இரண்டாவது ஹக்!! (மகளிர் பக்கம்)
மேரி எல்லோருக்கும் தேங்க்ஸ் சொல்லிக் கொண்டு வந்தாள். இன்னைக்கு அவளுக்கு ஃபேர்வெல் பார்ட்டி. நம்ப முடியவில்லை…மேரி இன்னும் நாலு நாட்கள் தான் எங்களோடு இருப்பாள் என்று. அவள் எங்கள் டீமில் ஜாயின்ட் பண்ணி அஞ்சி வருசமாச்சி. மேரி எல்லோருக்கும் பிடிச்ச பொண்ணு. அழகு, அறிவு.எல்லோருடனும் தேங்க்ஸ் சொல்லிக் கொண்டிருந்த மேரி, “தேங்க்ஸ் ராஜ்” என்று என்னைக் கட்டி அணைத்தாள். ஆஹா… இது என்ன புக்து ஃபீல்.. இது மாதிரி ஹக்க லைஃப்ல ஃபீல் பண்ணுனதே இல்ல. ஒரு ஹக்குக்கு இவ்வளவு சக்தி உண்டா? நான் அவள விரும்புறேனா? இல்ல அவ அழகுல மயங்குறேனா? அப்படியெல்லாம் இல்லயே… ஆனா புதுசா இருக்கு இந்த ஃபீல்.
செவ்வாய்க் கிழமை.
மேகங்கள் மலையை அணைத்தன. மழை பூமியை அணைத்தது. மழை எப்படி பூமியை அணைக்கும்? நனைக்கும்? வேணும்னா சொல்லலாம்… என்னடா இது காலங் காத்தால ஹக்கிங் கவிதையா தோணுது எனக்கு.. நைட் ஃபுல்லா மேரி ஹக் பண்ணுனத நினைச்சிட்டிருந்தா இப்படித்தான் ஆகும்.“குட் மார்னிங் ராஜ். என்ன சார் ஆபீசுக்கு டைமுக்கு வந்திருக்கீங்க?” யாரோ கேட்டார்கள். ஆமா நான் எப்டி ஆபீ சுக்கு டைமுக்கு வந்திருக்கிறேன்? எனக்கு என்னமோ ஆயிடுச்சி ஒண்ணும் புரியல.
மேகங்கள் மலையை அணைத்தன. அவள் என்னை அணைத்தாள். நிம்மதியா காஃபி கூட குடிக்க முடியல.. ரொம்ப டிஸ்டப் ஆகியிருக்கமோ?
டேவிட் சீட்டுக்கு அருகே சென்ற நான் “டேய் டேவிட்.. ஒரு ஹக் நம்மை மாத்துமா? ஒரு சின்ன ஹக் ஒரு செம ஃபீல் குடுக்குமா?” என்று கேட்டேன்.
அவன் மேகசின் படித்துக் கொண்டே, “என்ன மாமா லவ்வா?” என்று கேட்டான்.நான் டேவிட் கையிலிருந்த மேகசினை இழுத்தபடி “லவ் எல்லாம் ஒண்ணும் இல்ல. ஷட் அப்” என்றேன். “யாரடா ஹக் பண்ணுன? அத முதல்ல சொல்லு” என்று டேவிட் கேட்க, நான் கொஞ்சம் மகிழ்ச்சியோடு “மேரி” என்றேன்.
“ஹஹஹ…” உரக்கச் சிரித்த டேவிட் “மச்சான் டேய் அவ நேத்து கொறஞ்சது இருபது பேர ஹக் பண்ணியிருப்பாடா…” என்றான்.“உனக்கு புரியலடா” என்று சொல்லிவிட்டு யோசித்தேன்.“ஒண்ணு பண்ணு.. என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கணும்னா திரும்ப ஒரு தடவ அவள ஹக் பண்ணிப் பாரு. வேற வழியே இல்ல. ஆள விடு..” என்றபடி எழுந்து போனான் டேவிட்.கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மூளையில் ஏதோ ஐடியா தோன்றியது.
புதன் கிழமை.
மேகங்கள் மலையை அணைத்தன. இன்னைக்கு மேரியை அணைக்கப் போறேன். செக்கன்ட் டைம்.
