இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி: ரூ.70 ஆயிரம் கோடி சொத்துகள்

Read Time:1 Minute, 28 Second

ambani.jpgஇந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் வரிசையில் முதலிடத்தை முகேஷ் அம்பானி பெறுகிறார். 2-வது இடத்தை விப்ரோ நிறுவனத் தலைவர் ஆஸிம் பிரேம்ஜி வகிக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட், ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஐ.பி.சி.எல், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிட் போன்ற நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து நடத்தி வருகிறார்.

2-வது இடம் பெற்றுள்ள பிரேம்ஜியின் சொத்து மதிப்பு ரூ.64 ஆயிரத்து 700 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, இந்திய பணக்காரர்கள் வரிசையில் 3-ம் இடத்தைப் பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.61 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் ரிசோர்சஸ் அண்ட் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து இவர் நடத்தி வருகிறார்.

ambani.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராதிகாவுக்கு ஜெயலலிதா திடீர் ‘ஆப்பு’ – ராதிகாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா
Next post காலி துறைமுக கடற்படைத்தளத்தின் மீது கடற்புலிகள் தாக்குதல்