சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு என ஐக்கிய நாட்டு அறிக்கை கூறுகிறது

Read Time:2 Minute, 1 Second

unicef-1.jpgஇலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் கட்டவிழ்ந்து விடப்படுவதாக ஐக்கிய நாடுகள் புதிய அறிக்கை கூறுகிறது. இலங்கையைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் இல்லங்களிலும், பாடசாலைகளிலும், வீதிகளிளும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் போதும் வன்முறை அபாயத்தை எதிர்கொள்வதாக ஐ.நா.அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புறக்கணிப்பு, துஸ்பிரயோகம் ஆகியவையும் வன்முறையில் வடிவங்கள் எனவும், தெற்காசிய பிராந்தியத்தில் பாலியல் துஸைபிரயோகம் பரந்த அளவில் காணப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

நாட்டின் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சமீபத்திய காலப்பகுதியில் பல சிறுவர்கள், சிறுமியர்கள் அபாயத்தையும், சீர்குலைவையும் எதிர்க்கொள்ள நேர்ந்திருக்கும் சமயத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த உலகளாவிய ஆய்வறிக்கையானது சிறுவர்கள் பற்றிய நியுணர்களுடன், அரசுகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா. முகவராண்மைகள் ஆகியவற்றுடனும், அவை மாத்திரமல்லாமல் சிறுவர்கள், இளைய தலைமுறையினர் ஆகியோருடனும் நடத்தப்பட்ட தேசிய மற்றும் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களின்போது பெறப்பட்ட உள்ளீடுகளைப் பயன்படுத்தி தொகுக்கப்பட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இத்தாலியில் ரெயில்கள் மோதலில் 2 பேர் பலி; 60 பேர் காயம்
Next post சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்