‘மச்சான் நாங்க புரோகிராம் கிராக் பண்ணிட்டோம்… யே… ஹோய்… வாடா ஹக் பண்ணிக்கோடா…’ என்று மனதில் நினைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் கட்டி அணைக்கத் துவங்கினேன். தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த டேவிட்.. ‘ம்… இரண்டாவது ஹக் ஐடியாவாம்.. பார்ரா..’ என்று மனசுக்குள் நினைப்பது எனக்குக் கேட்டது.நான் டீம் மெம்பர்ஸை ஒவ்வொருவராக கட்டி அணைத்துக் கொண்டு மேரிக்கு அருகில் சென்றேன். அவள் கையை நீட்டி கங்கிராட்ஸ் என்று சொல்ல, வேறு வழி இல்லாமல் நான் “தேங்க்ஸ்” என்று கை குலுக்கினேன். அவள் கை குலுக்கிய பின் சாதாரணமாக விலகிச் சென்றாள். டேவிட்டுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. நான் தலையில் கையை வைத்தபடி என் சீட்டில் அமர்ந்தேன்.
டேவிட் என்னை நோக்கி வந்தான். “மச்சான் எனக்கெல்லாம் ஹக் கிடையாதா… ஹாஹா ஹாஹா… ஜுட் மச்சி வேற ஒரு வழி பண்ணுவோம்…” என்றான்.
வியாழக்கிழமை
“மச்சான் ராஜ் ஹக் மீடா. டுடே இஸ் ஜேன் 21. வேர்ல்ட் ஹக் டே. டியர் ஆல்…” என்று கத்திக் கொண்டே ஆபீசின் நடுப் பகுதியில் போய் நின்றான். “டுடே இஸ் வேர்ல்ட் ஹக் டே… லெட்ஸ் ஹக் ஈச் அதர்…” என்று கூச்சலிட்டான்..எல்லோரும் கட்டி அணைக்கத் தொடங்கினர். நானும் எல்லாரையும் அணைக்கத் துவங்கினேன். கேண்டீனில் டேவிட் காஃபியை குடித்தபடி “மச்சான் நீ மேக்சிமம் பேர கட்டிப் பிடிச்சிட்ட. அதுக்கு நீ சந்தோஷப் படணும்டா…” என்று சொன்னான்.
நான் டேவிட்டை முறைத்துக் கொண்டே “போடா…” என்றேன்.“மச்சான் எவ்ளோ பெரிய ஐடியா யோசிச்சிட்டு வந்தேன்.. நீ மேரிய ஹக் பண்ண முடியலன்னு என்னைக் கோவிச்சுக்ற… உனக்காக நானும் எல்லாரையும் ஹக் பண்ணினேன்.. ஒருத்தன் என்னடான்னா தொப்பையோட கட்டிப் பிடிக்கிறான். ஒருத்தன் என்னடான்னா சைட்ல கட்டிப் பிடிக்கிறான். ஒருத்தனுக்கும் சரியா கட்டிப் பிடிக்கவே தெரியல..”“கட்டித்தான் பிடிக்க முடியல அட்லிஸ்ட் மேரி கிட்ட நான் ஸ்பெஷல் ஹக் ஃபீல் பண்ணுனதப் பத்தி சொல்லப் போறேன்..” என்றேன்.
வெள்ளிக்கிழமை
மேகங்கள் மலையை அணைத்துச் சென்றது. மலை முகம் வாடி மேகம் மீண்டும் வர காத்திருந்தது. இன்னைக்கு மேரிகிட்ட நான் எப்படி ஃபீல் பண்ணினேங்கறத சொல்லிடணும் என்று யோசித்தபடி லிஃப்ட்டுக்குள் நுழைந்தேன். மேரி லிஃப்ட்டில் இருந்தாள். நான் பேச முயன்றேன். அப்போது குறுக்கே ஒரு கொலிக் புகுந்து, “ஹாய் மேரி குட் மார்னிங்…” என்று மேரியைக் கட்டி அணைத்தான். எனக்கு கடுப்பாக இருந்தது. லிப்ட் நின்றதும் நானும் மேரியும் வெளியே வந்தோம்.
