ஆரோக்கிய நொறுக்குத்தீனி தாமரை விதை!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 5 Second

தாமரைப்பூவின் கொட்டைகள் மிகவும் உறுதியாக இருக்கும். அதை உடைத்தெடுத்தால் அதில் தாமரையின் விதை இருக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் தாமரை விதையினை பொரித்து பாப்கார்ன் போன்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். தாமரையின் விதை மிருதுவாக இருக்கும். சுவை என்று பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் ஒருவிதமான தனி வாசனை இருக்கும். வெறுமனே சாப்பிடலாம். அல்லது அவலில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அது போல இதிலும் செய்து சாப்பிடலாம். தால் மக்கானி (தாமரை விதை பாயசம்)வட இந்தியாவில் பிரபலம். தாமரை விதையினை க்ரேவி போலவும் செய்து சாப்பிடலாம்.

இதில் கலோரி குறைவாகவும், புரதம் அதிகமாகவும் உள்ள இதனை உப்பு சேர்க்காமல் நீரிழிவு நோயாளிகளும் ரத்த அழுத்தம் உடையவர்களும் மாலை நேரங்களில் நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது. எந்த பின்விளைவுகளும் இருக்காது. சிறுநீரகத்தின் திசுக்களை பாதுகாக்கும். எடையை குறைக்கும். ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் குறைக்கும். சீக்கிரம் வயதாவதை தடுக்கும்.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பினை அதிகப்படுத்தும். வட இந்தியாவில் பாலூட்டும் தாய்மார்களின் உணவில் இது கட்டாயம் இடம்பெறும். தால் மக்கானி என்று சொல்லும் இதனை அவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுர்வேதம் கூறும் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள்!! (மகளிர் பக்கம்)
Next post காபி நல்லதும் கெட்டதும்!! (மருத்துவம்)