கருப்பு பூஞ்சை… இன்னும் விழிப்புணர்வு தேவை!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 6 Second

கொரோனா நோய்‌ நுரையீரலை மட்டுமின்றி உடலின் பிற பாகங்களையும்‌, குறிப்பாக கண்களையும் பாதிக்கக்கூடும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில்உருவாக வேண்டும்‌. குறிப்பாக, தொற்று பாதிப்பிலிருந்து மீள்வதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்ட நோயாளிகள் மற்றும் ‌ஸ்டீராய்டு மருந்துகளை தற்போது எடுத்துக்கொள்ளும்‌ நோயாளிகள் இது குறித்த விழிப்புணர்வோடும்‌, எச்சரிக்கையோடும்இருப்பது அவசியம்‌.

கோவிட்பெருந்தொற்று, உலகமே எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சுகாதாரப்பிரச்னையாக இருந்து வருவது நாம்‌அனைவரும்அறிந்ததே. உலகின்பல நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்களை பாதித்து லட்சக்கணக்கில் உயிரிழப்பை விளைவித்து வரும் கொரோனா தொற்று கறுப்பு பூஞ்சை பாதிப்பையும் உண்டாக்கி வருகிறது. தீவிர கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த நபர்களில் சிலரை மியூகோர்மைசிஸ் என்ற பூஞ்சைத்தொற்று பாதிக்கிறது.

பொதுவாக மண்‌, தாவரங்கள்‌, உரம் மற்றும்அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில்‌ காணப் படும் பூஞ்சையால் மியூகோர்மைசிஸ் உருவாகிறது. இந்த பூஞ்சை எல்லோரது உடலுக்குள்ளும் சென்றாலும் அவை எல்லோரிடமும் தொற்றை ஏற்படுத்து வதில்லை. நமது உடலில்எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சைகள்நம்மைத் தாக்குகின்றன. வேறு நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும்ஆற்றல்உடலுக்குக்குறைகிறது. அந்த நேரத்தில் பூஞ்சைத்தொற்று ஏற்படுகிறது. காற்றில்உள்ள பூஞ்சைத் துகள்களை எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்கள் சுவாசிக்கும்போது அவை உடலுக்குள் புகுந்து சைனஸ்மற்றும் நுரையீரலை பாதிக்கிறது.

கறுப்பு பூஞ்சையின் ஆரம்ப கட்ட அறிகுறிகளாக கன்னம்‌, கண்‌ஆகிய பகுதிகளில்வலி ஏற்படும்‌. மூக்கு, வாய்‌பகுதியை முதலில்பாதிக்கும்இத்தொற்று, பாதித்த இடத்தில்உள்ள செல்களை அழித்து, அந்த இடத்தை கருப்பாக மாற்றி விடுகிறது. மூக்கிலிருந்து வடியும் திரவமும் கறுப்பாக இருப்பதால்‌, இது கருப்பு பூஞ்சை தொற்று என அழைக்கப்படுகிறது. கருப்பு பூஞ்சை நோய்‌, நோய்‌எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குறிப்பாக தீவிர கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நபர்களின்முகத்தில்மூக்கு, வாய்‌, கண்களின் கீழ்‌‌தோன்றுகிறது.

இதை உடனடியாக கவனித்து சிகிச்சையளிக்கவில்லையெனில் கண்களுக்குள் சென்று பார்வை இழப்பையும்‌ ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது. பாதித்த கண்ணை அகற்ற வேண்டிய நிலையும்‌ உருவாகலாம்‌. பூஞ்சை பாதித்த கண்ணை அகற்றவில்லை என்றால்இந்த பூஞ்சை மூளைக்கு பயணித்து உயிரிழப்பையும் ஏற்படுத்தும்என்பதும் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய செய்‌தியாகும்‌. அதிலும் கொரோனாவிலிருந்து குணமடைந்த சர்க்கரை (நீரிழிவு) நோயாளிகள்‌, அவர்களது உடலில்‌ சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது கறுப்பு பூஞ்சை அபாயத்திலிருந்து பாதுகாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்‌.