நான் அவளிடம், “மேரி உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்…” என்றேன்.“ராஜ் சாரி. நான் ஆல்ரெடி லேட். ம்… நாளைக்குப் பேசலாம்.. நாளைக்கு தான் என்னோட லாஸ்ட் டே.” என்று சொல்லி விட்டு ஆபீசுக்குள் வேகமாக நடந்தாள். நடந்தவள் நின்று, “ராஜ் ரொம்ப அர்ஜென்டா?” என்று கேட்டாள்.“இல்ல மேரி.. பரவாயில்ல.. நாளைக்கு பேசிக்கலாம்..” என்று தயக்கமாகச் சொன்னேன்.வெறுப்பாக ஆபீஸ் போய் சீட்டில் உட்கார்ந்தேன். ‘ஒரு ஹக் இப்படி நம்மள ஒரு வாரமா அலைய விடுதே… ம்…’ என்று யோசனை ஓடியது.
சனிக் கிழமை
நானும் மேரியும் லிஃப்ட்டில் பார்த்து சிரித்துக் கொண்டோம். மேரி தன் கொலிக்கிடம் “ஆமாம் இன்னைக்கி தான் லாஸ்ட் டே. ஒரே ஃபீலிங்கா இருக்கு உங்களையெல்லாம் மிஸ் பண்ணுவேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது நான் மேரியை ஒரு முறை பார்த்தேன். மேரியும் பார்த்தாள். லிஃப்ட்டிலிருந்து வெளியேறி மேரி ஆபீஸ் உள்ளே சென்றாள். அன்று முழுவதும் மேரி பிசியாவே இருந்தாள்.ஆபீஸ் டைம் முடியும் நேரம் வந்தது. “பை ஆல். மிஸ் யூ ஆல்…” மேரி எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டாள். பிறகு என் அருகே வந்தாள். “ஹாய் ராஜ் சீ யூ பை.. இட் வாஸ் பிளஷர் ஒர்க்கிங் வித் யூ.. ஹேய் ராஜ் ஏதோ சொல்லணும்னு சொன்னே இல்ல சாரி சாரி மறந்தே போயிட்டேன்” என்றாள்.
“ம் ஆமா.. அன்னிக்கி நீ என்ன உன்னோட ஃபேர்வெல் பார்ட்டில ஹக் பண்ணினல்ல… ஐ ஃபெல்ட் சோ ஸ்பெஷல் என்னன்னு தெரியல.. இட் வாஸ் ட்ரூலி ஸ்பெஷல் ஃபீல்.. அதுக்கப்புறம் அது என்ன ஸ்பெஷல்ன்னு தெரிஞ்சிக்க.. நெறய வாட்டி உன்னை ஹக் பண்ண டிரை பண்ணேன்.. ஆனா முடியல.. அட்லீஸ்ட் உன் கிட்ட சொல்லணும்னு தோணிச்சி.. அதான் சொல்லிட்டேன்..” என்றேன்.“அடப்பாவி.. சொல்லவே இல்ல…” மேரி சந்தோஷத்தோடு சொன்னவள், “இது ஒரு பெரிய விஷயமா?” என்று
என்னைக் கட்டிப் பிடித்தாள் மேரி.
‘அதே செம ஃபீல்..’ என்று யோசனை வந்தது.“இப்ப ஓகேவா.. கீப் இன் டச்.. டியர்..” என்று சொல்லிவிட்டு, சிரித்தபடி சென்றாள் மேரி. சில சமயங்களில் நாம எதிர்பார்க்காத நேரத்துல கிடைக்கிற அன்போ சந்தோஷமோ நம்மள ஆட்கொள்ளுது. சரியான நேரத்துல மத்தவங்க கிட்டயிருந்து கிடைக்கிற சின்ன சந்தோஷம் கூட, பெரிய விஷயமாத் தெரியும். எனக்கு அவள பிடிச்சிருக்கான்னு தெரியல. ஆனா இந்த ரெண்டாவது ஹக்லயும் அதே ஸ்பெஷல் ஃபீல் இருந்திச்சி. மேகங்கள் மலையை மீண்டும் அணைத்தன.
Average Rating