கற்பழிப்பு: இஸ்ரேல் அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Read Time:2 Minute, 1 Second

Istrel.President.jpgஇஸ்ரேல் அதிபர் மோúஸ கத்சவ் மீது கூறப்பட்டுள்ள கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றப்பத்திரிகை இரண்டு வாரத்திற்குள் அட்டர்னி ஜெனரல் மெனாஹெம் மசூஸ் முன்னிலையில் தாக்கல் செய்யப்படும். அவர் அதிபருக்கு குற்றச்சாட்டைப் பதிவு செய்வது குறித்து இறுதி முடிவை எடுப்பார். கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களை அதிபர் செய்ததற்கான ஆதாரங்கள் பல வார கால புலனாய்வில் கிடைத்துள்ளதாக போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

தன்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கத்ஸவ் மறுப்பதோடு பதவியிலிருந்து அவர் இறங்கவும் மறுக்கிறார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை பதிவு செய்ய மாட்டார்கள் என அவர் நினைக்கிறார். ஏனெனில் உயர் தலைவர்கள், அதிகாரிகள் மீது போலீஸôர் கூறும் குற்றச்சாட்டுகள் மீது பொதுவாக மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டு அறிக்கையை அட்டர்னி ஜெனரல் முறைப்படி வழங்கினால் அதனபிறகு ஒருநொடி கூட அவர் அதிபராக பதவி வகிக்க முடியாது என அவரது வழக்கறிஞர் கூறினார். இஸ்ரேல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. எதிர்ப்பின் காரணமாக இதற்கு கத்ஸவ் தலைமை வகிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நோபல்பரிசு பெற்முகமது ïனூஸ் அரசியல்கட்சி தொடங்குகிறார்
Next post ஆஸி.யை தூசியாக்கினார் டைலர்: மே.இந்திய தீவுகள் கலக்கல் வெற்றி