இலங்கையின் தெற்கில் முதல் சம்பவம்: காலி துறைமுகம் மீது புலிகள் திடீர் தாக்குதல்; 17 பேர் சாவு
இலங்கைத் தீவின் தென் கோடியில் உள்ள காலி துறைமுகம் மீது, விடுதலைப் புலிகள் புதன்கிழமை அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இருதரப்பிலும் சேர்த்து 17 பேர் இறந்தனர். படகுகளில் வந்த 15 விடுதலைப் புலிகளும் 2 கடற்படை வீரர்களும் அங்கேயே இறந்தனர். 15 கடற்படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை அறிந்தவுடன், காலி நகரில் உள்ள கடை வீதியில் தமிழர்களின் கடைகளை சமூக விரோத கும்பல் சூறையாடியது. இதையடுத்து நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் 5 படகுகள் நிறைய வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டு, மீன்பிடிப் படகுகளைப் போல ஒப்பனை செய்து, இலங்கைக் கடற்படை போர்க்கப்பல்கள் நிற்கும் இடம் நோக்கி வேகமாக வந்தன. தொலைவிலேயே அவற்றை அடையாளம் கண்டுகொண்ட கடற்படையினர் பீரங்கிகளால் அவற்றை நோக்கிச் சுட்டனர்.
அதில் புலிகளின் 3 படகுகள் பற்றி எரிந்தும், உடைந்து சிதறியும் கடலில் மூழ்கின. மற்ற 2 படகுகள் வேகமாக வந்து, வெடித்துச் சிதறின. படகுகளில் வந்த 15 விடுதலைப் புலிகளும் 2 கடற்படை வீரர்களும் அங்கேயே இறந்தனர். 15 கடற்படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இக் காட்சியைத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள சாலையில் திரண்ட சிங்களர்கள் கண்டனர். உடனே நகருக்குள் ஓடி கலவரத்தில் ஈடுபட்டனர். காலி நகரில் தமிழர்களும் வசிக்கின்றனர். தமிழர்களின் நகைக்கடைகள் உள்ள வீதியில் 2 கடைகளை உடைத்து அவற்றில் இருந்தவற்றை சமூகவிரோதிகள் சூறையாடினர். போலீஸôர் வானில் சுட்டு அவர்களை கலைந்து ஓடவைத்தனர். பிறகு நகரில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.
இலங்கையில் கொழும்பு, கண்டி ஆகியவற்றுக்கு அடுத்த 3-வது பெரிய நகரம் காலி. துறைமுக நகரமான இது இலங்கையின் தென் கோடியில் உள்ளது. உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான இது, பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் விமானப்படை தாக்குதல்: விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதத்தில், இலங்கையின் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைச்சேனை என்ற இடத்தில் விமானப்படையின் 2 விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. அதில் ஒரு பெண் உயிரிழந்தார், 2 பேர் காயம் அடைந்தனர்.
பேச்சு நடக்குமா? சுவிட்சர்லாந்து நகரில் அக்டோபர் 28, 29 ஆகிய இரு தினங்களில் சமரச பேச்சு மீண்டும் தொடங்கப்பட உள்ள நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி பேச்சு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...