அவள் கழிவறை!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 29 Second

நகர்ப்புறங்களில் வாழும் குடிசை வாழ் பெண்களுக்கு கழிவறை என்பது எட்டாக்கனியாகவே இன்றும் உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் தான் இந்த நிலை என நினைத்து விடாதீர்கள். மகாராஷ்டிராவின் புனேயிலும் பொதுக்கழிவறை பெண்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதாக இருந்து வந்தது. பிங்க் கழிவறை எனப்படும் ‘டி சுவாச் தக்ருகா’ பொதுக்கழிவறை அறிமுகம் ஆகும் வரை. இப்போது அந்த பிங்க் நிற பஸ்சை கண்டதும் புனே ஏழை பெண்கள் முகம் சுழிப்பதில்லை. இதற்காக தானே காத்திருந்தேன் என்பது போல் அதை வரவேற்கின்றனர்.

மொபைல் ஏ.டி.எம் போன்ற இந்த மொபைல் பஸ் தான் இப்போது புனே ஏழை பெண்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இங்குள்ள சாம்பஜி கார்டன் பகுதியில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும். அப்போது அங்கு குவியும் பெண்களுக்கும் இந்த பஸ் கழிவறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கண்டம் செய்யப்பட்ட மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் தான் இவ்வாறு கழிவறைகளாக உருவெடுத்துள்ளது. இப்போதெல்லாம் பெண்கள் 5 ரூபாய் கொடுத்தோமா நிம்மதியா காலைக் கடனை கழித்தோமா என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

மொபைல் பஸ்சில் 4 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3 இந்திய கழிவறை ஒன்று வெஸ்டர்ன் ஸ்டைல். முகம் பார்க்க கண்ணாடி, பொழுது போக்க தொலைக்காட்சி, முகத்தை கழுவ 2 வாஷ் பேஷன்கள் என களை கட்டுகிறது பஸ். ‘அவள் கழிவறை’ என அடைமொழியிட்டே இந்த பஸ் கழிவறை அழைக்கப்படுகிறது. 2016ல் பெண்களுக்கான கழிவறை அமைப்பது தொடர்பாக புதுமையான கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு விடுத்தது புனே மாநகராட்சி. அப்போது சானிட்டரி வேர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ராஜிவ் கேர் என்ற வியாபாரி ஷானவிர் வாடா பகுதியில் இதை தொடங்கினார். தற்போது புனே நகரில் சாம்பஜி கார்டன் உள்பட 13 இடங்களில் இந்த கழிவறை பஸ்களின் ஆதிக்கம் உள்ளது.

இந்த பஸ்சில் நாப்கின்களும் விற்பனை செய்யப்படுவதால் அந்த 3 நாட்கள் பற்றி கவலையில்லை. தவிர மினி டிபன் கடையும் இந்த பஸ்சிலேயே செயல் படுகிறது. சாம்பஜி கார்டன் பகுதியில் தினசரி 250க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பஸ்சை பயன்படுத்துகின்றனர். விரைவில் பெண்களுக்கான பியூட்டி பார்லரை இந்த பஸ்சில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெங்குமரஹாடாவும் டாக்டர் ஜெயமோகனும்!! (மகளிர் பக்கம்)
Next post முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)