர்களில் இப்போது கல்வி நிறுவனங்களின் விளம்பரங்கள் மாணவர்களை நோக்கி வலை வீசி வருகிறது. இதில் எதைத் தேர்வு செய்து படித்தால் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்பதை தீர்மானிக்கவே மாணவர்களுக்கு மாதக் கணக்கு பிடிக்கும் போல.
இதற்கு மத்தியில் பெற்ேறார்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரின் அட்வைஸ் மற்றும் ஆலோசனை. இதனால் பிடித்த படிப்பை படிக்க முடியாமல், பலர் திணறி வருகிறார்கள். படிப்பை தேர்வு செய்வதற்கே இத்தனை திண்டாட்டம் என்றால் இந்த படிப்பை படித்தால் நம்முடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்று மாணவர்கள் பயத்தில் உறைந்துள்ளனர். இனி அந்த பயம் அவசியமில்லை என்கிறார் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ராம்நாத். இவர்கள் மாணவர்களுக்கு பல வெபினார்களை நிகழ்த்தி அதன் மூலம் படிப்பு சார்ந்த சந்தேகங்களை போக்கி மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார்கள்.
‘‘கம்ப்யூட்டர் மற்றும் ஐடி துறைகளின் அசுர வளர்ச்சியால், சினிமா மற்றும் வணிக விளம்பரங்களில் கிராஃபிக்ஸ், மார்பிங்க் என பல்வேறு புதுமைகள் வெளியாகி, மக்களை மெய் சிலிர்க்கச் செய்தன. அதே வேகத்தில் கம்ப்யூட்டர் கேமிங் துறையும் விஸ்வரூபம் எடுத்தது. விளைவு கிராபிக்ஸ், டிசைனிங், மார்பிங்க் போன்ற மென்பொருள் தயாரிப்புகளுக்காக சாஃப்ட்வேர் இன்ஜினியர்களை பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலைக்கு நியமித்தன. அதன் அடிப்படையில் தற்போது டிசைனிங் துறையும் மாணவர்கள் மத்தியில் ஒரு மோாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
டிசைனிங் என்பது கம்ப்யூட்டரில் வடிவமைப்பது மட்டுமல்லாமல், அதை உற்பத்தியும் செய்ய வேண்டும். இதன் அத்தியாவசியத்தை அறிந்த மத்திய அரசு, வடிவமைத்தல் (டிசைனிங்) என்பதை ஒரு கல்வியாக 2007ம் ஆண்டு உருவாக்க திட்டமிட்டது. சில காரணங்களால் அந்த நோக்கம் 2010ம் ஆண்டு வரை தேக்க நிலையில் இருந்து அதன் பின்னர், டிசைனிங் குறித்த தீர்மானங்கள் மத்திய அரசால் முறைப்படி அறிவிக்கப்பட்டன. இதற்கு முக்கிய காரணம், உலக மயமாக்கல் ஒப்பந்தத்திற்குப் பின், சர்வதேச வியாபார சந்தையில் சீனா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் போட்டி போட முடியாமல் வளரும் நாடுகள் விழி பிதுங்கின. எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதனை மக்களிடம் கவர்ச்சிகரமாக எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கம் புரிந்ததன் விளைவு, பிரமிக்கத்தக்க விதத்தில் இந்தியாவிலும் இப்போது டிசைனிங் துறை கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது.
டிசைனிங் துறையில் இப்போது சீனா, கொரியாவை மிஞ்சி இந்தியா ராக்கெட் வேகம் பிடித்து வருகிறது. பிளஸ்2 முடித்த மாணவர்கள் பலரும் அனிமேஷன், 2டி, 3டி மாடலிங், கேமிங் சாஃப்ட்வேர் அல்லது வெப்சைட் டிசைனிங் கோர்ஸ் படிக்கலாம் என ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் உள்ளனர். ஆனால், இவற்றையும் தாண்டி பல டிசைனிங் பயிற்சிகளை எங்க கல்லூரியில் அறிமுகம் செய்துள்ளோம். முதல் படியாக, தற்போது நடத்தப்படும் வெபினார்களில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு டிசைன் தொழில் வாய்ப்புகள் மற்றும் அது சார்ந்த தொழில் வல்லுநர்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி ஒவ்ெவாரு பயிற்சி குறித்து விவரிக்கிறோம்.
வடிவமைப்பு சார்ந்த புரிதல் மாணவர்களுக்கு மிகவும் அவசியம். குறிப்பாக படைப்பாற்றல் சிந்தனை கொண்ட எந்த ஒரு மாணவனும், மாணவியும் இந்த துறையில் வளமான எதிர்காலத்தை பார்க்க முடியும்’’ என்றவர் தன்னுடைய கல்வி நிறுவனத்தில் உள்ள பயிற்சி மற்றும் அதன் செயல்முறை பற்றிவிவரித்தார். ‘‘டிசைனிங் துறையையே… கம்யூனிகேஷன், இன்டீரியர், ஃபேஷன், இன்டஸ்ட்ரியல் என நான்கு வகையாக பிரித்து கற்பிக்கப்படுகிறது.
நான்கு வருட கல்வி திட்டத்தில் அவர்கள் சொந்தமாக தொழில் செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு தொழிற்சாலை இப்படித்தான் அமைய வேண்டும். நட்சத்திர ஓட்டலில் இந்த வசதிகள் இருந்தால்தான் வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள். திரையரங்கு, கலையரங்கம் என்றால் அதற்கான தோற்றமைப்பு மாறுபட வேண்டும். வீட்டின் வரவேற்பரை, சமையலறை, படுக்கையறை என அனைத்தும் வாடிக்கையாளர்களின் மனசுக்கு இதமாக அமைக்க வேண்டும்.
இவை எல்லாம் உள்கட்டமைப்பு வடிவங்களில் அடங்கும். ஃபேஷன் துறை, ஒருவருக்கு ஆடை வடிவமைப்பது. தனிப்பட்ட நபருக்கு மட்டுமில்லாமல், சினிமா, சீரியல், நடனம் என அனைத்து துறையும் இதில் அடங்கும். இவர்கள் ஆடை வடிவமைப்பாளராக வலம் வரலாம். இது போல் ஒருவரின் விருப்ப துறையை தேர்வு செய்து படிக்கவும் மேலும் எதிர்காலத்தில் தனக்கென்று ஒரு தொழில் அமைத்துக் கொள்ளவும் டிசைனிங் துறை மாணவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றவரின் கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ பாடத்திட்டங்கள் உள்ளதாக தெரிவித்தார் ராம்நாத்.
Average Rating