சிறுகீரை அல்ல… சிறப்பான கீரை!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 30 Second

நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது.

* சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையை மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை சிறுகீரை சமைத்து சாப்பிடுவது நல்லது.

* வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் சிறுகீரையில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிறுகீரை சாப்பிடுவதால் பல நன்மைகள் பெறலாம்.

* சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை சிறுகீரை அற்புதமாக குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் தீரவும், குடல் சுத்திகரிப்பானாகவும் சிறுகீரை சிறப்பாக செயல்படுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது சிறுகீரை ஆகும்.

* ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். சிறுகீரையை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

* இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. சிறுகீரை ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

* கண்பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். சிறுகீரையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

* உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறுகீரை கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தொற்று ஏற்படுவதை தடுப்பதுடன் காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது சிறுகீரை. உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். சிறுகீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாக்கும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு காக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எளிது எளிது வாசக்டமி எளிது!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வாழவைக்கும் வல்லாரை!! (மருத்துவம்)