உடற்பயிற்சியை எப்படி தொடங்குவது? (மருத்துவம்)

Read Time:4 Minute, 52 Second

எல்லோரும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துகிறார்கள். நமக்கும் ஆசைதான். ஆனால், உடற்பயிற்சியை எப்படி ஆரம்பிப்பது? நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில்தான் முடியும். அப்படியென்றால் உடற்பயிற்சியை எப்படித்தான் ஆரம்பிப்பது? சிறிய தொடக்கம் பெரும் நன்மைசீரான மூச்சில் இருந்து உடற்பயிற்சிக்கான மூச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள6 முதல் 8 வாரங்கள் தேவை. அப்போது மெதுவாக வாக்கிங், வேகநடை, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என உங்கள் வயதுக்கேற்ப தொடங்க வேண்டும்.

உடற்பயிற்சிக்கான சற்று அதிக பளுவை தாங்கக்கூடிய இதய வலிமை, நுரையீரல் வலிமை, எலும்புகள் இணையுமிடங்களின் வலிமை, தசைகளின் வலிமை, மன வலிமை என அனைத்தையும் படிப் படியாக மூச்சுத் திறமையால் கையாள தொடங்க வேண்டும். 20 வயது இளைஞர் உடற்பயிற்சியில் ஈடு
படுவதாக வைத்துக் கொள்வோம். அவரது உடல் வலிமை,இளமையின் காரணமாக மூச்சுத் திறனை மேம்படுத்திய பிறகு வேக ஓட்டம், கடின உடற்பயிற்சி செய்யும்போது, அந்த இளைஞர் அதிகமான இதயத் துடிப்பை தாங்கக்கூடிய வலிமையைப் பெறுவார்.

அதே நேரம் 70 வயதுடைய வயோதிகர் உடற்பயிற்சி செய்யும் போது, மிக அதிக இதயத் துடிப்பு உண்டாவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் மெதுவான, சிறிய அளவிலான தொடக்கம் Progressive Resistance Exercise Principles கடைப்பிடிக்க வேண்டி யது மிகவும் அவசியம். இதன் மூலமாக உடலின் தசை மண்டலங்கள், ரத்த ஓட்டம், மூச்சுத் திறன் ஆகியவை அடுக்கடுக்காக மென்மேலும் வலிமை பெறும்.

சிறு வலிகள், காயங்கள் ஏற்படும் நேரங்களில் அவற் றை அவ்வப் போதே சரி செய் யக்கூடிய சக்தியையும் நமது உடல் அடையும். ஒவ்வோர் இதயத்துடிப்புக்கும் அதிகளவு ரத்தத்தை இதயத்துக்கு அனுப்பி, நமது இதயத்தை இரும்பு போல வலிமையடையச் செய்யும். முதல் 8 வாரங்கள் உடற்பயிற்சியை மெதுவாக, சிறியதாகத் தொடங்கி, சீராகக் கூட்டி ஆனால், தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் தொடர்வது மிக அவசியம்.

இல்லாவிட்டால் நீங்கள் பட்ட சிரமம், உங்கள் பலம் அனைத்தும் பலவீனமாக வாய்ப்புண்டு. தொடர் ந்து உடற்பயிற்சி செய்வதால் உடல், மன வலிமை கூடிக்கொண்டே இருப்பது உண்மை. வாரம் 4 அல்லது 5 நாட்கள், அதில் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் தொடர் உடற்பயிற்சி மிகவும் அற்புதமான தொடக்கமாகும். 6,8 வாரங்களில் படிப் படியான முன்னேற்றத்துக்குப் பிறகு தங்களுக்கு கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, நீந்தல், சிறகுப்பந்து, டென்னிஸ், ஓட்டப்பந்தயம், குஸ்தி, பாக்ஸிங், பளு தூக்குதல், நடனப் பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாளர்களின் துணையோடு கவனம் செலுத்த வேண்டும்.

உடலுக்கு உகந்தது எது?

ஒன்றுமே செய்யாமல் சோம்பேறியாக இருப்பது, உடலை வாட்டி வதைத்து கொள்வது இவ்விரண்டையும் நம் உடல் அறவே வெறுக்கிறது. அப்படி என்றால் உடலுக்கு உகந்ததுதான் என்ன? நம் உடல் சில நேரங்களில் சிறிய, பளு குறைந்த வேலைகளையும் சில நேரங்களில் சற்று அதிக பளு உடைய வேலைகளையும் மாறி மாறிச் செய்து, சற்று ஓய்வுக்குப் பிறகு மீண்டும் செய்வதை உடல் மிகவும் ரசித்து விரும்புகிறது. ஆகவே உடலை நேசித்து அதன் அன்பைப் பெறுங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டேஷ் டயட்!! (மருத்துவம்)
Next post என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்!! (மகளிர் பக்கம்)