இதயம் ஜாக்கிரதை!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 44 Second

என்னுடைய நண்பர் திடீரென்று கடந்த வாரம் இறந்துவிட்டார். டாக்டர் எங்களிடம் ஹார்ட் ஃபெயிலியர் காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்தார். ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படக் காரணம் என்ன? இதற்குk; மாரடைப்புக்கும் சம்மந்தம் உள்ளதா? அல்லது வேறு ஏதும் காரணங்களால் ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படுமா? விளக்கம் அளியுங்கள். சங்கர், திருச்சி

“மாரடைப்பு பெரும்பாலும் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பு காரணமாக ஏற்படும். மாரடைப்பு தீவிரமாக ஏற்பட்டால் அது உயிருக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அது இதயத்தை பலவீனப்படுத்தும். இதுவே பல முறை ஏற்படும் போது, இருதயம் மேலும் பலவீனமடையும் வாய்ப்பு அதிகம். காரணம் மாரடைப்பு ஏற்படும் போது அது நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் இருதயத்தின் தசைகளை வலுவிழக்க செய்யும். இதனால் இருதயம் ஒரு நாள் தன் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்திவிடும். அதைத்தான் மருத்துவ மொழியில் ஹார்ட் ஃபெயிலியர் என்று குறிப்பிடுவார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஹார்ட் ஃபெயிலியர் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் மாரடைப்பு. நம்முடைய இருதயம் 24/7 இயங்கிக் கொண்டு இருக்கிறது. தூங்கும் நேரம் உட்பட. இதன் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை செலுத்துவது மற்றும் வெளியேற்றுவது தான். இது மெல்லிய தசைகளால் பிணைக்கப்பட்டு இருக்கிறது. அதன் தசைகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும், அது நம்முடைய மொத்த மெகானிசத்தை பாதிக்கும். அதனால் நம்முடைய இருதயம் எப்போதும், துடிதுதடிப்பாக செயல்பட நாம் அதை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று சொல்கிறார் டாக்டர் ரவிக்குமார், மாரடைப்பு மட்டுமே ஹார்ட் ஃபெயிலியர் ஏற்பட காரணமில்லை என்கிறார்.

“மாரடைப்பு ஒரு காரணம் என்றாலும், நாம் அதை கவனிக்காமல் இருந்தால் இருதயம் அதிக அளவில் பாதிப்படையும் வாய்ப்புள்ளது. அதாவது ஒருவரின் இருதயம் 50% வலுவிழந்து இருந்தால், ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மாரடைப்பு மட்டும் இல்லாமல் இருதயம் சார்ந்த நோய்கள் இருந்தாலோ, வைரஸ் தாக்குதல், மரபணு காரணமாகவும் ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில சமயம் எந்த காரணமே இல்லாமலும் கூட ஹார்ட் ஃபெயிலியர் ஆகும். அதை கார்டியோ மயோபதின்னு சொல்வாங்க. சில சமயம் பிறப்பிலேயே பலவீனமாக இதயத்துடன் குழந்தை பிறப்பதுண்டு.

ஏன் பிரசவம் தரித்த தாய்மாருக்கு கூட ஹார்ட் ஃபெயிலியர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் பிரசவ காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றமாக கூட இருக்கலாம். இவை தவிர அழையா விருந்தாளிகளான மது பழக்கம், நீரிழிவு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கும் ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படலாம். பொதுவாக இருதய பிரச்னையை எ.பி.சி.டி என நான்கு கட்டமாக பிரிக்கலாம். பி மற்றும் சி நிலையில் இருப்பவர்கள் மருந்து மாத்திரை உண்டு வாழலாம். ஆனால் அதுவே எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. ஒரு முறை இருதய பிரச்னை ஏற்பட்டால்.

அதை ஆண்டுக்கு ஒரு முறை பார்த்து அதன் செயல்பாட்டினை அறிந்துக் கொள்வது அவசியம். ‘இ.எஃப் (எஜெக்‌ஷன் ஃபிராக்‌ஷன்) மூலமாகவும் நம்முடைய இருதயத்தில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறியலாம். அதாவது உங்கள் உடலுக்கு எவ்வளவு ரத்தம் செலுத்தப்படுகிறது. இருதயம் எ,பி,சிடினு பல ஸ்டேஜ் இருக்கு. பி & சி ஸ்டேஜ் என்றால் அதற்கு மருந்துள்ளது. இதன் மூலம் மேல் கொஞ்சம் கொஞ்சமாக இருதயத்தை பலமாக்க முடியும். ஒருவரின் இருதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய கருவி உள்ளது. இ.எஃப் (எஜெக்‌ஷன் ஃபிராக்‌ஷன்) என அழைக்கப்படும் இந்த கருவி மூலம் உங்கள் இருதயம் எவ்வளவு ரத்தம் உள்செலுத்துகிறது, வெளியேற்றுகிறது.

இருதயத்தில் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து துல்லியமாக தெரிந்துக் கொள்ள முடியும். . சாதாரணமாக இருப்பவர்களுக்கு இதன் மதிப்பு 60% மேல் இருக்கும். ஒரு வேளை 30 & 50% வரை இருந்தால் மருந்து மாத்திரை கொண்டு கொஞ்சம் பலப்படுத்தலாம். சில சமயம் வைரல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் இருதயம் இந்த மருந்து மாத்திரைகளால் 100% சரியாகும் என்று சொல்லிட முடியாது. சிலருக்கு இருதயம் பெரிசாகும். உடலில் தண்ணிர் அதிகம் சேரும். உடல் பருமன் காரணத்தால் அவர்களால், நடக்க முடியாது. இது போன்ற பிரச்னைகளாலும் ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படும்.

இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் 70 & 80 லட்ச மக்கள் இருதய நோயால் பாதிப்படைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை வருடா வருடம் 30 ஆயிரம் அதிகரித்து வருவதாக அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. இந்த பிரச்னையை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம். பி.என்.பி (பிரைன் நான்ட்ரியுரிடிக் பெப்லைட்) என்ற ஆய்வின் மூலமாக உங்க இருதயம் குறித்து அனைத்து விவரங்களையும் சேகரிக்க முடியும். இதன் அளவு அதிகமாக இருந்தால், கண்டிப்பாக ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றவர் ஹார்ட் ஃபெயிலியர் ஏற்பட வயது வரம்பில்லை என்றார்.

‘‘இது வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை யாருக்கு வேண்டும் என்றாலும் ஏற்படும். எது தான் இருந்தாலும் ஒவ்வொருவரும் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். மேலும் ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படும் போது சில அறிகுறிகள் தென்படும். மூச்சு விட சிரமமாக இருக்கும். இருதயம் பெரியதாகும். உடலில் வீக்கம் ஏற்படும். இரவு நேரத்தில் இருமல் ஏற்படும். இருதயம் துடிப்பில் மாறுபடும். இதில் ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டால் உடனடியாக டாக்டரை பார்ப்பது நல்லது.

என்னைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் உணவுப் பழக்கத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார் டாக்டர் ரவிக்குமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை!! (மருத்துவம்)
Next post எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி! (அவ்வப்போது கிளாமர்)