ஹேப்பியா இருக்க… யோகா செய்யலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 34 Second

ஒருவரது உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் போது உச்சத்தை தொடும் அளவிற்கு பல வேலைகளை செய்ய முடிகிறது. இதில் ஏதாவது ஒன்று ஒத்துழைக்காமல் போனாலும் கூட இரண்டுமே சோர்வாகி, ஏதும் செய்ய முடியாமல் போய்விடும். அந்த மாதிரியான சூழல்தான் இந்த கொரோனா பொது முடக்கத்தில் இருந்ததாக, தங்களது அனுபவக் கதைகளை தன் சகாக்களுடன் பகிர்ந்து வருகின்றனர் பலர்.

அப்படி இருப்பவர்களுக்கு ‘யோகா கலையின் மூலம் அதிலிருந்து விடுவிக்க முடியும்’ என்று ஆன்லைனில் யோகா வகுப்பு எடுத்து வருகின்றனர் இரண்டு சுட்டிக் குழந்தைகள். யோகா வகுப்பு எடுப்பதோடு மட்டுமல்லாமல், இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை முதல்வரின் கொரோனா நிதிக்கு கொடுக்க முன் வந்துள்ளனர்.

“என் பெயர் அத்வைத்தா. ஆறாம் வகுப்பு படிக்கிறேன். இந்த கொரோனா காலத்தில் நிறைய பேர் ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க. அதுக்கு நானும் என் அக்கா அக்சத்தாவும் காலை 6.30லிருந்து 7.30 வரைக்கும் ஆன்லைனில் யோகா க்ளாஸ் எடுக்குறோம். நான் ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஜெயராமன் மாஸ்டர்கிட்ட யோகா கத்துட்டு இருக்கேன். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கிறோம். இப்பவரைக்கும் 45 நாட்களுக்கு மேல் க்ளாஸ் போயிட்டு இருக்கு. எங்களுக்கு கொடுக்குற பீஸ் முதல்வரின் கொரோனா நிதிக்கு கொடுக்கிறோம். கொரோனா முடுஞ்சாலும், நிறைய பேருக்கு உதவி செய்யவும் யோகா வகுப்பு எடுப்போம்” என்கிறார் மழலை மொழி மாறாமல்.

கோவை, சுந்தராபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அசோக், மஞ்சுளா தம்பதியின் மகள்களான அக்சத்தா, அத்வைத்தா யோகா கலையில் உலக சாதனை படைத்துள்ளனர். ‘‘ஒன்றாம் வகுப்பிலிருந்தே யோகா கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது 70க்கும் மேற்பட்ட ஆசனங்கள் தெரியும்” என்று கூறும் அக்சத்தா, சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளும், விருதுகளும் பெற்றிருக்கிறார்.

‘‘ஆசனங்கள் கற்றுக் கொள்ள கற்றுக் கொள்ள போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். அந்தமான் நிக்கோபார், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என பல இடங்களில் நடந்த சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு ‘உலக சாம்பியன்’ விருதுகள் பெற்றிருக்கிறேன். அதோடு ஃபீனிக்ஸ் புக்ஸ் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு, எனக்கு அச்சீவர் அவார்டு கொடுத்திருக்காங்க. இந்த கொரோனா நேரத்துல எல்லோரும் வீட்டிலேயே இருக்காங்க. பெருசா உடற்பயிற்சி, வாக்கிங் எல்லாம் பண்ண முடியாம இருக்காங்க.

உடல் ஆரோக்கியத்தோடு, மன ஆரோக்கியமும் சிலருக்கு பாதிக்கப்பட்டிருக்கு. அப்படி இருக்குறவங்களுக்கு யோகா மூலமா ஏதாவது பண்ணலாமானு வீட்டில் அப்பா, அம்மாகிட்ட கேட்டோம். அவங்களும் எங்கள் முயற்சிக்கு சம்பந்தம் சொல்ல, அதை எப்படி செய்யலாம்னு ஆலோசனை சொன்னாங்க. அதோடு எங்கள் விருப்பங்களுக்கும், எங்கள் தேவை என்ன என்பதை கேட்டு அதை பூர்த்தி செய்பவர்களாகவும் இருக்காங்க. எனவே ஸ்ட்ரெஸ்ல இருக்குறவங்களுக்கு நல்ல மெடிசனா இருக்கும் யோகாவ நானும் என் தங்கையும் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சோம்.

ஆரம்பத்துல கொஞ்சம் பேர்தான் வந்தாங்க. அவங்க மூலமா இப்ப நிறைய பேர் வர ஆரம்பிச்சிருக்காங்க. சின்ன பொண்ணுங்க தானே சொல்லிக் கொடுக்குறாங்கனு அலட்சியம் இல்லாமல், எங்களையும் ஒரு ஆசிரியராக ஏற்றுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மகிழ்ச்சியாக யோகா கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறோம். வருபவர்களும், ‘யோகா பண்ண ஆரம்பிச்சதுக்கப்பறம் ஒரு மாற்றத்தை ஃபீல் பண்றோம்’னு சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லோரையும் சந்தோஷமா வச்சுக்க முயற்சி பண்றோம்…” என்கிறார் அக்சத்தா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘ஹோம் மினிஸ்டர்’ யோகாசனங்கள்! !! (மகளிர் பக்கம்)
Next post ஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்!! (மருத்துவம்)