கர்ப்பகால மனச்சோர்வை நீக்கும் பிராணாயாமம்!! (மருத்துவம்)
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை தான் யோகக் கலை. அதில் உடற்பயிற்சியுடன் இணைந்து செய்வது யோகாசனம். மனதை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்த இந்த கலை மிகவும் பயன் தரும். குறிப்பாக பெண்கள்… இவர்கள் தங்கள் வயது மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அன்றாட யோகாசனம் செய்யலாம். இதனால் அவர்கள் உடல் வலிமையும் மன அமைதியும் கிடைப்பது மட்டுமில்லாமல், உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைக்க உதவும்.
பதின் வயது, தாய்மை, மாதவிடாய் மற்றும் முதிர் வயது என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களின் வாழ்க்கையில் யோகா முக்கியமான பங்கினை வகிக்கிறது. அதுவும் கர்ப்பகாலத்தில் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு சிறந்த நிவாரணம் யோகா. மனதை சமநிலையாக்கும், நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். மேலும் பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதோடு, மன அழுத்தம், உடல் வலிகளையும் ‘யோகாசனம்’ நீக்குவதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* கர்ப்பம் தரித்த முதல் 3 மாதங்களில் சாதாரண யோகாசனங்களை செய்யலாம். அதன் பிறகு கர்ப்பிணிகளுக்கு ஏற்ற ஆசனங்களை முறையாக கற்று பயிற்சி எடுக்கலாம்.
* தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனாசம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்றவை நல்ல ஆசனங்களை கர்ப்ப காலத்தில் செய்யலாம்.
* மகாமுத்திரா, குறிப்பாக, கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு நல்லது.
* ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண்களின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முதுகெலும்புக்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும்.
* ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்புத் தசைகள், நரம்புகள் வலிமை பெறும். இதனால் குழந்தை பிறப்பு சுலபமாகும்.
* ஆசனங்களால் கருவுக்கும் நல்லது. பிராணாயாமம் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்றது.
* ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, கழுத்துவலி இவற்றுக்கு பிராணாயமம் சிகிச்சை ஏற்றது. மேலும் அந்த பிரச்னையை குணமாக்கும் வல்லமை கொண்டது.
* ஆசனங்களை செய்யும் ேபாது சரியாக செய்ய வேண்டும். தவறாகவும் அதிக நேரம் அல்லது அதிக தடவை செய்யக் கூடாது.
* இரவு சாப்பாட்டுக்குப் பின் செய்யக் கூடாது.
* கர்ப்பகாலத்தில் இலகுவான, எளிய ஆசனங்களை செய்யலாம். குறிப்பாக ஆரம்ப நிலையில்.
* குரு இல்லாமல் ஆசனங்களை பயிலக் கூடாது.
* ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களுக்கு ஆசனங்கள் மிக நல்லது. பெண்களின் ஹார்மோன் கோளாறுகளை சீர் செய்ய உதவும்.
* கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல, குழந்தை பிறந்த பின்பும் ஆசனங்களை தொடரலாம். வயிறு திரும்பி இயல்பான நிலையை அடையும்.
* கர்ப்பிணி பெண்கள் சிரசாசனம், பஸ்சிமோத்தாசனம் இவற்றை செய்யக் கூடாது.
* சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தாலும் மருத்துவர் பரிந்துரைக்குப் பிறகு யோகாசனம் செய்யலாம். பயப்படத் தேவையில்லை.
Average Rating