கொரோனா பாதிப்பின்போது உயிரை காப்பாற்றுவதற்காக அதிக ஆக்சிஜன்மற்றும்‌ ஸ்டீராய்டு மருந்துகள் தரப்படுகின்றன. இதனால்‌, அவர்களுடைய நோய்‌ எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதன்‌ காரணமாக தொற்றிலிருந்து குண மடைந்த பின்னர் இவர்கள் எளிதாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர்‌. கடுமையான தலைவலி, கண்களில்வலி, வீக்கம்‌, கண்கள்‌ சிவப்பு நிறமாக மாறுதல்‌, திடீரென்று பார்வைத்திறன் குறைதல்‌, மூக்கில்வலி, வாய்‌உள்ளிட்ட பகுதிகள்கறுப்பாக மாறுதல்போன்ற அறிகுறிகள் தோன்றுமானால்‌, உடனடியாக மருத்துவரிடம்‌ சிகிச்சை பெற வேண்டும்‌.

கருப்பு பூஞ்சை தோன்றிய ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளேயே மிக வேகமாக பரவிவிடும்‌ திறன்கொண்டது‌. மூக்கும்‌, கண்களும் மூளையுடன் தொடர்புள்ளவை என்பதால்‌, இத்தொற்று மூளையிலும்‌ வேகமாக பரவத்தொடங்கு கிறது. இரண்டு கண்களின் நரம்பும் இணைந்து மூளைக்கு செல்வதால்‌, இரண்டு கண்களிலும் பார்வை இழப்பை இது ஏற்படுத்தும்‌. மூளையிலும் பரவுவதால் ‌உயிருக்கே ஆபத்தாக முடியும்‌. எனவே, பூஞ்சை தொற்றின் அறிகுறி என ஐயம் வந்த உடனேயே மருத்துவரின்ஆலோசனையைப் பெறுவதும்‌, மூக்கிலிருந்து வரும் ‌திரவத்தை பரிசோதனை செய்வதும் அவசியம்‌. இதன் மூலம் கறுப்பு பூஞ்சைத்தொற்று உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளலாம்‌.

எம்‌.ஆர்‌.ஐ. ஸ்கேன் எடுத்தால்‌, மூளையில் எவ்வளவு தூரம் பரவி உள்ளது என்று தெரிந்து விடும்‌. அறுவை சிகிச்சை செய்து, பூஞ்சை முழுவதும்அகற்றி, பூஞ்சை தொற்றுக்கு எதிரான மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும்‌. பூஞ்சைத் தொற்றால்‌ பாதித்து, ஒரு முறை செயலிழந்த நரம்புகளை மீண்டும் செயல்பட வைக்க முடியாது. இத்தொற்று வந்து விட்டால்‌, உயிரைக்காப்பாற்றவே சிகிச்சை தரப்படுகிறது.

எனவே பூஞ்சைத்தொற்று அறி குறிகளாக இருக்குமோ என்ற சந்தேகம்வந்த உடனேயே மருத்துவ ஆலோசனையைப்பெற வேண்டும்‌. இதன்மூலம் கண்களின்பார்வைத் திறனை பாதுகாத்து‌ கொள்வதோடு விலைமதிப்பில்லா உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்‌. சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும்இது தொடர்பான அறிகுறிகள் கருப்பு பூஞ்சை தானா என்று உரிய பரிசோதனைகளின்‌ மூலம்‌ உறுதி செய்து உடனடியாக சிகிச்சையினை தொடங்கி நோயாளிகளை பாதுகாக்க வேண்டும்‌!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகை கண்ணீரில் மூழ்கடித்த ஒரு கரடியின் கதை ! (வீடியோ)
Next post குளிர்ச்சி தரும் சுரைக்காய்!! (மருத்துவம்)